ஹூண்டாய் கிரெட்டா மற்றும் அல்காஸர் அட்வென்ச்சர் எடிஷன்கள் அறிமுகம், விலை ரூ.15.17 லட்சத்திலிருந்து தொடங்குகிறது
published on ஆகஸ்ட் 08, 2023 03:51 pm by rohit for ஹூண்டாய் கிரெட்டா 2020-2024
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
இரண்டு கார்களும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் எக்ஸ்டரிலிருந்து புதிய ‘ரேஞ்சர் காக்கி’ பெயிண்ட் ஆப்ஷனை பெறுகின்றன
-
இந்த இரண்டு எஸ்யூவி -களின் ஸ்பெஷல் எடிசன் ரூ.36,000 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-
இது கிரெட்டாவின் மிட்-ஸ்பெக் மற்றும் டாப்-ஸ்பெக் முறையே SX மற்றும் SX(O) ட்ரிம்களை அடிப்படையாகக் கொண்டது.
-
ஹூண்டாயின், அல்கஸார் கார் மிட்-ஸ்பெக் பிளாட்டினம் மற்றும் டாப்-ஸ்பெக் சிக்னேச்சர் (O) வேரியன்ட்களில் கிடைக்கிறது.
-
விலை ரூ.15.17 லட்சத்தில் இருந்து ரூ.21.24 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் புது டெல்லி) வரை இருக்கும்.
-
காஸ்மெட்டிக் திருத்தங்களில் கருப்பு நிற ORVM மற்றும் லோகோக்கள் மற்றும் 'அட்வென்ச்சர்' பேட்ஜ்கள் ஆகியவை அடங்கும்.
-
உட்புற மாற்றங்களில் பச்சை நிற இன்செர்டுகளுடன் கூடிய முழு கருப்பு வண்ண கேபின் மற்றும் புதிய இருக்கை ஆகியவை அடங்கும்.
-
எக்ஸ்டரிலிருந்து இரட்டை கேமரா டாஷ்கேம் அம்சம் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது.
-
கிரெட்டாவின் ஸ்பெஷல் எடிசன் கார் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களிலும், அல்கஸார் கார் பெட்ரோல் மற்றும் டீசல் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.
ஹூண்டாய் கிரெட்டா மற்றும் ஹூண்டாய் அல்கஸார் ஆகிய இரண்டு கார்களுக்கும் புதிய 'அட்வென்ச்சர் எடிஷன்' வழங்கப்பட்டுள்ளது. கிரெட்டா காருக்கான இரண்டாவது ஸ்பெஷல் எடிஷன் இதுவாக இருந்தாலும், அல்கஸாருக்கு இதுபோன்ற சிறப்பு எடிஷன் கிடைப்பது இதுவே முதல் முறையாகும். கிரெட்டாவின் அட்வென்ச்சர் எடிஷன் பெட்ரோல் பவர்டிரெயினுடன் மட்டுமே கிடைக்கிறது, அதே நேரத்தில் 3 வரிசை ஹூண்டாய் எஸ்யூவி -யை டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்குகிறது.
வேரியன்ட் வாரியான விலைகள்
|
|
|
|
|
|
|
|
SX MT |
|
|
|
SX(O) CVT |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
-
ஹூண்டாய் நிறுவனம் அல்காசாரின் டாப்-ஸ்பெக் சிக்னேச்சர் (O) டிரிம்மை 6 சீட்டர் மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களுடன் ஸ்பெஷல் எடிஷனுடன் வழங்குகிறது, இது 7 சீட்டர் பதிப்பின் அதே விலையில் வாங்கப்படலாம்.
-
இரண்டு எஸ்யூவிகளின் புதிய ‘அட்வென்ச்சர் எடிஷன்’ போர்டு முழுவதும் ரூ.36,000 கூடுதல் விலையுடன் வருகின்றன..
வித்தியாசமாக என்ன உள்ளது?
ஸ்பெஷல் எடிஷன் மூலம், இரண்டு மாடல்களிலும் எக்ஸ்டரின் 'ரேஞ்சர் காக்கி' ஷேடை அறிமுகப்படுத்தியுள்ளது. கிரெட்டா மற்றும் அல்கஸாரின் அட்வென்ச்சர் பதிப்புகள் இரண்டும் பிளாக் அவுட் கிரில் மற்றும் ஹூண்டாய் லோகோக்கள் (முன்புறம் மற்றும் பின்புறத்தில்), சிவப்பு பிரேக் காலிபர்களுடன் கூடிய பிளாக் அலாய் வீல்கள் (கிரெட்டாவில் 17 இன்ச் மற்றும் அல்கஸாரில் 18 இன்ச்), பிளாக் ORVMs மற்றும் பிளாக் டோர் கிளாடிங் போன்ற சில பொதுவான ஒப்பனை திருத்தங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. முன்பக்க ஃபென்டர்களில் 'அட்வென்ச்சர்' பேட்ஜ்கள், கருப்பு ரூஃப் ரெயில்கள் மற்றும் பிளாக் ஸ்கிட் பிளேட்டுகள் ஆகியவையும் பிற வெளியே கொடுக்கப்பட்டுள்ள புதுப்பிப்புகளில் அடங்கும்.
கிரெட்டா அட்வென்ச்சர் எடிஷன் -அபிஸ் பிளாக், டைட்டன் கிரே, அட்லஸ் ஒயிட் மற்றும் ரேஞ்சர் காக்கி ஆகிய நான்கு மோனோடோன் வண்ணங்களிலும், கடைசி இரண்டு ஷேடுகளுடன் ஆப்ஷனல் பிளாக் ரூஃப் -உடனும் கிடைக்கிறது. மறுபுறம், அல்கஸாரின் சிறப்பு பதிப்பு, கிரெட்டாவின் அதே மோனோடோன் வண்ண ஆப்ஷன்களில் வழங்கப்படுகிறது, இருப்பினும் அனைத்து வண்ணங்களிலும் பிளாக் ரூஃப் ஆப்ஷனுடன் வரும்.
மேலும் படிக்கவும்: 2023 ஜூலை மாதத்தில் விற்பனையான டாப் 10 கார்கள்
கேபினுக்கு கருப்பு நிறமும் கிடைக்கிறது
இந்த இரண்டு எஸ்யூவி களும் எக்ஸ்டரை ஒத்த சேஜ் கிரீன் இன்செர்டுகளுடன் அனைத்து பிளாக் கேபின் தீம் உடன் வருகின்றன. ஹூண்டாய் நிறுவனம் அவற்றுக்கு புதிய பிளாக் மற்றும் பச்சை நிற இருக்கையை வழங்கியுள்ளது, இது இல்லுஸ்ட்ரேஷன் ஆஃப் மவுன்டெய்ன்ஸ்" என்று அழைக்கப்படுகிறது. மற்ற உட்புற திருத்தங்கள் 3D ஃப்ளோர் மேட்டுகள் மற்றும் மெட்டல் பெடல்கள் ஆகும்.
அம்சங்களை பொறுத்தவரை, இரண்டு ஹூண்டாய் எஸ்யூவிகளின் உபகரணங்கள் பட்டியலில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள ஒரே அம்சம் டூயல் கேமரா டாஷ்கேம் ஆகும். இது தவிர, கிரெட்டா அட்வென்ச்சர் பதிப்பில் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம், வயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன்புறஇருக்கைகள் உள்ளிட்டற்றை பெறுகின்றன. இதன் பாதுகாப்பு கிட்டில் ஆறு ஏர்பேக்குகள்,வெஹிகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் (VSM), ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் ரிவர்சிங் கேமரா ஆகியவை அடங்கும்.
அல்கஸாரின் ஸ்பெஷல் எடிஷனின், அதன் டாப் ஸ்பெசிஃபிகேசனில், 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் கிரெட்டாவை விட 360 டிகிரி கேமராவை பெறுகிறது.
வழங்கப்படும் இன்ஜின்-கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள்
ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி, கிரெட்டாவின் ஸ்பெஷல் எடிஷன் அதன் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அல்கஸார் பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெயின்களுடன் கிடைக்கும். அதன் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்:
|
|
|
|
|
115PS |
160PS |
116PS |
|
144Nm |
253Nm |
250Nm |
|
|
|
|
மேலும் விவரம் அறிந்து கொள்ளுங்கள்: ஹூண்டாய் எக்ஸ்டர் vs டாடா பன்ச்: படங்களில் ஒப்பீடு
போட்டியாளர்கள்
ஹூண்டாய் கிரெட்டா அட்வென்ச்சர் எடிஷனின் நேரடி போட்டியாளர்கள் ஸ்கோடா குஷாக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுனின் மேட் எடிஷன்களாக இருக்கும், அதே நேரத்தில் அல்கஸாரின் ஸ்பெஷல் எடிஷன் டாடா சஃபாரியின் ரெட் டார்க் மற்றும் அட்வென்ச்சர் எடிஷன்களுக்கு போட்டியாக இருக்கும்.
மேலும் படிக்கவும்: கிரெட்டா ஆன் ரோடு விலை