சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஏப்ரல் மாதத்தில் நான்காம் தலைமுறை சிட்டி கார்களுக்கு விடை கொடுக்கும் ஹோண்டா

published on மார்ச் 06, 2023 05:28 pm by rohit for ஹோண்டா சிட்டி 4 வது ஜெனரேஷன்

புதிய சிட்டியின் விலை மலிவான ஆப்ஷனான பழைய காம்பாக்ட் செடான் தற்போது SV மற்றும் V என இரண்டு வேரியண்ட்களாக விற்கப்படுகின்றன.

  • இதன் உற்பத்தி நிறுத்தப்படுவதைப் பற்றிய அறிக்கைகள் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஆன்லைனில் வெளிவந்தன.

  • 2014 இல் நான்காம் தலைமுறை மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் 2017 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது.

  • முன்னர் இருந்த இன்ஜினில் CVT தேர்வுடன் கூடுதலாக பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் இரண்டு ஆப்ஷன்களும் அதில் இருந்தன.

  • 2020-ம் ஆண்டில் ஐந்தாவது தலைமுறை மாடலை அறிமுகப்படுத்திய பிறகு, முந்தைய தலைமுறை சிட்டியின் பெட்ரோல்-CVT மற்றும் டீசல் வகைகளை ஹோண்டா நீக்கியது.

  • ஏழு அங்குல டச் ஸ்கிரீன், குரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ ஏசி உள்ளிட்ட அம்சங்கள் ஆன் போர்டில் உள்ளன.

புதிய அறிமுகமான தோற்றப்பொலிவு கொண்ட ஐந்தாம் தலைமுறை சிட்டி காருக்கு பிறகு ஏப்ரலில், செடானின் வயதான நான்காம் தலைமுறை மாடலுக்கு ஹோண்டா விடை கொடுத்தது. 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளிவந்த அறிக்கையிலிருந்து அதன் நிறுத்தம் உறுதிப்படுத்தப்பட்டது, 2022 ஆம் ஆண்டின் இறுதியிலேயே இது நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது.

சுருக்கமான மறுபார்வை

2014 ஆம் ஆண்டில் இந்தியாவில் நான்காம் தலைமுறை சிட்டி கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன , மேலும் 2017 ஆம் ஆண்டில் அவை புதுப்பிக்கப்பட்டன. ஐந்தாம் தலைமுறை சிட்டி கார்கள் அறிமுகமானபிறகும் கூட அவை மலிவான மாற்றுக்கார்களாக விற்பனை செய்யப்பட்டன மேலும் பிரபலமானாதாகவும் இருந்தன. அவை பெட்ரோல்-மேனுவல் ஆப்ஷன் மட்டும் வழங்கப்பட்ட நிலையில் , பெட்ரோல்-CVT மற்றும் டீசல் ஆப்ஷன்கள் குறைக்கப்பட்டன

மேலும் பார்க்கவும்: புதிய ஹோண்டா SUV மீண்டும் சோதனையிடப்பட்டது, அடாஸ் உறுதிப்படுத்தப்பட்டது

ஹூட்டின் கீழ் என்ன இருக்கிறது

பவர்டிரெயின்களைப் பற்றி பேசுவதென்றால், நான்காம் தலைமுறை சிட்டி கார்கள் 1.5லிட்டர் பெட்ரோல் என்ஜின் (119PS/145Nm) உடன் வெளிவந்தது, மேலும் அதில் 1.5லிட்டர் டீசல் என்ஜின் (100PS/200Nm) ஆப்ஷனும் இருந்தது. ஆனால் இப்போது அவை நிறுத்தப்பட்டுவிட்டன. ஸ்டான்டர்டாக ஐந்து-வேக MT வழங்கப்பட்டது, பெட்ரோல் காரில் CVT ஆட்டோமெட்டிக் தேர்வும் உள்ளன. தற்போது கிடைக்கும் பெட்ரோல் MT உடன் கூடிய நான்காம் தலைமுறை சிட்டி 17.4 kmpl மைலேஜைக் கொண்டுள்ளது.

ஆன்போர்டு உபகரணங்கள்

ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல், ஏழு அங்குல டச் ஸ்கிரீன் அமைப்பு, உயரத்தை சரிசெய்யக்கூடிய ஓட்டுநர் இருக்கை மற்றும் புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் உடன் கூடிய பழைய காம்பாக்ட் செடானை ஹோண்டா வழங்குகிறது. நான்காம் தலைமுறை சிட்டியும் கூட நான்கு ட்வீட்டர்கள், சீர்வேக் கட்டுப்பாடுக் கருவி மற்றும் கீலெஸ் என்ட்ரி உடன் கூடிய நான்கு ஸ்பீக்கர் இசை அமைப்பை வழங்குகிறது.

முன்பக்க இரட்டை ஏர்பேகுகள்,ISOFIX குழந்தை இருக்கை ஆங்கரேஜுகள், EBD உடன் கூடிய ABS மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை மூலம் பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.

கார்களின் வகைகள், விலைகள் மற்றும் போட்டி கார்கள்

ஹோண்டா,செடானை இரு கார்களாக விற்கிறது- SV மற்றும் V- அவற்றின் விலை ரூ.9.50 இலட்சம் முதல் ரூ.10 இலட்சம் வரை (எக்ஸ் ஷோரூம் டெல்லி) இருக்கும். நான்காம் தலைமுறை சிட்டி முதன்மையாக மாருதி சியாஸ் மற்றும் ஹீண்டாய் வெர்னாவுடன் போட்டியிடுகிறது.

மேலும் படிக்கவும்: சிட்டி 4வது தலைமுறை காரின் விலை

r
வெளியிட்டவர்

rohit

  • 49 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ஹோண்டா சிட்டி 4th Generation

Read Full News

trendingசேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்
Rs.2.03 - 2.50 சிஆர்*
எலக்ட்ரிக்
Rs.41 - 53 லட்சம்*
Rs.11.53 - 19.13 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை