• English
  • Login / Register

ஃபோர்டின் வாகன ஹார்மோனி குழு - உள்ளுணர்வு மூலம் தொடர்பு கொள்ளும் சைம்ஸ் ஒலிகளை உருவாக்கும்

published on செப் 21, 2015 04:28 pm by raunak

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஃபோர்ட் மோட்டார் கம்பெனியின் ‘வாகன ஹார்மோனி பிரிவு’ புதிதாக சைம்ஸ் ஒலிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. காரை ஓட்டும் போது, ஓட்டுனர் கவனமாக இல்லாமல் இருந்தால், அவரை உஷார் நிலைக்கு கொண்டு வருதற்கும்; பயணத்தை எளிதாகவும், பாதுகாப்பாகவும், மற்றும் இதமாகவும் தொடருவதற்கும் இந்த ஒலிகள் உதவுகின்றன. ஃபோர்ட் வாகனங்களில், கிட்டத்தட்ட 30 விதங்களில், இந்த இதமாக சைம்ஸ் ஒலிகள் இசைக்கும். ஒவ்வொரு ஓசைக்கும் வித்தியாசமான பண்புகள் உண்டு. செய்தி தெரிவிப்பதில் உள்ள அவசரத்தை அடிப்படையாகக் கொண்டு, இதன் ஒலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. கவனத்தை திசை திருப்புவதற்கு எழுப்பப்படும், மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி ஒலிகள் போன்ற மிகப்பொதுவான ஏனைய ஒலிகளைவிட, இந்த சைம்ஸ் ஒலிகள் வித்தியாசமாக இருக்கும் என்று ஃபோர்ட் நிறுவனம் குறிப்பிடுகிறது.

ஃபோர்டின் இந்த வாகன சைம்ஸ் ஒலிகள் மூலம், ஓட்டுனருக்கும் அந்த வாகனத்திற்கும் இடையே மொழிகளால் பேசப்படாத ஒரு தகவல் பரிமாற்றம் நடக்கும், ஏனெனில், இந்த ஒலிகள் மூலம் பயணிகளுக்கு கதவு மூடப்படவில்லை என்றும், விளக்குகள் எரிகின்றன என்றும், பாதுகாப்பு பெல்ட் போடவில்லை என்றும் வார்த்தைகள் இன்றி தெரியப்படுத்த முடியும், என்று ஃபோர்டின் வாகன பொறியியல் பிரிவின் கீழ் உள்ள வாகன ஹார்மோனி குழு, சைம்ஸ் ஒலிகளைப் பற்றி மிகைப்படுத்தி கூறுகின்றனர்.

கார்களின் உட்புறத்தில் பொழுதுப்போக்கு மற்றும் தொழில்நுட்பங்கள் பெரிய அளவில் பரிணாம வளர்ச்சி பெற்று, ஒவ்வொரு உபகரணங்களுக்கும் தனித் தனியான வெவ்வேறு ஒலிகள் உள்ளன. எனவே, புதிய வித்தியாசமான ஒலிகளை ஒவ்வொரு எச்சரிக்கைகளுக்கும் உருவாக்குவது சவாலாக இருந்தது என்று, இந்த நிறுவனம் கூறுகிறது. கூடுதலாக, இந்த பிரிவு மேலும் சில நுண்ணிய அம்ஸங்களான வெளிச்சம், ஒலி, அதிர்வலை எச்சரிக்கைகள் மற்றும் பிற தொட்டுணர்ந்து அறியும் தகவல் தொடர்புகள் வைத்து ஒலிகள் உருவாக்குவதை கருத்தில் கொண்டுள்ளது.

இந்த குழுவில் உள்ள ஒரு பொறியாளரான ஜெனிஃபர் பிரேஸ்காட் இது பற்றி கூறும் போது, "கூடுதலாக மேலும் பல எச்சரிக்கை ஒலிகளை உருவாக்குவது எங்கள் விருப்பமாக இருக்கிறது. ஆனால் மக்கள், ஏற்கனவே இருக்கும் ஒலிகள் போதும் என்ற திருப்தியுடன் உள்ளனர்," என்றார். எனவே, அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, "எங்களது எச்சரிக்கை ஒலிகள் உள்ளுணர்வைத் தூண்டும் விதமாகவும், உடனடியாக ஓட்டுனர்கள் கண்டுணர்ந்து கொள்ளும் விதமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்", என்று கூறினார்.

"ஆசிய பசிபிக் பகுதி, மிகவும் மாறுபட்ட கலாச்சார பின்னனியில் உள்ள வாடிக்கையாளர்கள் இருக்கும் இடம். எனவே, தனிக்கவனம் செலுத்தி இந்த வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் அடையாளம் கண்டு கொள்கிறோம். எனவே, தற்போது வட அமெரிக்காவில் உள்ள வாகன ஹார்மோனி குழுவால் உருவாக்கப்பட்ட இந்த சைம்ஸ் ஒலிகளை, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள ஒவ்வொரு நாடுகளின் உணர்வுகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்போம்," என்று ஆசிய பசிபிக் பகுதியின் ஃபோர்ட் அடிப்படை வடிவமைப்பு மற்றும் வாகனத் தொகுப்பு மேலாளரான ரோஜர் லீவிஸ் உறுதி கூறுகிறார். 

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience