• English
  • Login / Register

போர்ட் முஸ்டாங் ஜனவரி 28 இந்தியாவில் அறிமுகமாகிறது.

published on ஜனவரி 20, 2016 11:23 am by konark for போர்டு மாஸ்டங் 2016-2020

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

நமக்கு கிடைத்துள்ள தகவலின் ஒன்று போர்ட் நிறுவனம் தங்களது மிகவும் பிரபலமான  கட்டுறுதி மிக்க முஸ்டாங்  கார்களை இந்த ஜனவரி மாதம்  28 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கிறது. முன்னதாக , இந்த  போர்ட் முஸ்டாங் கார்கள் நடக்க இருக்கும் இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த போர்ட் முஸ்டாங் கார்களின் முதல் பதிப்பு 1964 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தற்போது வெளியிடப்பட உள்ள இந்த ம்ச்டாங் கார்கள் ஆறாவது தலைமுறை முஸ்டாங் கார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மேலும் மூன்று  என்ஜின் ஆப்ஷன்கள் உடன் இந்த முஸ்டாங் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. . 305Bhp சக்தியை வெளியிடும்  2 .3 லிட்டர் ஈகோபூஸ்ட் என்ஜின் , 300bhp  சக்தியை வெளியிடும் 3.7 V6  என்ஜின் மற்றும் 420bhp சக்தியை வெளியிடும் 5.0- லிட்டர்  V8 என்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப 6 - வேக மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் வேரியன்டை தேர்ந்தெடுத்துக் கொள்ள வசதியாக இரண்டு ட்ரான்ஸ்மிஷன் வசதியும் ஆப்ஷன்களாக வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த காரின் விலை 50 லட்சங்களில் இருந்து தொடங்கும் என்றும் யூகிக்கப்படுகிறது.

இந்த முஸ்டாங் கார்களின் தனித்துவமான சிறப்பாக நாம் பார்ப்பது , இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள IRS சிஸ்டம் ( இன்டிபென்டென்ட் ரியர் சஸ்பென்ஷன்) ஆகும். இது மட்டுமன்றி  வலது பக்க ட்ரைவ் வசதி கொண்ட  ஏற்றுமதி மாடல் ஒன்றை முழுதும் தங்கள்  தொழிற்சாலையிலேயே வடிவமைத்து வெளிநாட்டு சந்தையில் போர்ட் விற்பனை செய்யப்போவது இதுவே முதல் முறை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மற்ற சிறப்பம்சங்களும் ஏராளமாக இந்த முஸ்டாங் கார்களில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சின்க் 3 இந்போடைன்மென்ட் அமைப்பு , ஆட்டோமேடிக் வைபர், ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் மற்றும் அடேப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற அமசங்களை நாம் இந்த காரில் எதிர்பார்க்கலாம். இவை தவிர இந்த முஸ்டாங் கார்களின் டாப் - எண்டு மாடலில் , 12 ஸ்பீக்கர்கள் மற்றும் எட்டு - அங்குல சப்ஊப்பர் கொண்ட 390 வாட் ஷேக்கர் ப்ரோ ஆடியோ சிஸ்டம் இணைக்கப்படலாம்  என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

போர்ட் தனது அடுத்த தலைமுறை எண்டீவர் கார்களை இன்று அறிமுகம் செய்கிறது.

மேலும் வாசிக்க

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Ford மாஸ்டங் 2016-2020

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கூபே சார்ஸ்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience