ஃபோர்ட் முஸ்டங் கார் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது: எந்த நிறத்தை தேர்ந்தெடுக்கலாம்?
published on டிசம்பர் 15, 2015 02:17 pm by manish for போர்டு மாஸ்டங் 2016-2020
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபோர்ட் முஸ்டங்க் காரின் முதல் பேட்ச், பிரிட்டன் தவிர உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு, இந்த வாரம் டெலிவரி செய்யப்பட்டது. இந்திய சாலைகளில் சீறிச் செல்லவிருக்கிற முஸ்டாங்க் காருடன் பிரிட்டன் வெர்ஷனை ஒப்பிட்டு பார்க்கும் போது, பல விதமான ஒற்றுமைகளைக் காணலாம். ஃபோர்ட்டின் 50 ஆண்டு கால வெற்றி வரலாற்றில், முதல் முறையாக ஃபோர்ட் நிறுவனத்தின் ஃப்லாக்ஷிப் ஸ்போர்ட்ஸ் காரான ஃபோர்ட் முஸ்டாங்க், இந்திய சந்தைக்கு வரவுள்ளது. இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய விவரம் என்னவென்றால், இந்திய சந்தைக்கு ஏற்ப ரைட்- ஹேண்ட் ட்ரைவ் ஸ்டியரிங் பொருத்தி ஃபோர்ட் முஸ்டங்க் வந்திறங்கப் போகிறது. புதிய மாற்றங்கள் செய்யப்பட்ட இந்த கார் தனித்தியங்கும் ரியர் சஸ்பென்ஷனை பெற்றுள்ளது.
அமெரிக்க தயாரிப்பான முஸ்டங்க்கின் கலர் ஸ்கீம் எப்படி இருக்கும் என்று எங்களால் யூகிக்க முடிந்தது. அதை இங்கே வெளியிட்டுள்ளோம், மேலும் வாசித்து, இந்த கலர் ஸ்கீம் எப்படிப்பட்டது, எவ்வாறு உங்களுக்கானதைத் தேர்ந்தெடுப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
எந்த வண்ணத்தை தேர்வு செய்யலாம்?
நாம் வாங்கும் காரின் நிறத்தை தேர்ந்தெடுக்கும் முன்னர், வித விதமான ஆராய்ச்சிகளை செய்து, குடும்பத்தில் உள்ள பாட்டி முதல் பேத்தி வரை அனைவரது விருப்பத்தையும் ஆலோசனை செய்த பின்னரே முடிவு செய்வோம். அனைவரையும் கலந்தாலோசனை செய்தாலும், நாம் விரும்பியத்தையே வாங்குவோம். பெரும்பான்மையான முஸ்டங்க் டிரைவர்கள் தேர்ந்தெடுக்கும் ‘ரேசிங் ரெட்’ வண்ணமானது, கண்ணைக் கவரும் அழகிய தோற்றத்துடன் இருக்கும். எனவே, நீங்கள் ரேசிங் ரெட்டைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அது நிச்சயமாக ஏகோபித்த தேர்வாக இருக்கும்.
ஃபோர்ட் வழங்கும் ஒரு குறிப்பிட்ட கலர் ஸ்கீம் மற்ற அனைத்தையும் விட தனித்து தெரியும்படி உள்ளது, அதுவே ‘டிரிப்பில் மஞ்சள்’ ஆகும். ஆம், பயத்தை உணர்த்தும் வண்ணமான மஞ்சள், கார்களில் வரும் போது, மிகவும் அதிர்ஷ்டத்தைத் தரக் கூடியது என்று நம்பப்படுகிறது. ஃபோர்டின் இந்த வித்தியாசமான வண்ண தேர்வுக்கு முக்கிய காரணம் உள்ளது. முஸ்டங்க் காரின் மஞ்சள் சாதாரண மஞ்சள் அல்ல, இது ட்ரை-கோட் மஞ்சள், அதாவது பளீரென்று தெரிவதற்காக கூடுதலாக வண்ணம் ஏற்றப்பட்டுள்ளது. மஞ்சள் நிறத்தின் ரகசியத்தை வெளியிட்டவர், ஃபோர்ட் முஸ்டங்க் நிறுவனத்தின் ஸ்காட்டிஷ் வடிவமைப்பாளரான திரு. மொர்ரே கேளும் ஆவார். இவர், தானே முன்வந்து இந்த விவரத்தை வெளியிட்டுள்ளார். இதே காரணத்திற்காகவே, மொர்ரேயும் ‘டிரிபிள் எல்லோ’ V8 முஸ்டங்க் காரை வாங்கியுள்ளார்.
சூரிய ஒளியைப் போன்ற பளீரென்ற மஞ்சள் வண்ணம் உங்களுக்கானதில்லை என்று நீங்கள் உணர்ந்தால், கவலைப் படாதீர்கள், ஏனெனில், அழகியல் நாட்டங்கள் எப்போதும் மாற்றத்திற்கு உட்பட்டவை. யாருக்குத் தெரியும், ஃபோர்ட்டின் மஞ்சளை நேரில் பார்த்தவுடன் அதில் மயங்கி, நீங்கள் அதையே வாங்கினாலும் வாங்கலாம். இவ்வளவு விவரமாக மற்ற வண்ணங்களைப் பற்றி எடுத்துக் கூறினாலும், என்னைப் பொறுத்தவரை இக்நாட் சில்வரே உகந்தது. கண்ணைக் கூச வைக்கும் ‘ரேசிங் ரெட்’ மற்றும் ஆண்மையின் உதாரணமான சொல்லப்படும் ‘டீப் இம்பாக்ட் புளு’ வண்ணங்களை விட இக்நாட் சில்வர் அருமையாக இருக்கும்.
மேலும் வாசிக்க