• English
  • Login / Register

ஃபோர்டு இந்தியாவின் உண்மையான பாகங்களின் சில்லறை விநியோகம், கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கும் விரிவடைகிறது

modified on அக்டோபர் 19, 2015 11:02 am by manish

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

இன்று சிறந்த ஆல்-ரவுண்டர்களில் இரண்டை சாலைக்கு சமர்பித்துவிட்டு, தற்போது தனது வாடிக்கையாளர்களின் தொடர்பை அதிகரிப்பதில் ஃபோர்டு இந்தியா நிறுவனம் கவனத்தை செலுத்தி வருகிறது. ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையை இன்னும் ஒருபடி மேம்படுத்தும் வகையில், கோவா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய இடங்களில் அந்நிறுவனத்தின் உண்மையான சர்வீஸ் பாகங்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கூறிய இடங்களுக்கு வாகன பாகங்களின் பிரத்யேக விநியோகஸ்தராக ஆட்டோஜீ ஃபோர்டு பார்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளது. புனே நகரின் MIDC சின்சவாட் பகுதியில் உள்ள D1 பிளாக், 17/8 என்ற முகவரியில் அமைந்த இந்த மையத்தை, ஃபோர்டு வாடிக்கையாளர்கள் சேவை பணிகள் பிரிவின் துணை தலைவரான திரு.N.பிரபு திறந்து வைத்தார். இந்த சேவை மையம், 2000 சதுர அடிக்கு பரந்து விரிந்து காணப்படுகிறது.

இது குறித்து ஃபோர்டு இந்தியாவின் ஃபோர்டு வாடிக்கையாளர் சேவை பணிகள் பிரிவின் துணைத் தலைவர் திரு.N.பிரபு கூறியதாவது, “நாங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி, அதிக வாடிக்கையாளர்களை ஃபோர்டு நிறுவனத்தின் வட்டத்திற்குள் கொண்டு வருவதால், அதற்கேற்ப உண்மையான உதிரிப்பாகங்கள் கிடைப்பதை உறுதி செய்து, அதை எளிதாக கிடைக்க வழிவகை செய்ய கடமைப்பட்டுள்ளோம். எங்களின் சில்லறை விநியோக வட்டத்தை, தொடர்ந்து விரிவுப்படுத்துவதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுடன் நெருக்கம் ஏற்பட்டு, நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி, எங்களுடனான வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்த முடியும்” என்றார்.


இந்த திட்டத்தின் அடுத்தக்கட்ட விரிவாக்கமாக, உண்மையான பாகங்களின் சில்லறை விற்பனையை மற்ற பகுதிகளான ராஜஸ்தான், கிழக்கு இந்தியா மற்றும் குஜராத் போன்ற பகுதிகளை உள்ளடக்கி அமையும். வாடிக்கையாளர்களுடனான அனுபவத்தை மேலும் அதிகரிக்க, ஃபோர்டு இந்தியா தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் விநியோகஸ்தர் மட்டத்தில் இருந்து பணியாற்றி, தயாரிப்புகளை உள்ளூரில் பரப்புவதை அதிகரிப்பது கூட உட்படுகிறது. இதன்மூலம் உகந்த தரத்தை நிர்ணயிப்பதற்கான உதவிகளுக்கு வழிவகுக்கும். அதேநேரத்தில் விலைகள் போட்டியிடுவதற்கு எதுவாகவும் அமையும்.

அந்நிறுவனத்தின் உண்மையான உதிரிப்பாகங்கள் விநியோக வளையத்தின் கீழ், ஃபோர்டு ஆஸ்பியருக்கு 850 சப்-அசம்பிளி பாகங்கள் கிடைக்கிறது. இந்த சப்-அசம்பிளி மட்டத்தில் அமைந்த சீரமைப்பின் மூலம் வாகன உரிமையாளர் உடனான அனுபவத்தை அதிகரிக்க முடிகிறது. ஏனெனில் ஒரு காரின் மொத்த அமைப்பை குறித்து உரிமையாளர் கவலைப்படாமல், சப்-அசம்பிளி பாகங்களை மாற்றியமைக்கும் ஒரு வசதி கிடைக்கிறது.

ஃபோர்டு வாகன பர்சனலைசேஷன் சென்டரின் உதவியோடு, ஃபோர்டு நிறுவனம் தனது கார்களின் உருவாக்கத்தை எளிமைப்படுத்துகிறது. இந்த வகையில், பெரிய சந்தை வாகனங்களின் உருவாக்கத்தை கொண்ட முதல் வாகன தயாரிப்பாளராக விளங்குகிறது. இந்த பர்சனலைசேஷன் மட்டத்தில், தற்போது அளிக்கப்பட்டுள்ள ஃபோர்டு ஈகோஸ்போர்ட், வழக்கமாக உயர்-மட்ட ஆடம்பர கார்களுடன் சேர்க்கப்படுகிறது. மேலும் ஃபோர்டு நிறுவனம், “ஹேப்பி பாக்கெட்ஸ் சர்வீஸ்” மூலம் ரூ.2,199 என்ற விலையில் துவங்கும் ஃபோர்டின் உயர்தர சேவையை பெற்று கொள்ள வாய்ப்பு அளிக்கிறது.

இதையும் படியுங்கள்:

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience