ஃபோர்ட் இந்தியாவின் சென்னை தொழிற்சாலை ஒரு மில்லியன் கார்களை உற்பத்தி செய்து சாதனை புரிந்தது
published on நவ 06, 2015 01:07 pm by அபிஜித்
- 16 Views
- ஒரு கருத்தை எழுதுக
கார் மற்றும் இஞ்ஜின் உற்பத்தி செய்யும், சென்னையில் உள்ள ஃபோர்ட் இந்தியாவின் தொழிற்சாலை, தனது லட்சமாவது காரையும், இஞ்ஜினையும் தயாரித்து வெளியிட்டு சாதனை புரிந்துள்ளது. 1999 –ஆம் ஆண்டு இந்த ஃபோர்ட் தொழிற்சாலை ஆரம்பித்து, 16 வருடங்களை கடந்துள்ள இந்த வளர்ச்சி பயணத்தில், ஃபோர்ட் நிறுவனத்திற்கு இது ஒரு சிறந்த மைல் கல்லாகும். அதிர்ஷ்டம் வாய்ந்த அந்த ஒரு லட்சமாவது கார் எக்கோ ஸ்போர்ட் ஆகும்.
350 ஏக்கருக்கும் மேற்பட்ட விஸ்தாரமான இடத்தில் நிலை கொண்டிருக்கும் ஃபோர்ட்டின் சென்னை தொழிற்சாலை, தற்போது எக்கோ ஸ்போர்ட், பியேஸ்டா மற்றும் எண்டேவியர் ஆகிய மூன்று கார்களையும் தயாரித்துக் கொண்டிருக்கிறது. கார் தயாரிப்பு தவிர, 2008 –ஆம் ஆண்டு ஒரு இஞ்ஜின் அசம்ப்ளிங் யூனிட்டும் இந்த வளாகத்தில் நிறுவப்பட்டு, தற்போது சிறந்த முறையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த யூனிட்டில், பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜின்கள் ஒரே நேரத்தில் தயாரிக்கப்படும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு 2 லட்சம் வாகனங்கள் மற்றும் 3.4 லட்சம் இஞ்ஜின்களையும் இந்த ஒரே இடத்தில் உற்பத்தி செய்ய முடியும். எனவே, இதை ஒரு அமெரிக்க பவர் ஹவுஸ் என்று கூறும் அளவிற்கு உற்பத்தி திறனில் சிறந்து விளங்குகிறது.
சென்னையில் உள்ள ஃபோர்ட் வாகன அசெம்ப்ளி மற்றும் இஞ்ஜின் தொழிற்சாலையின் உற்பத்தி நிர்வாக இயக்குனரான திரு. பாலசுந்தரம் ராதாகிருஷ்ணன், “இந்தியாவில் எங்கள் பயணத்தை, சென்னையில் இருந்துதான் இனிதே ஆரம்பித்தோம். இந்த ஆலை, ஃபோர்டின் மிகச்சிறந்த சர்வதேச உற்பத்தி ஆலையாக செயல்படுவதோடு மட்டும் அல்லாமல், சர்வதேச தரத்தில் ஃபோர்ட் வாகனங்களை உருவாக்குவதில் உள்ள செயல்முறைகளை ஏற்றுக் கொண்டு புதிய வரையறைகளை அமைத்துக் கொண்டு, கார்பன் வெளியீடுகளை குறிப்பிடத்தக்க வகையில் குறைத்துள்ளது என்பதை நான் இங்கு குறிப்பிட வேண்டும். சென்னை தொழிற்சாலையில் வேலை செய்யும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களின் ஆர்வத்திற்கும் அற்பணிப்பிற்கும், லட்சமாவது இஞ்ஜின் மற்றும் வாகன உற்பத்தி என்ற இந்த உயர்ந்த நிலை சிறந்த எடுத்துக்காட்டாகும்,” என்று கூறினார்.
சென்னையில் உள்ள தொழிற்சாலை தவிர, தற்போது ஃபோர்ட் நிறுவனம் குஜராத்தில் உள்ள சனந்த்திலும் மற்றொரு ஆலையையும் ஆரம்பித்துள்ளது. இஞ்ஜின் உற்பத்தியில் மட்டுமே கவனம் செலுத்துவதற்காக இந்த ஆலையை உருவாக்கியிருந்தாலும், தற்போது பிகோ மற்றும் ஆஸ்பயர் போன்ற கார்களை இங்கேயே உற்பத்தி செய்கிறது.
சென்னையிலும் சனந்திலும் உள்ள உற்பத்தி ஆலைகள் மூலம், ஃபோர்ட் நிறுவனம் அதிகப்படியான கார்களையும் இஞ்ஜின்களையும் ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா மற்றும் ஏனைய ஆசிய நாடுகளுடன் சேர்ந்து நாற்பதிற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
பரிந்துரைக்கப்படுகிறது