• login / register

இந்தியாவில் 2016 இரண்டாம் காலாண்டில் முஸ்டங்க் விற்பனை ஆரம்பம்: ஃபோர்ட் உறுதி

போர்டு மாஸ்டங் க்கு published on ஜனவரி 29, 2016 01:52 pm by akshit

  • 5 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

2016 – ஆம் வருடத்தின் இரண்டாவது காலாண்டில், ஃபோர்ட்டின் புதிய போனி கார் இந்திய சந்தையில் ஓட ஆரம்பிக்கும். 

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப் போல, தாமதமாக அறிமுகமானாலும், உலகெங்கிலும் மக்களின் மனதைக் கொள்ளை கொண்ட  முஸ்டங்க் காரை, இந்திய வாகன சந்தை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. ஆம், அமெரிக்க கார் தயாரிப்பாளரான ஃபோர்ட் நிறுவனம், ‘மஸில் கார்’ என்று பெயர் பெற்ற தனது உறுதியான முஸ்டங்க் காரை நேற்று இந்திய சந்தையில் வெளியிட்டது. 2016 –ஆம் வருடத்தின் இரண்டாம் காலாண்டில், இந்த கார் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும். அரை நூற்றாண்டிற்கு முன்னர் அறிமுகமான முஸ்டங்க் காரின் 6 –வது தலைமுறை மாடல் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. 50 வருடங்கள் கழித்து, இப்போதுதான் முதல் முறையாக வலது பக்கம் ஸ்டியரிங் வீல் பொருத்தப்பட்ட ‘ரைட் ஹேண்ட் ட்ரைவ்’ அமைப்பைப் பெறுகிறது. 

ஃபோர்ட் இந்தியா நிறுவனத்தின் பிரெசிடெண்ட்டான நைஜெல் ஹாரிஸ், “ஃபோர்ட் முஸ்டங்கின் நீண்ட வரலாறு முழுவதும், இந்த காரை வெற்றி மற்றும் நம்பிக்கையின் சின்னமாகவே, உலக மக்கள் அனைவரும் கருதுகின்றனர்,” என்று கூறினார். “அமெரிக்க கலாச்சாரத்தின் சின்னமாக புதிய முஸ்டங்க் திகழ்கிறது. பெருமை வாய்ந்த வாகன வரலாற்றை கொண்ட இந்த காரில் பயணம் செய்யும் அனுபவத்தை, எங்களது இந்திய வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்,” என்று அவர் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். 

முஸ்டங்க் கார், அமெரிக்காவில் இருந்து CBU முறையில் (முழுவதும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இங்கே ஓடுவதற்கு தயார் நிலையில் இறக்குமதி செய்யும் முறை) இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட உள்ளது. சர்வதேச சந்தையில் உயர்தர வேரியண்ட் தவிர, ஒப்பீட்டளவில் சற்றே குறைவான இயங்கும் திறனைப் பெற்ற இரண்டு வேரியண்ட்கள் கிடைக்கின்றன. ஆனால் இந்தியாவில், முஸ்டங்கின் உயர்தர GT வெர்ஷன் மட்டுமே அறிமுகமாகிறது. முஸ்டங்க் GT வேரியண்ட்டில் 420 குதிரைத் திறன் மற்றும் 529 Nm என்ற அளவில் அதீத டார்க்கையும் உற்பத்தி செய்யும் 5.0 லிட்டர் Ti-VCT V8 இஞ்ஜின் இடம்பெற்றுள்ளது. ஸ்டியரிங் மௌன்டட் பாடுல் ஷிப்டர்களுடன் இணைந்த 6 ஸ்பீட் செலக்ட் ஷிப்ட் தானியங்கி கியர்பாக்சுடன் இந்த இஞ்ஜின் இணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஆப்ஷனலாக வரும் அதிகமான செயல்திறன் மிகுந்த அம்சங்கள் பொருத்தப்பட்ட மாடல், இந்தியாவில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது நமக்கு ஒரு நற்செய்தியாகும். பனி, ஈரம், பந்தயம், டிராக் மற்றும் இயல்பான சூழலுக்கேற்ப ஸ்டியரிங் திறன், இஞ்ஜின் ரெஸ்பான்ஸ் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் எலெக்டிரானிக் அமைப்புகளின் நிலையை கட்டுப்படுத்தும் அமைப்புகள் போன்றவற்றை, உடனடியாக மாற்றி அமைக்கும் விதத்தில் பனி, ஈரம், ஸ்போர்ட், டிராக் மற்றும் நார்மல் போன்ற பலவகை செலெக்டபில் ட்ரைவ் மோடுகள் (SDM) முஸ்டங்கில் இடம்பெற்றுள்ளன. 

ஃபோர்ட் முஸ்டங்கில், 4.2 அங்குல மல்டி-இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளே, ஃபோர்ட் நிறுவனத்தின் பிரத்தியேகமான சிங்க் 2 இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம், தானியங்கி வைப்பர்கள், ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன் மற்றும் அடாப்டிவ் க்ரூயிஸ் கண்ட்ரோல் அமைப்பு போன்றவை தவிர இன்னும் ஏராளமான சிறப்பம்சங்கள் இடம்பிடித்துள்ளன. 

பாதுகாப்பு அம்சங்கள் என்று பார்த்தால், முஸ்டங்கில் பல பாதுகாப்பு காற்றுப் பைகள், ABS, EBD மற்றும் ரேடாரின் உதவியுடன் பிளைண்ட் ஸ்பாட்களில் உள்ள வாகனங்களைக் கண்டறிந்து, வெளியில் உள்ள கண்ணாடியில் தகுந்த எச்சரிக்கைகளைக் கொடுக்கும் BLIS (பிளைண்ட் ஸ்பாட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்) போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. 

“புதிய ஃபோர்ட் முஸ்டங்க் இதன் பிரிவிலேயே சிறந்த காராகத் திகழ்கிறது. முஸ்டங்க் என்னும் பெயருடன் வரும் ஸ்டைல், செயல்திறன் மற்றும் பாரம்பரியம் போன்றவற்றை மதிக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் அனைவரையும் இந்த கார் நிச்சயமாக வசீகரிக்கும்,” என்றும் ஹாரிஸ் கூறினார். 

“மிகச் சிறந்த புதிய தொழில்நுட்பம், நவீன டிசைன் மற்றும் சர்வதேச தரத்தில் செயல்திறன் போன்றவை இடம்பெற்றுள்ளதால், ஒரு புதிய ஸ்டாண்டர்டை இது உருவாக்கும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் வாசிக்க 

வெளியிட்டவர்

Write your Comment மீது போர்டு மாஸ்டங்

Read Full News
  • டிரெண்டிங்கில்
  • சமீபத்தில்
×
உங்கள் நகரம் எது?