• English
  • Login / Register

2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் பங்கேற்கும் ஃபோர்ட் கார்கள்

published on பிப்ரவரி 02, 2016 02:45 pm by அபிஜித்

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

அமெரிக்க கார் உற்பத்தியாளரான ஃபோர்ட் நிறுவனம், நமது நாட்டில் பல புதிய கார்களை அறிமுகப்படுத்தும் படலத்தில் உள்ளது. ஏனெனில், கடந்த 5 மாத நிகழ்வுகளை நினைவுபடுத்தி பார்த்தால், ஃபோர்ட் நிறுவனம் 3 புதிய தயாரிப்புகளையும், ஒரு புதுபிக்கப்பட்ட மாடலையும் வெளியிட்டுள்ளது. அவை, பிகோ ஆஸ்பியர், நெக்ஸ்ட்- ஜென் பிகோ, எக்கோஸ்போர்ட் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் புத்தம் புதிய எண்டேவர் போன்றவையாகும் . வாடிக்கையாளர்களும் இவற்றின் தரம், விலை, மற்றும் செயல்திறன் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டதால், இந்த 2016 -ஆம் ஆண்டில் ஃபோர்ட் தனது திடமான திட்டங்களுடன், வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், ஃபோர்ட் நிறுவனத்தின் புதிய கார்களின் வருகை நமக்கு ஒரு மாறுபட்ட அனுபவத்தை அளிக்கும் என்பது உறுதி. அவற்றைப் பற்றிய விவரங்களை நாம் கீழே காணலாம். 

முஸ்டங்க் GT

ஒரு சில நாட்களுக்கு முன்பு வெளியான சர்வதேச புகழ் வாய்ந்த போனி காரான முஸ்டங்க், அறிமுக விழாவில் ஏற்படுத்திய அதே உற்சாகத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.. எக்ஸ்போ அரங்கில் ஃபோர்ட்டின் பெவிலியன் பகுதியில் இந்த கார் நிறுத்தி வைக்கப்படும், இதற்கு அருகாமையில் ஏற்கனவே அறிமுகமான தனது கார்கள் மற்றும் புதிய கார்கள் ஆகியவற்றை அழகாகக் காட்சிப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அமெரிக்க அல்லது ஐரோப்பிய சந்தைகளில் உள்ள கூடுதல் ஆப்ஷங்கள் இல்லாமல், நமது நாட்டில் சிறந்த செயல்திறனை ஸ்டாண்டர்ட் அம்ஸமாகக் கொண்ட  முஸ்டங்க் GT மாடல் வெளிவந்துள்ளது. நீண்ட முகப்புடைய இந்த முஸ்டங்க் மாடலில், 420 bhp சக்தி மற்றும் 529 Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 5.0 – லிட்டர் கோயோட் V8 இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது

ஃபோர்ட் எட்ஜ் 

ஃபோர்ட் எட்ஜ் மிகவும் நேர்த்தியான கம்பீரமான வடிவமைப்பு கொண்ட சிறந்த SUV – யாக தோற்றமளிக்கிறது. நிமிர்ந்த பகுதி மற்றும் நேர்த்தியான விளிம்பு வரிகளுடன், இதன் வெளிப்புற தோற்றம் அழகுபடுத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் இடம் பெற்றுள்ள ஃபோர்ட்டின் சின்னம் கொண்ட அறுங்கோண வடிவத்தில் உள்ள கிரில், இந்த காருக்கு நவீன மற்றும் ஆஜானுபாவமான தோற்றத்தைப் பெற்றுத் தருகிறது. மேலும், இந்த கிரில் பகுதியின் இரு விளிம்புகளிலும் அழகான ஹெட் லாம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய எட்ஜ் SUV மாடலின் உட்புறத்தோற்றம், எந்த குறையுமின்றி ஃபோர்ட்டின் சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆனால், எக்கோ ஸ்போர்ட் மாடலுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, இதன் தரத்தை மேலும் அதிகப்படுத்தி இருக்கலாம் என எதிர்ப்பார்க்க வைக்கிறது. ஃபோர்ட் எட்ஜ், ஹுண்டாய் டக்சன் பிரிவில் வருவதால், அதனுடன் நேருக்கு நேர் மோதும். 

மாண்டெயோ

சில காலங்களுக்கு முன்பே இந்தியாவிற்கு வரவிருந்த இந்த எக்ஸிக்யூடிவ் சேடன், இப்போது மேம்படுத்தப்பட்ட புதிய தோற்றத்துடன் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஃபோர்ட்டின் 2016 வடிவமைப்பு தத்துவத்தின் அடிப்படையில் உருவான இந்த கார், இதன் தயாரிப்பாளரின் மற்ற கார்களை போலவே மிகவும் ஸ்டைலாக உள்ளது. வெளிநாட்டு அம்சங்களை அதிகமாக கொண்டுள்ள 2016 மாண்டெயோ, இந்தியாவிலும் அதே சிறப்பம்சங்களைப் பெற்று வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாண்டெயோ கார் எந்த தேதியில், எந்த மாதத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதைப் பற்றிய தெளிவான விவரத்தை, இதன் தயாரிப்பாளர் இதுவரை அறிவிக்கவில்லை. 

குகா

எக்கோ ஸ்போர்ட் மாடல் போல் அல்லாமல் 4- மீட்டருக்கும் அதிகமான அளவில் வடிவமைக்கப்பட்ட ஃபோர்ட்டின் மற்றுமொரு காம்பாக்ட் SUV வகை மாடலாக, புதிய குகா 2016 எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. ஃபோர்ட்டின் மற்ற SUV மாடல்களில் உள்ள கம்பீரமான தோற்றத்தில் உள்ள கிரில் போல இல்லாமல், குகாவில் மென்மையான அறுங்கோண வடிவ கிரில் இடம் பெற்றுள்ளதால், தனக்குரிய தனித்தன்மையுடன் திகழ்கிறது. ஹுண்டாய் கிரேட்டாவின் பிரிவில் கீழ் குகா வருவதால், அறிமுகத்திற்கு பிறகு அதுவே குகாவின் நேரடி போட்டியாளராக இருக்கும். 

மேலும் வாசிக்க 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience