ரூ. 2.5 கோடி மதிப்புடைய இத்தாலி நாடு சூப்பர் கார் புது டெல்லியில் தீக்கிரையானது!
published on ஆகஸ்ட் 25, 2015 09:10 am by அபிஜித்
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்:
இத்தாலி நாட்டின் சூப்பர் காரான லம்போர்கினி இந்தியாவில் அடிக்கடி விபத்தை சந்திக்கின்றன. இந்த வரிசையில் சமீபத்தில் ஒரு செம்மஞ்சள் நிறமான கல்லார்டோ கார் தீக்கிரையானது. பதர்பூர் பகுதியில் சர்வீஸ் செய்து கொண்டு காரின் உரிமையாளர் காரை வீட்டிற்கு ஓட்டி சென்ற போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
என்ஜின் பகுதியில் முதலில் தீ பற்ற தொடங்கி வேகமாக அந்த தீ கார் முழுதும் பரவத் தொடங்கியது . அதிர்ஷ்டவசமாக உரிமையாளர் சரியான நேரத்தில் வெளியே வந்ததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருந்தாலும் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்கும் வரை காரின் உரிமையாளர் செய்வதறியாது மெல்ல மெல்ல தீ ஜுவாலைகள் தன காரை விழுங்குவதை வேறு வழி இன்றி பார்த்துக்கொண்டிருந்தார். படத்தில் பார்க்கையில் காரின் பின்பகுதி அதாவது 5.2 லிட்டர் V 10 மோட்டார் பொருத்தப்பட்ட பகுதி கொழுந்து விட்டு எரிவதைப் பார்க்க முடிகிறது. என்ஜினின் முக்கியமான மூலப்பொருட்கள் எல்லாம் மீண்டும் சரி செய்ய முடியாத அளவுக்கு சேதம் அடைந்துள்ளன. அநேகமாக இந்த கார் இத்தாலி எடுத்து செல்லப்பட்டு பழுது பார்க்க பட்டால் தான் மீண்டும் ஓடும் நிலைமைக்கு கொண்டுவர முடியும்.
இந்த ஒன்றைத் தவிர, லம்போர்கினி நிறுவனம் எவ்வாறு என்ஜின் தீபிடித்தது என்பதைப் பற்றிய தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். நம் தலைநகரம் இது போன்ற சூப்பர் கார் விபத்துக்களை இந்த வருடத்தில் மட்டும் பார்த்து விட்டது. இது எப்படி இருப்பினும் தயாரிப்பாளர்களின் திறன் பற்றியும் இத்தகைய சூப்பர் கார்களை இயக்குபவர்கள் பற்றியும் ஏராளமான கேள்விகளை இத்தகைய சம்பவங்கள் எழுப்புகின்றன.
இந்த விபத்தைத் தவிர ஒரு ஸ்பெஷல் எடிஷன் கல்லார்டோ கார் ஒன்று சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி ஓட்டுனரின் உயிரை பறித்தது. இன்னொரு சம்பவத்தில் ஹோட்டல் ஒன்றில் பார்கிங் செய்ய முயன்றபோது காரின் ஓட்டுனர் காரை பலமாக மோதியதால் விபத்து நிகழ்ந்தது.. இன்னொரு சம்பவத்தில் ஓட்டுனர் தன்னுடைய கட்டுபாட்டை இழந்து முர்சிலேகோ காரை மரத்தில் மோதினார்.