ஃபியட் Aegea கார் - Egea என்று பெயர் மாற்றப்பட்டது
published on செப் 25, 2015 12:59 pm by cardekho
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபியட் துருக்கி நிறுவனம், Aegea மாடலின் பெயரையும் வடிவமைப்பையும் தற்போது மாற்றியுள்ளது. மே மாதம் 21 ஆம் தேதி, துருக்கியில் வெளியிட்ட Aegea மாடலைப் போலவே இந்த புதிய காரின் உருவமைப்பு இருந்தாலும், இதனை Egea என்று பெயர் மாற்றியுள்ளனர். இதன் அளவுகளை மாற்றவில்லை என்றால், இந்த புதிய காரின் நீளம் 4,500 மிமீ, அகலம் 1,780 மிமீ, மற்றும் உயரம் 1,480 மிமீ என்று, அதே அளவுகளில் இருக்கும். இதன் சக்கர அகலம் 2,640 மிமீ என்று இருக்கும் என்று தெரிகிறது.
புதிதாக பட்டன் பொருத்தப்பட்ட ஓட்டு சக்கரம் (ஸ்டியரிங் வீல்) மற்றும் 5 அங்குல வண்ண தொடுதிரை அமைப்பு கொண்ட யுகனேக்ட் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்ட இந்த புதிய பெயர் மாற்றப்பட்ட கார், மிகவும் ஆடம்பரமான தோற்றத்தை அளிக்கிறது. மேலும் தொழில்நுட்ப ஆர்வலர்களை மகிழ்ச்சியூட்ட கவர்ச்சிகரமான தட்பவெட்ப கட்டுப்பட்டு அமைப்பு மற்றும் புளு டூத் இணைப்பையும் அளிக்கிறது. இந்த காரின் உட்புறம் மிகவும் கவனமாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முகப்பு பெட்டி (டாஷ் போர்டு) அழகிய வெள்ளி நிறத்தில் வேலைப்பாடுகளைக் கொண்டு, இதன் பட்டன்கள் மைய HV குளிர் சாதன துளைகளின் கீழே பொருத்தப்பட்டுள்ளது, மிகவும் பாங்காகவும் கண்ணியமாகவும் காட்சியளிக்கிறது.
110 hp குதிரைத் திறனும், 95 PS திறனும், 1.6 E உந்து விசையையும் உற்பத்தி செய்யவல்ல 1.4 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின்; 95 PS செயல்திறனை கொடுக்கவல்ல 1.3 மல்டி ஜெட் II; மற்றும் 120 குதிரைத் திறனை உற்பத்தி செய்யவல்ல 1.6 மல்டி ஜெட் II போன்ற பல வகையான இஞ்ஜின் விருப்பத் தேர்வுகள், Egea காரில் வருமா என்று இன்று வரை இந்நிறுவனம் உறுதி செய்யவில்லை.
தற்போதுள்ள அனுமானங்களின் படி, Egea கார் 6 விரைவு ஆளியக்கி பல்லிணைப்பு பெட்டி அல்லது தானியங்கி பல்லிணைப்பு பெட்டி பொருத்தப்பட்டு வரலாம் என்று தெரிகிறது. இதுவரை, இந்த கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவது பற்றி, இந்நிறுவனம் உறுதி செய்யவில்லை. எனினும், துருக்கியில் உருவாக்கப்பட்ட இந்த Egea, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியம் உட்பட 40 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த மாட்டோம் என்று ஃபியட் நிறுவனம் அறிவித்தாலும், நாம் கவலைப்பட போவதில்லை, ஏனெனில், ஏற்கனவே நமக்கு ஒரு புதிய மகிழ்ச்சியான செய்தி வந்துவிட்டது. ஃபியட் இந்தியா நிறுவனத்தில், ஃபியட் லீனியாவிற்கு அடுத்ததாக ஒரு புதிய வெளியீட்டிற்கு வேலை நடந்து கொண்டிருக்கிறது. இது வெகு விரைவில் இந்தியர்களுக்காக பிரத்தியேகமாக தயாராகி விடும்.
0 out of 0 found this helpful