சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

பியட் இந்தியா நிறுவனம் இந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு டபுள் தமாகா சலுகைகளை வெளியிட்டது

published on அக்டோபர் 14, 2015 09:30 am by manish

ஜெய்பூர் :

பியட் க்ரைஸ்லர் ஆடோமொபில்ஸ்(FCA) இந்தியா வேகமாக நெருங்கி வரும் பண்டிகை காலத்தை மனதில் கொண்டு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த விழா காலத்தில் கணிசமான அளவு சலுகைகளை வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட காலம் வரை பெற்று பயன்பெறலாம். தற்போது உள்ள பலதரப்பட்ட பியட் தயாரிப்புக்கள் மீது இந்த சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. பியட் தயாரிப்புகளில் ஆர்வம் கொண்டு வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் இந்த சலுகைகளின் பயனையும் புன்டோ ஈவோ , அவெஞ்சுரா, லீனியா FL மற்றும் லீனியா க்லேசிக் மாடல்கள் மீது வழங்கப்படும் ரூ. 1 லட்சம் வரையிலான டபுள் கேஷ் சலுகைகளையும் பெற்று பயன்பெறலாம். ஒவ்வொரு குறிப்பிட்ட மாடல் மீதும் வழங்கப்படும் சலுகைகளை கீழே பட்டியலிட்டுள்ளோம்.

  • புன்டோ ஈவோ : சலுகைகள் 70,000 வரை + டபுள் தமாகா
  • அவெஞ்சுரா : சலுகைகள் 80,000 வரை + டபுள் தமாகா
  • லீனயா FL : சலுகைகள் 1,10,000 வரை + டபுள் தமாகா
  • லீனியா கிளாசிக் : சலுகைகள் 40,000 வரை + டபுள் தமாகா

இந்த விலை தள்ளுபடியை தவிர , அக்டோபர் 19 ஆம் தேதி அபார்த் புன்டோ ஈவோ கார்களை அறிமுகம் செய்ய முனைப்புடன் தயாராகி வருகிறது பியட் நிறுவனம். இந்த காரில் 145bhp சக்தியை வெளியிடக்கூடிய சக்தி வாய்ந்த 1.4 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. இதே என்ஜின் தான் லீனியா செடான் கார்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடதக்கது. அறிமுகமாக உள்ள இந்த அபார்த் புன்டோ ஈவோ கார்கள் நல்ல ஸ்போர்ட்டியான அபர்த் பெயர் கொண்ட ஸ்டிக்கர்கள் , ரேசிங் ஸ்ட்ரைப்ஸ் மற்றும் நன்கு பளிச்சென்று தெரியும் விதத்தில் எதிர்மறையான வண்ணங்கள் கொடுக்கப்பட்டு படு நேர்த்தியாக காட்சி அளிக்கின்றன. மேலும் இந்த கார்களில், நான்கு முனைகளிலும் டிஸ்க் ப்ரேக் இணைப்புடன் கூடிய ஸ்கார்பியன் பைநெர் அல்லாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் காரின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் பல இடத்தில் அபார்த் பெயர் (பேட்ஜ்) பொறிக்கப்பட்டுள்ளது. காரின் உட்புறம் முழுதும் ஸ்போர்ட்டியான கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டும், சீட் மீது கருப்பு வண்ணத்திற்கு எதிர்மறையான வண்ணத்தில் தையல்கள் போடப்பட்டும் படு நேர்த்தியாக உட்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகவே பலதரப்பட்ட அசத்தலான மாடல்களுடன் களம் இறங்கியிருக்கும் பியட் நிறுவனத்திற்கு இந்த விழாக்காலம் மிகச் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:

பியட் நிறுவனம் அபார்த் புன்டோ ஈவோ கார்களை அக்டோபர் 19 ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது பியட் டிபோ என்று லீனியாவிற்கு புது பெயர் கொடுக்கப்பட்டுள்ளது

m
வெளியிட்டவர்

manish

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை