வாகன சந்தையில் பிரத்தியேக செய்தி: ஃபோர்ட் முஸ்டங்க் 5.0-liter V8 ARAI-ல் காத்துக்கொண்டிருக்கிறது – விரைவில் அறிமுகமாகிறது!
போர்டு மாஸ்டங் 2016-2020 க்காக ஜூலை 23, 2015 06:00 pm அன்று raunak ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
மோட்டார் வாகன துறையில், போனி மாடல் கார்களின் ஆறாவது தலைமுறை முதன்முறையாக உலகளாவிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு உலகம் முழுவதும் உலகம் சுற்றும் வாலிபனைப்போல் உலா வந்துகொண்டிருக்கிறது. போனி ரக முஸ்டங்க் மற்றும் வோய்லா ஆகிய இரண்டு மாடல்களும் உலகின் அனைத்து மூலை முடுக்குகளிலும் இந்த வருட இறுதிக்குள் கிடைக்கும் என்று ஃபோர்ட் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
முதல் முறையாக முஸ்டங்க் கார் உலகம் முழுவதும் கிடைக்கக்கூடியதாக உள்ளது. இதனை முன்னிட்டு, 50 வருட பாரம்பரியமிக்க இடது புறம் உள்ள ஓட்டுநர் இருக்கை அனைத்து வடிக்கையாளர்களையும் திருப்திப்படுத்த வலது புறம் மாற்றப்பட்டுள்ளது. தற்பொழுது, இந்தியா அரசாங்கத்தின் வாகன துறைகளின் ஒப்புதலுக்காக ஏஆர்ஏஐ மையத்தில் காத்திருக்கிறது. ஃபோர்டு முஸ்டாங். ஒப்புதம் முடிந்து, இந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் இந்தியாவில் அறிமுகபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபோர்டு நிறுவனம் சிபியு உத்தியை, அதாவது முழுமையாக தயாரித்து முடிக்கப்பட்ட காரை விற்பனை செய்வது என்று முடிவுசெய்திருக்கிறது. மிகவும் உயர்தரமான ஜிடி 5.0-லிட்டர் V8 மாடல் ரூ60-65 லட்சம் என்ற விலையில் சந்தைக்கு வரவுள்ளது. உலக அளவில், ஃபோர்டு முஸ்டாங் 2.3-லிட்டர் 4 சிலிண்டர் எக்கோ பூஸ்ட் மற்றும் ஒரு 3.7-லிட்டர் Ti-VCT வி 6 என்னும் இரண்டு மாறுபட்ட தெரிவுகளில் வருகிறது. மிகவும் உயர்ந்த ரக ஜிடி 5.0-லிட்டர் V8 மாடலை இந்தியாவில் வெளியிடவுள்ளோம் என்று ஃபோர்ட் நிறுவனம் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் தெரிவித்துள்ளது.
மேலே கூறப்பட்ட ஃபோர்டு முஸ்டாங் 5.0-லிட்டர் V8 இஞ்ஜினானது 6500 rpm கொண்டு 418 PS செயல் திறன் மற்றும் மகத்தான 524 Nm முறுக்கு விசையுடனும் அபரிதமான சக்தியுடனும் உள்ளது. ஃபோர்டின் முஸ்டங்க் 6 வேக ‘செலக்ட் ஷிப்ட்’ தானியங்கி கியர் மாற்றியை கொண்டுள்ளது ; எனினும் முஸ்டாங் 6 ஸ்பீடு ஆளியக்கியக் கட்டுபாடு(மேனுவல்) முறையிலும் வருகிறது. எவரும் கவனிக்காமல் போக கூடாது என்பதற்காக இதன் இயந்திரத்திலிருந்து மாறுபட்ட கனத்த சத்தம் வெளியேற்றபடுகிறது.
இருந்தாலும், இத்தகைய சத்தம் அனைவரரையும் கவரக்கூடும் என்பதற்கில்லை. முஸ்டங்கின் கம்பீர கர்ஜனை சத்தத்தை நீங்கள் கவனிக்கவில்லை என்றால் பரவாயில்லை. புது பொலிவுடன் எண்டோவர் காரையும் ஃபோர்ட் அறிமுகப்படுத்தவுள்ளது. ஃபோர்ட் இந்தியா இந்த ஆண்டு அறிமுகம் செய்ய உள்ள நான்கு ரகங்களில் எண்டோவர் எஸ்யுவி மாடலும் ஒன்றாக உள்ளது என்பது எஸ்யுவி பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகும். புதிய வடிவமைப்புடன் இருப்பது தவிர எண்டோவர் இரண்டு புதிய இயந்திரங்களும் கொண்டுள்ளது. ஒரு சிறிய ரக 4 சிலிண்டர் 2.2 லிட்டர் டர்போ டீசல் இஞ்ஜின் 158,2 bhp திறனையும், அதிகபட்சமாக 385 என்எம் முறுக்கு விசையையும் உருவாக்கும்; மற்றுமொரு சக்தி வாய்ந்த 5-சிலிண்டர் 3.2 லிட்டர் டீசல் இஞ்ஜின் 197,1 bhp திறனையும், உச்சபட்சமாக 470 என்எம் முறுக்கு விசையையும் உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது.