என்டெவர் பற்றிய தகவல்கள் இப்போது போர்ட் இந்தியா வலைத்தளத்தில் பிரசுரிகப்படுள்ளது.
published on ஆகஸ்ட் 12, 2015 10:39 am by அபிஜித் for போர்டு இண்டோவர் 2015-2020
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
போர்ட் நிறுவனத்தின் வலுவான என்டெவர் இப்போது போர்ட் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலை தலத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.. இதன் மூலம் அறியப்படுவது என்னவென்றால் எதிர்பார்த்ததை விட விரைவில் இந்த கார்கள் அறிமுகமாகும் என்பதே. இதே போல் தான் பீகோ ஆஸ்பயர் கார்கள் இரண்டு மாதத்திற்கு முன் வலைத்தளத்தில் காட்டப்பட்டு இப்போது நாளை அறிமுகமாக உள்ளது.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இந்த இணைய பக்கத்தில் என்டெவரின் முக்கியமான அம்சங்கள் மட்டுமே குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ள நிலையில் சொல்லபடாத இன்னும் பல மாற்றங்களை அந்த வாகனத்தை சமீபத்தில் தாய்லாந்தில் ஓட்டிப் பார்த்த போது நாங்கள் நன்கு உணர்ந்தோம். உதாரணத்திற்கு சொல்வதென்றால் முன்பு பொறிக்கப்பட்டிருந்த எவரெஸ்ட் என்ற பெயர் டேஷ்போர்ட் மற்றும் இதர இடங்களில் இருந்தும் நீக்கப்படுள்ளதைப் பார்க்க முடிகிறது. அதற்கு பதிலாக காரின் பின் பக்கத்தில் உள்ளதைப் போன்ற என்டெவர் என்ற பெயர் பொறிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கலாம். இவைகளைத் தவிர, இந்த தாய்லாந்து மாடல் என்டெவரைப் போன்றே வலைத்தளத்தில் உள்ள எண்டீவர் மாடலும் உள்ளது என்று சொல்லலாம்.
இதையும் பாருங்கள்: 2015 என்டெவரின் புகைப்பட தொகுப்பு
இந்த புதிய என்டெவரைப் பற்றி பேசுகையில் இந்து இதற்கு முந்தைய என்டெவருடன் ஒப்பிடுகையில் தோற்றம் ,உட்புறம் மற்றும் என்ஜின் செயல்திறன் முதலியவற்றில் பல மடங்கு சிறந்ததாகவே தோன்றுகிறது.. ஈகோ ஸ்போர்டின் மூக்கு பகுதி சற்று தடித்து வளர்ந்து இருந்தால் எப்படி இருக்குமோ அது போலத் தான் இந்த அமெரிக்க தயாரிப்பாளரின் தடித்த என்டெவரின் (எஸ்யூவி) மூக்கு பகுதி உள்ளது எனலாம். முந்தைய மாடலை விட அழகாய் காட்சியளிக்கும் முன் மற்றும் பின்புற பம்பர்கள், அதே பழைய எண்டீவரின் முந்தைய வடிவில் பாக் விளக்குகள் முன்புற பம்பருடன் இணைக்கப்பட்டுள்ளன. பின்புறம் ரிப்லேக்டார்கள் இருப்பதை காண முடிகிறது. பக்கவாட்டில் கம்பீரமாக 20 அங்குல டைமண்ட் கட் சக்கரங்களும் நேர்த்தியான வலிவுகளுடன் இணைந்து வடிவமைப்புக்கு புத்துயிர் ஊட்டுகின்றன. . மேலும் என்ஜின் குரோம் எம்போஸ் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு வகையான என்ஜின் ஆப்ஷன் களுடன் இந்த புதிய என்டெவர் வெளிவர உள்ளது. 470 nm முறுக்கு விசையை வெளிபடுத்தக்கூடிய 5 சிலிண்டர் டீசல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் TDCi என்ற மற்றுமொரு ஆப்ஷன் என இரண்டு வகைகளில் அறிமுகமாக உள்ளது. முதல் வகை டீசல் என்ஜின் தானியங்கி மட்டும் கைகளால் இயக்கக் கூடிய கியர் அமைப்புடனும் இரண்டாவது வகை வெறும் கைகளால் மட்டும் இயக்கக் கூடிய கியர் அமைப்புடனும் வெளியிடப்படும்.
0 out of 0 found this helpful