டொயோட்டா ஹைபிரிட்: 8 மில்லியன் யூனிட் விற்பனையை கடக்க உதவிய மின் ஆற்றல்
published on ஆகஸ்ட் 24, 2015 09:11 am by manish
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: டொயோட்டா மோட்டார் கார்ப்ரேஷன், கடந்த 10 மாதங்களில் 8 மில்லியனுக்கும் அதிகமான ஹைபிரிட் வாகனங்களை விற்று, கடைசி மில்லியன்-யூனிட் மைல்கல்லை கடந்துள்ளது. நாம் இருக்கும் சுற்றுசூழல் மற்றும் உரிமையாளர்களுக்கு, இந்த 8 மில்லியன் என்ற எண்ணிக்கை எதை குறிக்கிறது என்பதை சிந்திப்பது அவ்வளவு எளிதல்ல. இது குறித்து டொயோட்டா நிறுவனம் ஆராய்ந்ததில், கடந்த ஜூலை 31 ஆம் தேதி வரையிலான கணக்குப்படி, ஹைபிரிட் வாகனங்களை போன்றே இடதேவையும், செயல்திறனையும் கொண்ட கியஸோலைன்-பவர்டு வாகனங்களை விட கூடுதலாக விற்பனையாகி, சுமார் 58 மில்லியன் டன்னுக்கு சற்று குறைவான கார்பன்-டை-ஆக்சைடு மாசு உருவாக்கத்தை தடுத்துள்ளது தெரியவந்தது. அதேநேரத்தில் தனது ஹைபிரிட் வாகனங்களின் மூலம் அதே அளவுகள் கொண்ட கியஸோலைன்-பவர்டு வாகனங்கள் பயன்படுத்த கூடிய ஏறக்குறைய 22 மில்லியன் கிலோலிட்டர் கியஸோலைன் பயன்பாட்டையும் தடுத்து நிறுத்தியதாக டொயோட்டா அளவீடுகளை காட்டியுள்ளது.
இந்தியாவை பொறுத்த வரை, நாட்டின் மொத்த கார்பன்-டை-ஆக்ஸைடு மாசு வெளியீட்டில், 8 மில்லியனுக்கும் குறைவான கார்பன்-டை-ஆக்ஸைடு மாசு, அதாவது ஏறக்குறைய 3.55% அளவு குறைக்கப்பட்டுள்ளது. இதை கியஸோலைனுக்கு மாற்றினால் அதே அளவு கொண்ட கியஸோலைன் வாகனங்களில் 22 மில்லியன் கிலோலிட்டர் கியஸோலைன் பயன்பாடு தேவையையும் இவை தடுத்துள்ளது. இது இந்தியாவின் ஆண்டு எண்ணெய் இறுக்குமதி கணக்கில், ஏறக்குறைய 13.3% ஆகும்.
இந்த மாத கணக்குபடி 90 நாடுகளுக்கும் மேலாக, டொயோட்டா 30 ஹைபிரிட் பயணிகள் கார் மாடல்கள் மற்றும் பிளெக்-இன் ஹைபிரிட் மாடலை விற்பனை செய்துள்ளது. டொயோட்டாவின் தற்போதைய புதிய மாடல்களுடன், கோரோலா ஹைபிரிட், லிவின் ஹைபிரிட் (சீனாவில் மட்டும்) மற்றும் RAV4 ஹைபிரிட்எம் ஆகிய புதிய ஹைபிரிட் மாடல்களையும் அறிமுகப்படுத்த டொயோட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் இதுவரை இல்லாத வகையில், அதிக சந்தைகளில் விற்பனை ஆகலாம்.
கடந்த 2013 ஆம் ஆண்டு டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM), முதல் முதலாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஹைபிரிட்டான காம்ரி ஹைபிரிட்டை அறிமுகப்படுத்தி, இந்தியாவில் ஒரு வரலாறு படைக்கப்பட்டது. ஏனெனில் டொயோட்டாவின் ஹைபிரிட் வாகனங்கள் தயாரிக்கப்பட்ட உலகின் 9வது நாடு அல்லது பிரதேசம் என்ற பெருமையை இந்தியா இதன்மூலம் பெற்றது. கடந்த மே மாதம் புதிய காம்ரி ஹைபிரிட் அறிமுகப்படுத்திய போது, காம்ரி ஹைபிரிட்டின் பிரபலம் அதிகரித்தது.
ஹைபிரிட் வாகனங்களை இணைத்து கணக்கில் கொண்டால், தற்போது இந்தியாவில் விற்பனையாகி உள்ள மொத்த காம்ரி வாகனங்களில் (கியஸோலைன் என்ஜின் வகைகள் உட்பட) காம்ரி ஹைபிரிட் வாகனங்கள் மட்டும் 80%க்கும் அதிகமாக பங்கு வகிக்கிறது என்பது தெரிய வருகிறது.
அதே நேரத்தில் ஹைபிரிட் தொழில்நுட்பத்தில் இருந்த நவீன தன்மைகளான மேம்பட்ட செயல்திறன், தயாரிப்பு வரிசையை விரிவுப்படுத்துதல், விலை குறைப்பு ஆகியவற்றை இணைத்து, நான்-ஹைபிரிட் கார்களின் விற்பனையையும் அதிகரிக்கும் முயற்சியில் டொயோட்டா ஈடுபட்டு வருகிறது.