சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

டிஸ்கவரி ஸ்போர்ட் ரூ. 46.10 லட்சத்திற்கு அறிமுகமானது

ஜெய்பூர்:

லேண்ட் ரோவர் நிறுவனம் டிஸ்கவரி ஸ்போர்ட் காரை ரூ. 46.10 லட்சத்திற்கு (எக்ஸ் - ஷோரூம் மும்பை) அறிமுகப்படுத்தியது. இந்த கரடு முரடான பாதைகளில் இலகுவாக பயணிக்கும் திறன் பெற்ற (ஆப் - ரோடர்) வாகனப் பிரிவை சேர்ந்த இந்த டிஸ்கவரி ஸ்போர்ட் CKD முறையில் ( தனி தனி உதிரி பாகங்களாக வேறு நாட்டில் தயாரிக்கப்பட்டு இங்கு இறக்குமதி செய்து பின் பாகங்கள் ஒன்றிணைக்கப்பட்டு விற்பனை செய்யும் முறை ) விற்பனைக்கு வந்துள்ளதால் விலை குறைவாகவே நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். மெர்சிடீஸ் பென்ஸ் M – கிளாஸ், பிஎம்டபுள்யூ X3, ஆடி Q5, மற்றும் வோல்வோ XC 60 ஆகிய வாகனங்களுடன் டிஸ்கவரி ஸ்போர்ட் போட்டியிடும்.

ஜகுவார் லேண்ட் ரோவர் இந்தியா லிமிடட் தலைவர் திரு. ரோஹித் சூரி பின்வருமாறு கூறினார்.” எங்களது தீவிர லேண்ட் ரோவர் விசிறிகளுக்கும் ஆர்வம் மிக்க வாடிக்கையாளர்களுக்கும் நான் இந்த தருணத்தில் நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன் ஏனெனில் எங்களது இந்த பன்முக சிறப்பம்சம் கொண்ட SUV வாகனத்திற்கு அவர்கள் ஏற்கனவே முன்பதிவு செய்து விட்டனர். டிஸ்கவரி ஸ்போர்ட் வாகனமானது அற்புத தொழில்நுட்பம், கம்பீரமான வடிவமைப்பு , அனைத்து வகையான சாலைகளிலும் சர்வ சாதரணமாக செல்லும் திறன் ஆகிய அனைத்து அம்சங்களின் அட்டகாசமான கலவை என்றே சொல்ல வேண்டும். இதே பிரிவை சேர்ந்த மற்ற வாகனங்கள் நெருங்கவே முடியாத, தனக்கென ஒரு புதிய ராஜாங்கத்தையே டிஸ்கவரி ஸ்போர்ட் உருவாக்கிக்கொண்டு விடும் என்று சொன்னால் மிகையாகாது. “

இந்த சிறப்பான SUV தன்னுடைய விசாலமான இடவசதி கொண்ட உட்புற வடிவமைப்பினாலும் , மற்ற ஏனைய இதே பிரிவை சேர்ந்த வாகனங்களில் இல்லாத தேவை படும் பொழுது அமர்வதற்கு மூன்றாவது வரிசையை ( 5+2) எர்வடுதிக் கொள்ள கூடிய வசதி ஆகியவற்றால் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. அதுமட்டுமின்றி காரின் உட்புறம் மிக நேர்த்தியாக பிரிமியம் தரத்தில் மேம்மையான தோலினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தனித்துவம் மிக்க டெர்ரைன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் மற்றும் தொடுதிரை மீடியா நாவிகஷன் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்

  • டிஸ்கவரி ஸ்போர்ட் முழுதும் உள்நாட்டிலேயே, பூனே வில் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • மிகவும் கம்பீரமான வடிவமைப்பு
  • நேர்த்தியான உட்புற வடிவமைப்பு மற்றும் தேவைகேற்ப மாற்றி அமைதுக்கொள்ளகூடிய 5+2 இருக்காய் அமைப்பு.
  • 17 ஸ்பீக்கர், 825W மெரிடியன் சரவ்ன்ட் ஒலி அமைப்பு.
  • 9 - வேக கியர் அமைப்பு
  • டேர்ரைன் ரெஸ்பான்ஸ்
  • பார்க் அசிஸ்ட்
  • 7 வெவ்வேறு வெளிப்புற நிறங்களிலும் உட்புறத்திலும் பலவேறு நிறக் கலவைகளிலும் கிடைக்கிறது.

தோற்றத்தை பொறுத்தவரை லேண்ட் போவர் வாகனத்தின் பொதுவான தோற்ற இலக்கணத்தின் சாராம்சத்தை இந்த வாகனத்திலும் இந்நிறுவனம் தக்கவைய்ஹுக் கொண்டுள்ளது. மேடான மூக்கு பகுதி , பகல் நேரத்திலும் ஒளிரும் LED விளக்குகள் மற்றும் க்லேம்ப்ஷெல் போன்நெட் பொதுவான லேண்ட் ரோவர் வாகனங்களை நினைவு படுத்துகிறது.

1750 rpm ல் அதிகபட்சமாக 400 Nm என்ற அளவுக்கு இழுவை திறனை 150 PS சக்தியுடன் வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த 2.2 லிட்டர் டீசல் எஞ்சின்கள் மூலம் இந்த வாகனங்கள் சக்தியூட்டப்படுகின்றன.ட்ரேன்ஸ்மிஷன் செயல்களை மேம்பட்ட நவீன 9 - வேக கியர் பாக்ஸ் பார்த்துக்கொள்கிறது. இந்த மேம்பட்ட கியர் அமைப்பு இந்த முற்றிலும் புதிய SUV வாகனம் 0 – 100 கி.மீ. வேகத்தை வெறும் 10.3 நொடிகளில் அடையச் செய்து பிரமிப்பூட்டுகிறது.

விலை விவரங்கள்

2.2L TD4 டீசல் S: Rs. 46.10 லட்சம் (5S)
2.2L TD4 டீசல் SE: Rs. 51.01 லட்சங்கள் (5S), 52.50 லட்சங்கள் (5+2S)
2.2L TD4 டீசல் HSE: Rs. 53.34 லட்சங்கள் (5S), 54.83 லட்சங்கள் (5+2S)
2.2L SD4 டீசல் HSE லக்ஸரி : Rs. 60.70 லட்சங்கள் (5S), 62.18 லட்சங்கள் (5+2S)

*மேலே குறிப்பிடப்பட்டுள்ளவை அனைத்தும் மும்பை எக்ஸ் - ஷோரூ விலைகள்

n
வெளியிட்டவர்

nabeel

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது Land Rover டிஸ்கவரி Sport 2015-2020

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை