டிசி அவந்தி 310 சிறப்பு எடிஷன் கார்கள் வெளியீடு
published on டிசம்பர் 14, 2015 01:04 pm by nabeel for டிஸி அவந்தி
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் : முழுவதும் இந்தியாவிலேயே உருவாக்கப்படும் ஸ்போர்ட்ஸ் காரான DC அவந்தி கார்களின் செயலாற்றல் மேம்படுத்தப்பட்டுள்ளது. DC அவந்தி 310 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார் வெறும் 31 மட்டுமே தயாரிக்கப்பட உள்ளது. பெயரில் உள்ள 310 என்ற எண் 310 பிஎச்பி யை குறிக்கிறது .இது வழக்கமான வெர்ஷனில் காணப்படும் பிஎச்பியை விட 60பிஎச்பி கூடுதல் ஆகும். அதே வழக்கமான வெர்ஷனில் உள்ள என்ஜின் ஹான் கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூன் செய்யப்பட்டு இந்த புதிய DC அவந்தி 310 கார்களில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த லிமிடெட் எடிஷன் கார்களின் விலை 44 லட்சங்கள், எக்ஸ் - ஷோரூம், வழக்கமான வெர்ஷனை விட சுமார் 8 லட்சங்கள் கூடுதலாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. ஏற்கனவே இந்த கார்களுக்கான முன்பதிவு (புக்கிங் )தொடங்கி விட்ட நிலையில் இந்த கார்கள் 2016 ஆம் ஆண்டு முதல் புக்கிங் செய்தவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது. 2012 ஆட்டோ எக்ஸ்போவில் முதல் முறையாக DC அவந்தி காட்சிக்கு வைக்கப்பட்ட பின் ஏப்ரல் 16, 2015 ல் முதல் DC அவந்தி கார் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்டது.
60 பிஎச்பி என்ஜின் திறன் உயர்த்தப்பட்டுள்ளது மட்டுமின்றி பார்பதற்கும் படு நேர்த்தியாக இருக்கும் வண்ணம் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கார்பன் - பைபர் முன்புற ஸ்ப்ளிட்டர், பின்புற டிப்யூசர், புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஸ்பாயிளர்கள் தனித்து தெரியும் வகையில் கொடுக்கப்பட்டுள்ள வண்ண கலவை மற்றும் கருப்பு வண்ணம் பூசப்பட்டுள்ள புதிய அல்லாய் சக்கரங்கள் ஆகியவை கண்களைப் பறிக்கின்றன. உட்புறத்தில் அல்காண்டரா தோலினால் போர்த்தப்பட்டுள்ள படு ஸ்போர்ட்டியான இருக்கைகள் மற்றும் ஸ்டேரிங் , மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள முற்றிலும் டிஜிடல் மயமான இன்ஸ்ட்ருமென்ட் டிஸ்ப்ளே ஆகியவை உட்புற தோற்றத்தை அசத்தலாக காட்டுகிறது. சாம்பல் மற்றும் பச்சை வண்ண கலவை , வெள்ளை மற்றும் நீல நிற கலவை , சாம்பல் மற்றும் ஆரஞ்ச் நிற கலவை என்று மூன்று வித்தியாசமான வண்ணங்களில் இந்த கார்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த லிமிடெட் எடிஷன் DC அவந்தி 310 கார்களில் வழக்கமான DC அவந்தி கார்களில் பயன்படுதப்பட்டு வரும் ரெனால்டில் உருவான 2.0 லிட்டர் நான்கு - சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் 310 பிஎச்பி அளவு கூடுதல் திறனை வெளியிடும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆறு - வேக , பேடல் ஷிப்டர்ஸ் உடன் கூடிய ஆட்டோமேடட் மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மணிக்கு 0-100 கி.மீ வேகத்தை வெறும் 6 நொடிகளில் இந்த கார்கள் தொட்டு விடுகிறது. மின்னணு முறையில் கட்டுபடுத்தப்பட்டு அதிகபட்சமாக மணிக்கு 200 கி.மீ.வேகத்தில் சீறிப் பாய்ந்து செல்கிறது இந்த DC அவந்தி 310 கார்கள். மேலும் இந்த லிமிடெட் எடிஷன் கார்களில் நல்ல விறைப்பான ஆன்டி -ரோல் பார்ஸ் பொருத்தப்பட்டுள்ளது மட்டுமின்றி 150மி.மீ வரை உயரம் குறைக்கப்பட்டு வழக்கமான DC அவந்தி கார்களில் உள்ளதை விட 20 மி.மீ சாலைக்கு நெருக்கமாக இருக்கும் வண்ணம் மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful