கிறிஸ்துமஸுக்கு முன்பே மேம்படுத்தப்பட்ட ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட் அறிமுகம்: உறுதி செய்யப்பட்டது

published on செப் 28, 2015 05:23 pm by manish for போர்டு இக்கோஸ்போர்ட் 2015-2021

  • 12 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்தியாவில், எக்கோ ஸ்போர்ட் SUV  காருக்கான புதிய மேம்பாடுகளை அறிமுகப்படுத்த, அமெரிக்க கார் தயாரிப்பாளரான ஃபோர்ட் நிறுவனம், முழுமையாக ஆயத்தம் செய்து கொண்டிருக்கிறது. புதிய மேம்பாடுகளுடன் வரும் இந்த காரை, 2015 வருட கிறிஸ்துமஸ் நேரத்தில் வெளியிட உத்தேசித்திருந்தது. ஆனால், தற்போது வந்த அறிக்கைகளின் படி, இந்த மாடலை கிறிஸ்துமஸூக்கு முன்பே அறிமுகப்படுத்த வேண்டும் என்று இந்நிறுவனம் உறுதிபடுத்தியிருப்பது தெரிகிறது. இந்த காரில் மெக்கானிக்கல் மேம்பாடுகள் தவிர, மேலும் பலவித அம்சங்களை ஃபோர்ட் நிறுவனம் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மேம்படுத்தப்பட்ட மாடலில் உள்ள மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், 100 PS  திறன் கொண்ட TDCi டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்ட புதிய ரகம் அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது, ஃபோர்ட் ஆஸ்பயர் மற்றும் ஃபோர்ட் பிகோ போன்ற மாடல்களில் உள்ள இஞ்ஜின்களைப் போலவே, இதன் செயல்பாடுகள் இருக்கும். இந்த இஞ்ஜின் ARAI-ஆல் வகுக்கப்பட்ட, லிட்டருக்கு 25.83 கிலோ மீட்டர் என்ற எரிபொருள் திறனைத் தரும் என்று இந்நிறுவனம் உறுதி கூறுகிறது. எனினும், இதன் எடை கணிசமாக அதிகரிக்கும் போது, செயல்திறன் மிகவும் பாதிக்கப்படும் என்று நாம் எண்ணுகிறோம். 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ சார்ஜ்ட் எக்கோ பூஸ்ட் இஞ்ஜின், இந்த புதிய மேம்படுத்தப்பட்ட மாடலிலும் தொடரும் என்று தெரிகிறது. மேலும், இதன் 1.5 லிட்டர் Ti-VCT பெட்ரோல் ரக காரில், 6 வேக பவர் ஷிப்ட் இரட்டை கிளட்ச் ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்படும்.

பாதுகாப்பு அம்சங்கள் என்று பார்க்கும் போது, அடிப்படை ரகத்தில் முன்புறத்தில் இரட்டை பாதுகாப்பு காற்றுப் பைகளை ஃபோர்ட் நிறுவனம் பொருத்தும் என்று தெரிகிறது. இது மிகவும் எளிதானது, ஏனெனில், ஏற்கனவே ஃபோர்ட் ஆஸ்பயர் இந்த சிறப்பம்ஸத்தைப் பெற்று வருகிறது. இவை தவிர, மேலும் சில சிறப்பம்ஸங்கள் ஆஸ்பயர் மற்றும் பிகோ கார்களில் உள்ளதைப் போலவே, புதிய எக்கோ ஸ்போர்ட்டிலும் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில், ஃபோர்டின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர்களையும் கவர்ந்த 4 அங்குல டிஜிட்டல் வண்ண திரை கொண்ட SYNC  இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பு முக்கியமான அம்சமாகும்.

மேலும், ஆஸ்பயர் கார்களில் விருப்பத் தெரிவாக வரும், பின்னால் சென்று நிறுத்துவதற்கு உதவக் கூடிய காமிரா (ரிவர்ஸ் பார்க்கிங் காமிரா) மற்றும் செயற்கைகோள் உதவியுடன் வரும் பயண வழி காட்டும் கருவி (சாட்டிலைட் நேவிகேஷன் சிஸ்டம்) ஆகியவை புதிய எக்கோ ஸ்போர்ட் காரில் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர, மறுவடிவமைக்கப்பட்ட பட்டன் மூலம் இயங்கும் பவர் விண்டோ கண்ட்ரோல், ஹேண்ட் பிரேக் லீவர் மற்றும் அழகிய க்ரோமிய வேலைப்பாடுகள் போன்றவை, இந்த புதிய எக்கோ ஸ்போர்ட் மேம்பாடுகளின் பட்டியலில் வரும் என்று தெரிகிறது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது போர்டு இக்கோஸ்போர்ட் 2015-2021

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience