சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

செவேர்லே ட்ரெயில்ப்ளேசர் ரூ. 26.4 லட்சங்களுக்கு அறிமுகமானது.

modified on அக்டோபர் 21, 2015 05:40 pm by konark for செவ்ரோலேட் ட்ரையல்

ஜெய்பூர்:

செவேர்லே நிறுவனத்தின் பெரிய ப்ரீமியம் SUV வகை காரான ட்ரெயில்ப்ளேசர் இன்று அறிமுகமாகிறது. இதற்கு முந்தைய அறிமுகமான கேப்டிவா எதிர் பார்த்த வெற்றியை பெறாமல் போன பிறகு , ப்ரீமியம் SUV பிரிவில் காலூன்ற ஜிஎம் நிறுவனம் செய்யும் இரண்டாவது முயற்சியாக இந்த டிரைல்ப்ளேசர் அறிமுகம் பார்க்கப்படுகிறது. இந்த புதிய டிரைல்ப்ளேசர் சிபியூ (CBU) முறையில் ( முற்றிலும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு ஓட்டுவதற்கு தயார் நிலையில் இறக்குமதி செய்யப்படும் முறை ) இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே ஒரு வேரியன்ட் ( ஆடோமேடிக், 4X2 ) மட்டும் தான் வெளியிடப்பட்ட உள்ளது என்பதும் கூடுதல் செய்தி. விலை ரூ. 29 லட்சங்கள் (எக்ஸ்- ஷோரூம் ) ஆக இருக்கும் என்றும் தெரிகிறது. 2000 rpm ல் 500 nm அளவிலான அசாத்தியமான டார்க் உற்பத்தி செய்யும் டியுராமாக்ஸ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளதே இந்த ப்ரீமியம் SUVயின் அதி முக்கிய சிறப்பம்சமாக சொல்லலாம். இந்த பிரிவில் உள்ள டொயோடா பார்சூனர் கார்களை விட 30PS/157nm அளவுக்கு கூடுதல் சக்தியை இந்த டிரைல்ப்ளேசர் கார்களின் என்ஜின் பெற்றுள்ளது. மேலும் கிரவுன்ட் கிளியரன்ஸ் 231 மீ மீ அளவு கொடுக்கப்பட்டிருப்பதும் விசேஷமான ஒரு அம்சமாகும்.

இந்த SUV வாகனம் 4,878மீ.மீ நீளம், 1,902மீ.மீ அகலம் , 1,847மீ.மீ உயரம் மற்றும் 3,096மீ.மீ. வீல்பேஸ் ஆகிய அளவுகளில் உள்ளது. இந்த ப்ரீமியம

SUV பிரிவிலேயே பெரிய வாகனம் என்ற சிறப்பையும் இந்த டிரைல்ப்ளேசர் பெறுகிறது. எத்தகைய கரடு முரடான பாதைகளிலும் சர்வ சாதரணமாக பாய்ந்து செல்லும் வகையில் மிக அதிகப்படியான கிரவுன்ட் க்லியரன்ஸ் 231மீ.மீ கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2,068 கிலோ வரை பாரத்தையும் சுமந்து செல்ல கூடியது இந்த புதிய டிரைல்ப்ளேசர்.

இதையும் படியுங்கள்: செவேர்லே 2017 காம்பேக்ட் பீட் செடான் பிரிவு கார்கள் அறிமுகமாவதை உறுதிபடுத்தியது.

வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரை செவேர்லே வாகனத்தில் நன்கு பார்த்து பழக்கப்பட்ட இரட்டை - போர்ட் க்ரில் அமைப்பு, கூடவே சற்று சாய்வான ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் மற்றும் குரோம் பூச்சு கொண்ட பாக் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பக்கவாட்டு தோற்றத்தில் பெரும்பகுதியை பெரிய அளவிலான ஜன்னல்கள் நிரப்பி விடுகிறது என்றே சொல்லலாம். பின்புற விண்ட்ஸ்க்ரீன் மற்றும் பெரிய அளவில் எடுப்பாக தெரியாத வீல் ஆர்செஸ் இணைக்கப்பட்டிருப்பதையும், பின்புறத்தை பொறுத்தமட்டில் குரோம் பூச்சுடன் கூடிய LED டெயில்லேம்ப் க்ளஸ்டர் போன்ற அம்சங்களும் வெளிப்புற தோற்றத்தில் குறிப்பிட்டு சொல்ல கூடியவை.டிரைல்ப்ளேசர் SUV வாகனத்தில் செவேர்லே நிறுவனத்தின் சிறப்பு அம்சமான மைலிங்க் 7- அங்குல டச்ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இந்போடைன்மென்ட் அமைப்பில் சேட்டிலைட் நேவிகேஷன், சென்சார்களுடன் கூடிய ரிவர்ஸ் பார்கிங் கேமெரா மற்றும் இன்னும் பல தகவல் இணைப்பு அம்சங்களும் உள்ளன.

இந்த பெரிய டிரைல்ப்ளேசர் டொயோடா பார்சூனர், மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட், ஹ்யுடை சாண்டா பி , இஸுசு எம்யு 7, ஹோண்டா சிஆர் - வி மற்றும் விரைவில் வர உள்ள போர்ட் எண்டீவர் வாகனங்களுடன் போட்டியிடும்.

இதையும் படியுங்கள் : ட்ரெயில்ப்ளேசர் அமேசான் மூலம் புக்கிங் செய்யப்படுள்ளது.

k
வெளியிட்டவர்

konark

  • 11 பார்வைகள்
  • 1 கருத்துகள்

Write your Comment மீது செவ்ரோலேட் ட்ரையல்

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
Rs.7.51 - 13.04 லட்சம்*
Rs.43.81 - 54.65 லட்சம்*
Rs.9.98 - 17.90 லட்சம்*
Rs.13.99 - 21.95 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை