2025 Lexus LX 500d -க்கான முன்பதிவுகள் தொடக்கம்
லேக்சஸ் எல்எக்ஸ் க்காக மார்ச் 06, 2025 08:22 pm அன்று dipan ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
2025 லெக்சஸ் LX 500d ஆனது அர்பன் மற்றும் ஓவர்டிரெயில் என்ற இரண்டு வேரியன்ட்களுடன் கிடைக்கும். இவை இரண்டிலும் 309 PS மற்றும் 700 Nm அவுட்புட்டை கொடுக்கும் 3.3 லிட்டர் V6 டீசல் இன்ஜின் உள்ளது.
-
புதிய ஓவர்டிரெயில் வேரியன்ட் ஆஃப்-ரோடை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது அர்பன் டிரிமை விட ரூ.12 லட்சம் விலை அதிகமாக உள்ளது.
-
இரண்டு வேரியன்ட்களிலும் மிகப்பெரிய கிரில், 3-பாட் LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் கனெக்டட் டெயில் லைட்கள் ஆகியவை உள்ளன.
-
அர்பன் வேரியன்ட் கிரில் மற்றும் பெரிய 22-இன்ச் டூயல்-டோன் ரிம்களில் சில்வர் எலமென்ட்கள் உள்ளன.
-
ஓவர்டிரெய்ன் டிரிம் கிரில்லில் கிரே கலர் எலமென்ட்கள் மற்றும் அனைத்து நிலப்பரப்புக்கும் ஏற்ற வகையில் ரப்பரால் மூடப்பட்ட சிறிய 18-இன்ச் கிரே அலாய்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
-
உள்ளே, இது 4-ஜோன் ஏசி மற்றும் 25-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் உட்பட 3 ஸ்கிரீன்கள் மற்றும் நிறைய வசதிகள் உள்ளன.
-
பாதுகாப்புக்காக 10 ஏர்பேக்குகள், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், TPMS மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.
-
இவற்றின் விலை ரூ.3 லட்சம் முதல் ரூ.3.12 ஆக் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.
லெக்ஸஸ் இப்போது அதன் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி -க்கான 2025 LX 500d ஆர்டர் புத்தகங்களைத் திறந்துள்ளது. இது பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட பிறகு 2025 ஆம் ஆண்டிற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த வேரியன்ட் -க்கான முன்பதிவுகளை லெக்ஸஸ் பிரீமியம் எஸ்யூவி -க்கான பிப்ரவரி நடுப்பகுதியில் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது.அவை இப்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 2025 லெக்ஸஸ் LX 500D முன்பு கிடைத்த அர்பன் வேரியன்ட்டுடன் கூடுதலாக ஒரு புதிய ஆஃப்-ரோடு-ஃபோகஸ்டு வேரியன்ட்டுடன் வருகிறது. விரிவான விலை விவரங்கள் இங்கே:
வேரியன்ட் |
விலை |
LX 500d அர்பன் |
ரூ.3 கோடி |
LX 500d ஓவர்டிரெயில் (புதியது) |
ரூ.3.12 கோடி |
அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை
அர்பன் வேரியன்ட்டின் விலை இந்த அப்டேட்டால் ரூ.12 லட்சம் வரை அதிகரித்துள்ளது.
வெளிப்புறம்
அர்பன் என்ற பெயர் குறிப்பிடுவது போல இது நகரத்தை மையமாகக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்யூவி -க்கு மிரட்டலான தோற்றத்தை அளிக்கும் சில்வர் எலமென்ட்களுடன் கூடிய பெரிய கிரில் உள்ளது. இது பம்பரின் கீழ் பகுதியில் LED DRL -கள் மற்றும் ஃபாக் லைட்களுடன் கூடிய LED ஹெட்லைட்கள் உள்ளன. 22-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் உள்ளன. டோர்களில் குரோம் ஸ்ட்ரிப் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் கனெக்டட் எல்இடி டெயில்லைட் செட்டப், ரூஃப் ஸ்பாய்லர், பின்புற வைப்பர், டெயில்கேட்டில் லெக்ஸஸ் பேட்ஜிங் மற்றும் பின்புறத்திற்கு கூடுதல் தோற்றத்தை வழங்கும் பிளாக்-அவுட் பின்புற பம்பர் ஆகியவை உள்ளன. எக்ஸ்ட்டீரியர் கலர் ஆப்ஷன்களில் சோனிக் குவார்ட்ஸ், சோனிக் டைட்டானியம் மற்றும் கிராஃபைட் பிளாக் ஆகியவையும் உள்ளன.
ஓவர்டிரெயில் வேரியன்ட் ஆஃப்-ரோடில் அதிக கவனம் செலுத்தும் வகையில் உள்ளது. இது கிரில் முந்தைய வேரியன்ட் போலவே உள்ளது. ஆனால் இது கிரே கலரில் தீமில் உள்ளது, மேலும் முன்பக்கத்தில் சில்வர் ஸ்கிட் பிளேட் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முக்கிய வேறுபாடு என்னவென்றால், இது சிறிய 18-இன்ச் அலாய் கிரே கலரில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இது ஆல் டெர்ரெயின் டயர்கள் மற்றும் முன் மற்றும் பின்புற டிஃபெரென்ஷியல் லாக்குகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. பின்புற வடிவமைப்பு அர்பன் வேரியன்ட் போலவே உள்ளது. இது மூன் டெசர்ட் கலர் ஆப்ஷன்களில் எக்ஸ்க்ளூஸிவ் ஆக கிடைக்கிறது.
இன்ட்டீரியர்
உள்ளே லெக்ஸஸ் LX 500D டூயல்-டோன் தீம் உடன் வருகிறது. அர்பன் வேரியன்ட்டிற்கான டான் மற்றும் மெரூன் ஷேடுகள் மற்றும் ஓவர்ட்ரெயில் வேரியன்ட்டிற்கான எக்ஸ்க்ளூஸிவ் டார்க் கிரீன் ஆப்ஷனும் உள்ளது அடங்கும். டாஷ்போர்டு செட்டப் LX 500d காரை போலவே உள்ளது. மேலும் இது எஸ்யூவி -யின் மற்ற செட்டப்களை கன்ட்ரோல் செய்ய 3-ஸ்போக் பிளாக் ஸ்டீயரிங், ஃப்ரீ-ஸ்டாண்டிங் டச் ஸ்கிரீன் மற்றும் அதன் கீழே மற்றொரு ஸ்கிரீன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஸ்கிரீன்களுக்கு கீழே AC கன்ட்ரோல்கள் மற்றும் சார்ஜிங் சாக்கெட்டுகளுக்கான பட்டன்கள் ஆகியவை உள்ளன. இந்த பேனல் ஒரு கியர் செலக்டர் ஸ்டாக், இரண்டு கப்ஹோல்டர்கள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் பேட் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் சென்டர் கன்சோலில் இணைக்கப்பட்டுள்ளது. சென்டர் கன்சோல் மைய ஆர்ம்ரெஸ்ட் ஆகவும் இருக்கும். மேலும் இதன் அடியில் ஒரு ஸ்டோரேஜ் ஸ்பேஸ் ஒன்றும் உள்ளது.
மேலும் படிக்க: இந்தியாவில் 2025 Volvo XC90 -கார் வெளியிடப்பட்டுள்ளது
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
வசதிகளை பொறுத்தவரையில் லெக்ஸஸ் LX 500d ஆனது 8 இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் வாகனத்தின் மற்ற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த மற்றொரு 7 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. 4-ஜோன் ஆட்டோ ஏசி, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD), பின்புற இருக்கை பயணிகளுக்கான டூயல் 11.6-இன்ச் ஸ்கிரீன்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 25-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஹீட்டட் மற்றும் மசாஜ் ஃபங்ஷன்களுடன் முன் பவர்டு இருக்கைகள் ஆகியவற்றையும் இது கொண்டுள்ளது.
10 ஏர்பேக்குகள், ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் (HAC), எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் செட்டப் (TPMS) மற்றும் ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்கள் மற்றும் வைப்பர்கள் ஆகியவையும் உள்ளன. ரேடார் அடிப்படையிலான அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங் உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களில் சிலவற்றையும் இது கொண்டுள்ளது.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
லெக்ஸஸ் LX 500d ஆனது 3.3 லிட்டர் டீசல் V6 இன்ஜினுடன் இரண்டு வேரியன்ட்களிலும் வருகிறது. அதன் விவரங்கள் கீழே:
இன்ஜின் |
3.3 லிட்டர் டீசல் வி6 இன்ஜின் |
பவர் |
309 PS |
டார்க் |
700 Nm |
டிரான்ஸ்மிஷன் |
10-ஸ்பீடு AT |
டிரைவ்டிரெய்ன் |
4-வீல் டிரைவ் |
போட்டியாளர்கள்
லெக்ஸஸ் LX 500D ஆனது ரேஞ்ச் ரோவர் மற்றும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் 300 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.