2016 ஆட்டோ எக்ஸ்போ: ஆடி நிறுவனம் மூன்று கார்களை காட்சிப்படுத்தும்
published on டிசம்பர் 31, 2015 03:26 pm by saad
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில், இந்தியாவில் ஒரு மாபெரும் நிகழ்ச்சி நடக்க உள்ளது, அது, நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியாகும். உலகில் உள்ள பிரபலமான வாகன தயாரிப்பாளர்கள், சிக்கன விலையில் கிடைக்கும் ஹாட்ச் பேக்குகள் முதல் பிரமாண்டமான SUV –க்கள் மற்றும் ஆடம்பர வாகனங்கள் வரை தங்களது அனைத்து வித தயாரிப்புகளையும், இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்த உள்ளனர். மொத்த வாகனங்களும் சேர்ந்து, 4 நாட்கள் நடைபெறப்போகும் இந்த நிகழ்ச்சியை, நிச்சயமாக அனல் பறக்கும் வெற்றி சரித்திரமாக மாற்றும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. முன்னணியில் உள்ள கார் தயாரிப்பாளர்கள் மத்தியில், ஜெர்மானியர்கள் தங்களது அதிநவீன தயாரிப்புகள் மூலம் எப்போதும் அனைவரையும் வசீகரப்படுத்துவர். இதைத்தான் ஆடி நிறுவனமும், இந்த நிகழ்ச்சியில் செய்யப் போகிறது. ஆடி இந்தியா நிறுவனத்தின் வெற்றிகரமான 2015 ஆண்டைத் தொடர்ந்து, இந்நிறுவனம் அடுத்து அறிமுகப்படுத்தவுள்ள கார்களின் பட்டியலை ஏற்கனவே தயாரித்துவிட்டது என்றே கூற வேண்டும். அவற்றில் ஒரு சில கார்கள், எதிர்காலத்தில் வாகன சந்தையில் பிரபலமாகப் போகும் கார்களின் மாடலாகவும், மற்றவை தற்போதுள்ள மாடல்களின் புதிய வெர்ஷனாகவும் இருக்கும் என்று அறியப்படுகிறது. வரவிருக்கும் 2016 இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் ஆடி நிறுவனம் எந்தெந்த கார்களை காட்சிப்படுத்தப் போகிறது என்பதை இப்போது பார்ப்போம்.
புத்தம் புதிய ஆடி R8
ஆடி இந்தியாவின் பட்டியலில் முதலாவது இடத்தைப் பிடிப்பது, ஏற்கனவே சந்தையில் உள்ள செயல்திறன் மிக்க சூப்பர்காரான ஆடி R8 மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும். இரண்டாவது ஜெனரேஷன் R8 கார் இப்போது மிகவும் கவர்ச்சிகரமாகவும், ஸ்டைலாகவும், அஜைலாகவும், மற்றும் சாலைகளில் சிறந்த முறையில் ஓடுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. வலுவான ஆற்றலுக்கு உதாரணமாக, இந்த காரின் உயர்தர வேரியண்ட்டான V10 மாடல் திகழ்கிறது என்றே கூறலாம், ஏனெனில், இதில் ரேஸ் டிராக்களில் ஓடுவதற்கேற்ற சிறப்பான சக்கரங்கள் சிறந்த முறையில் பொருத்தப்பட்டுள்ளன. குவாட்ரோ AWD அமைப்பு இதில் பொருத்தப்பட்டுள்ளதால், ரோட் ஹாண்டலிங் திறனில் எந்தவித குறைபாடும் இல்லாமல் இருக்கிறது என்பது, இதன் மற்றொரு சிறப்பம்சம் ஆகும். கிட்டத்தட்ட பாதி பாகங்கள், R8 LMS மாடலில் உள்ளதைப் போலவே, இந்த மாடலிலும் இருக்கின்றன. ஸ்டாண்டர்ட்டாக இந்த மாடலில் வரும் விர்சுவல் காக்பிட்டில், லேமான்ஸ் மாடலில் உள்ளதைப் போல, 20 பட்டன்கள் பொருத்தப்பட்ட ஸ்டியரிங் வீலும் இணைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஞ்ஜின்: 5.2 லிட்டர் V10
செயல்திறன்: 517.6 bhp சக்தி, 530 Nm டார்க்
ஆடி A8 L செக்யூரிட்டி
பிராங்க்பார்ட் மோட்டார் ஷோ 2015 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட புதிய ஆடி A8 L செக்யூரிட்டி மாடல், அடுத்து வரும் இந்தியா ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிப்படுத்தப்படும். இந்தியாவில், இந்த மாடல் அறிமுகமாவது இதுவே முதல் முறை. A8 L சேடான் காரின் ஆர்மர்டு வெர்ஷன்தான் இந்த புதிய A8 L செக்யூரிட்டி மாடல் என்று கூறப்படுகிறது. ஆர்மோர்டு செக்யூரிட்டி சேடானின் கட்டமைப்பைப் பொறுத்தவரை, இது மிகவும் உறுதியாக இருப்பதால், தற்போது உள்ள ERV 2010 விதிகளின் படி, VR9 லெவல் ஆஃப் ரெஸிஸ்டன்சுக்கு நிகராக இருக்கிறது. VR9 லெவல் என்பது VR7 லெவலில் இருந்து மேம்பட்டதாகும்.
அதிகப்படியான அலுமினியம் கொண்டு வடிவமைக்கப்பட்டதால், இதன் எடையை மற்ற கார்களோடு ஒப்பிடும் போது, மிகவும் குறைவாகவே உள்ளது. எடை குறைவாக இருப்பினும், வெடிகளின் தாக்கத்தைத் தாங்கி எதிர்த்து செல்லும் சோதனையில் வெற்றிகரமாகத் தேறிவிட்டது. அனைத்து சக்கரங்களும் இயக்கப்படும் AWD அமைப்பு பொருத்தப்பட்டு, சேசிஸ் பகுதி முழுவதும் உயர்தர பாதுகாப்பு தரத்திற்கு இணங்க வடிவமைக்கப்பட்ட முதல் ஆர்மோர்டு ஆடம்பர சேடான் கார் என்ற பெருமையை, புதிய ஆடி A8 L செக்யூரிட்டி கார் தட்டிச் செல்கிறது. ஆடி நிறுவனம், நெக்கார்சுல்ம் பிளாண்ட் மற்றும் டாப் சீக்ரட் ஆலை ஆகியவற்றோடு இணைந்து, A8 L செக்யூரிட்டி மாடலின் ஒவ்வொரு காரையும், அதன் நேரடி மேற்பார்வையில் உருவாக்குகிறது என்பது சிறப்பு செய்தியாகும்.
இஞ்ஜின்: 4.0 லிட்டர் V8 அல்லது 6.3 லிட்டர் FSI W12 பெட்ரோல்
செயல்திறன்: 435 HP மற்றும் 600 Nm டார்க் (4.0 லிட்டர்), 500 PS மற்றும் 625 Nm டார்க் (6.3 லிட்டர்)
ஆடி பிரோலோக் கான்செப்ட் கார்
ஷாங்காய் ஆட்டோ ஷோ கண்காட்சியில், இந்த ஆடி பிரோலோக் கான்செப்ட் கார் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. எதிர்காலத்தில் ஆடி கார்கள் எப்படி இருக்கும் என்பதற்கான உதாரண மாடல்தான், இந்த பிரோலாக் கான்செப்ட் கார். இந்த காரின் வடிவமைப்பு, ஆற்றல் மற்றும் கவர்ச்சிகரமான ஸ்போர்டிநெஸ் ஆகிய அனைத்தும், புதிய முறையில் உள்ளன. மேலும், இதில் இணைக்கப்பட்டுள்ள உயர்தர தொழில்நுட்பம், அனுதினத்திற்குத் தேவையான நடைமுறை செயல்திறனை நன்கு மேம்படுத்தித் தருகிறது. இந்த கான்செப்ட் காரில் 5 கதவுகள் பொருத்தப்பட்டு, இதன் பாடி அமைப்பு சற்றே உயர்த்தப்பட்டு, ஆடி நிறுவனத்தின் கார்களுக்கு ஒரு புது வடிவத்தைத் தருகிறது. குவாட்ரோ பெர்மனண்ட் ஆல் வீல் ட்ரைவ் அமைப்பு கொண்ட இந்த கார், இலகுவான எடையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கான்செப்ட்டில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த காரில் பயணம் செய்யும் டிரைவரும், கேபினில் உள்ள மற்ற பயணிகளும் டிஜிட்டல் முறையில் உரையாடிக் கொள்ளலாம்.
இஞ்ஜின்: பிளக்இன்-ஹைபிரிட்
செயல்திறன்: 734 HP மற்றும் 900 Nm டார்க்
மேலும் வாசிக்க