குஜராத்தில் உள்ள ராஜ்கோட்டில், ஆடியின் புதிய ஷோரூம் திறப்பு ஜெய்ப்பூர்
published on டிசம்பர் 10, 2015 03:12 pm by nabeel
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட்டில், ஆடி நிறுவனம் ஒரு புதிய ஷோரூமை திறந்துள்ளது. இது இந்த மாநிலத்தில் உள்ள இந்நிறுவனத்தின் 4வது ஷோரூம் என்பதால், குஜராத் மாநிலத்தில் இந்த பிராண்டின் கால்தடம் மேலும் உறுதி அடையும். அகமதாபாத் நெடுஞ்சாலையில், அதாவது NH 8B-யில் அமைந்துள்ள இந்த தொழிலகம் மொத்தம் 1,00,000 சதுர அடி பரப்பளவை கொண்டதாகும். இதில் ஏறக்குறைய 11,690 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் ஆடியின் ஒரு சர்வீஸ் யூனிட்டை கொண்டுள்ளது. மேலும் இதிலுள்ள 8 பேக்கள் மூலம் நாள் ஒன்றிற்கு 16 கார்களை சர்வீஸ் செய்ய முடியும்.
இதை ஆடி இந்தியாவின் தலைமை வகிக்கும் திரு.ஜோய் கிங் மற்றும் ஆடி ராஜ்கோட்டின் டீலர் பிரின்ஸிபாள் திரு.சமீர் மிஸ்ட்ரி ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த ஷோரூமில் ஆடி இந்தியாவின் முழு வரிசையும் காட்சிக்கு வைக்கப்பட்டு, ஒரு விற்பனை மையத்தையும் கொண்டிருக்கும். கார்களின் விற்பனைக்கு பிறகு வாடிக்கையாளர்களுக்கான முழு தீர்வுகளையும் அளிக்கும் வகையில், 2,830 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள வர்க்ஷாப்பில், ஒரு பாடி மற்றும் பெயிண்ட் மையமும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலகத்தில் உள்ள டெக்னீசியன்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு உலக-தரம் வாய்ந்த சர்வீஸை அளிக்க முடியும் என்பது உறுதி செய்யப்படுகிறது. ஆடி இந்தியாவின் தலைமை வகிக்கும் திரு.ஜோய் கிங் கூறுகையில், “குஜராத் மக்களிடம் பிரம்மாண்ட வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மேலும் இந்த மாநிலத்தில் உள்ள மக்களின் விருப்பம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. ஏற்கனவே ஆடியின் டீலர்ஷிப்கள் அகமதாபாத், வடோதரா மற்றும் சூரத் ஆகிய இடங்களில் உள்ள நிலையில், அதனுடன் ஆடி ராஜ்கோட்டும் இணைவதால், இம்மாநிலத்தில் எங்களின் நிலை மேலும் உறுதி அடைகிறது. ராஜ்கோட்டில் உள்ள எங்களின் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு ஆடி காரை சொந்தமாக கொண்டுள்ள அனுபவத்தை அளிப்பதில் தற்போது நாங்கள் பெருமை அடைகிறோம். இந்த உலக தரம் வாய்ந்த ஆடி ஷோரூமின் மூலம் குஜராத் சந்தையின் மீதான எங்களின் சமர்ப்பணத்தை மீட்டெடுக்க முடியும்” என்றார்.
இதையும் படியுங்கள்