ஆஸ்டன் மார்டின் DB9 GT பான்ட் எடிஷன் கார்களை வெளியிட்டது.

published on செப் 04, 2015 05:43 pm by nabeel for ஆஸ்டன் மார்டின் டிபி9

  • 12 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர்: ஆஸ்டன் மார்டின் காருக்கும் பிரிட்டிஷ் உளவாளி கதாபாத்திரத்திற்கும் இடையேயான நீண்ட நெடு நாளைய உறவு மேலும் வலுப்பெறும் விதமாக தனது DB வரிசை கார்களில் புதிதாக DB9 GT பான்ட் எடிஷன் கார்களை ஆஸ்டன் மார்டின் அறிமுகப்படுத்தியது. வெறும் 150 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளன. இந்த காரை வாங்கும் வாடிக்கையாளர் தன்னை ஒரு ஜேம்ஸ் பாண்ட் 007 ஆக உணரும் விதத்தில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. DB9 வரிசையில் இதுவே இறுதியான வெளியீடாக இருக்கும். 2016 முதல் DB11 வரிசை கார்கள் வெளியாகும்.

இந்த கார் ஒரு ஜேம்ஸ் பான்ட் வரிசை திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட கார் போன்ற தோற்றத்தை தருவதற்காக நிறைய சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. வெள்ளி நிறம், 007  சின்னம் மற்றும் காரின் எண், கதவில் உள்ள அலுமினியத்திலான சில் பிளேட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் 'பான்ட் எடிஷன்' என்ற தனித்துவமான பேட்ஜ் , புதிய முன்பக்க ஸ்ப்லிட்டர் மற்றும் கார்பன் பைபரிலான பின்பக்க டிப்யூசர்களையும் பார்க்க முடிகிறது. மேலும் இந்த அலுமினிய பயன்பாட்டை போனட், வாகனத்தின் பக்கவாட்டு பகுதி மற்றும் கிரில் போன்றவற்றிலும் பார்க்க முடிகிறது. காரின் உட்பகுதியில் 007  சின்னம் உட்பட நிறைய எம்ப்ராய்டரி வேலைப்பாடுகளை கொண்ட ஹெட் ரெஸ்ட் மற்றும் சிறப்பு பான்ட் - எடிஷன் ஸ்டார்ட் - ஆப் ஸ்க்ரீன் AMi  II  தொடுதிரை ஆஸ்டன் மார்டின் இன்போடைன்மன்ட் சிஸ்டத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது. இந்த கார் 10 

ஸ்போக், 20 - அங்குல கருப்பு அலாய் சகரங்கள் கொண்டு கம்பீரமாக பயணிக்கிறது.இந்த சிறப்பு வெளியீட்டில் மேலும் சிறப்பு சேர்க்கும் விஷயங்களாக 21 அங்குல க்ளோப் - ட்ராடர் ட்ராலி கேஸ் மற்றும் ஆஸ்டன் மார்டின் பெயர் பொறிக்கப்பட்ட பட்டையுடன் கூடிய ஜேம்ஸ் பான்ட் ஸ்பெஷல் எடிஷன் ஒமேகா கைகடிகாரம் போன்றவையும் வழங்கப்படுகின்றன. ஆஸ்டன் மார்டின் தலைவர் திரு, ஆன்டி பால்மர் ஒரு அறிக்கையில் பின்வரும் கருத்துக்களை கூறினார். “ அடுத்து வரும் பான்ட் திரைப்படத்தில் ஜேம்ஸ் பான்ட் DB10 காரை பயன்படுத்துகிறார். அதற்கான மும்முரமான வேலையில் நாங்கள் இருக்கின்ற இந்த சமயத்தில் இந்த DB9 GT பான்ட் சிறப்பு எடிஷன் கார்கள் எங்களுக்கு மிகவும் உதவிகரமாக அமையும். நாங்கள் பான்ட் 007 உடனான அற்புதமானை உறவை DB9 GT பான்ட் சிறப்பு எடிஷன் அறிமுகத்தின் மூலம் மேலும் வலுபடுத்தியுள்ளோம்.  

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது Aston Martin டிபி9

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகூபே சார்ஸ்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience