அசோக் லேலண்ட் எம்.பி.வி ஸ்டைல் மாடலை நிறுத்தி, வர்த்தக வாகனங்கள் மீது கவனத்தை திருப்பியது.
published on ஜூலை 13, 2015 05:25 pm by sourabh for அசோக் லைலேண்டு ஸ்டில்
- 34 Views
- ஒரு கருத்தை எழுதுக
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் தனது எம்.பி.வி ஸ்டைல் மாடல் தயாரிப்பை நிறுத்திவிட்டது. தற்பொழுது, இந்நிறுவனம் தனது முழு கவனத்தையும் வர்த்தக வாகனங்கள் தயாரிப்பதிலேயே செலவிட முடிவுசெய்துள்ளது. மேலும். அசோக் லேலண்ட்டின் இணை நிறுவனமான ஹிந்துஜா குரூப் மற்றும் ஜப்பானீஷ் நிஸ்ஸான் மோட்டார் கம்பெனியும் இணைந்து தயாரித்த நிஸ்ஸான் எவலியா மாடல் இப்போது எம்.பி.வி ஸ்டைல் என்று மாற்றி பெயரிடபட்டுள்ளது.
அசோக் லேலண்ட் நிர்வாக இயக்குனர் வினோத் கே தாசரி “நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை ஆகாதலால் எம்.பி.வி ஸ்டைல் உற்பத்தியை நிறுத்திவிட்டோம். நல்ல வாய்ப்புக்கள் இருந்தால் மீண்டும் சந்தையில் நுழைய கூடும்” என்று கூறினார்.
நிசான் எவலியா அடிப்படையில், எம்.பி.வி ஸ்டைல் மாடலும் 1.5 லிட்டர் K9K டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், ரெனால்ட் டஸ்ட்டர் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்திய லாட்ஜி எம்.பி.வி யும் இதே என்ஜின் மூலமாகவே இயக்கப்படுகிறது.
அசோக் லேலண்ட் தனது இணை நிறுவனத்தில் ரூ.224 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதுபற்றி கூறும்பொழுது, திரு.தாசரி, “இணை நிறுவனத்தின் பங்கு வைத்திருக்கும் முறையில் எந்த மாற்றங்களும் இல்லை,” என்று கூறினார்.
மேலும், அதன் பேருந்து விற்பனையை அதிகரிக்கும் முயற்சியில் அசோக் லேலண்ட் நிறுவனம் மத்திய கிழக்கு ஆப்ரிக்காவில் தனது பேருந்து ஆலைகளை நிர்மாணிக்க முடிவு செய்துள்ளது. பிரதமரின் ‘மேக் இன் இந்தியா ' திட்டத்தை ஆதரிக்கும் வகையில், அசோக் லேலண்ட் விரைவில் இந்தியாவில் தன் பேருந்து உற்பத்தி ஆலையினை தொடங்கும் என்று அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆலைக்கும் ரூ.20 கோடி முதலீடு தேவைப்படுவதால், இந்த நிதியாண்டில் அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கு ரூ.100 கோடி மூலதன செலவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அசோக் லேலண்ட் நிறுவனம் சந்தையில் தனது இடத்தை தக்க வைத்து கொள்ள முடியும் என்று முழு நம்பிக்கை வைத்துள்ளது, மேலும், வரும் மாதங்களில் எல்.சி.வி மாடல் விற்பனை இதற்கு வலுவூட்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது.