• English
  • Login / Register

2023 Toyota Vellfire: ரூ.1.20 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகம்

published on ஆகஸ்ட் 04, 2023 05:11 pm by rohit for டொயோட்டா வெல்லபைரே

  • 45 Views
  • ஒரு கருத்தை எழுதுக

புதிய வெல்ஃபயர் கார் 7 சீட்டர் மற்றும் 4 சீட்டர் லேஅவுட்டுகளில் வரும் ஹை மற்றும் விஐபி எக்ஸிகியூட்டிவ் லாஞ்ச் என இரண்டு வேரியன்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

2023 Toyota Vellfire

  • டொயோட்டா நிறுவனம் புதிய வெல்ஃபயர் காரின் விலை ரூ.1.20 கோடியில் இருந்து ரூ.1.30 கோடி வரை (எக்ஸ்ஷோரூம் இந்தியா- முழுவதும்) நிர்ணயித்துள்ளது.

  •  நான்காவது தலைமுறை MPV -க்கான முன்பதிவு இப்போது திறக்கப்பட்டுள்ளது, நவம்பரில் டெலிவரிகள் தொடங்கும்.

  •  மெல்லிய LED ஹெட்லைட்டுகள் மற்றும் DRLs, 19 இன்ச் கருப்பு அலாய் வீல்கள் மற்றும் இணைக்கப்பட்ட LED டெயில்லைட்டுகள் ஆகியவை வெளிப்புற சிறப்பம்சங்களாகும்.

  •  14 இன்ச் தொடுதிரை கொண்ட சிறிய மற்றும் சுத்தமான கேபின் லேஅவுட்டைக் கொண்டுள்ளது.

  •  மசாஜ் செயல்பாடு மற்றும் பன்முக அட்ஜஸ்மென்ட்டுகளுடன் 4 சீட்டர் பதிப்பில் ஓட்டோமான் இருக்கைகள் உள்ளன.

  •  14 கலர் ஆம்பியன்ட் லைட்டிங், டூயல் பேனல் சன்ரூஃப் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் ஆகிய அம்சங்களும் கொடுக்கபட்டுள்ளன.

  •  e-CVT உடன் இணைக்கப்பட்ட 2.5 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் பவர்டிரைன் லிட்டருக்கு 19.28 கிமீ மைலேஜ் தரும்.

நான்காம் தலைமுறை டொயோட்டா வெல்ஃபயர் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சொகுசு MPV -க்கான முன்பதிவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் இது இரண்டு வேரியன்ட்களில் வழங்கப்படுகிறது: ஹை மற்றும் விஐபி எக்ஸிகியூட்டிவ் லாஞ்ச். புதிய வெல்ஃபயர் காரின் விலை ரூ.1.20 கோடி முதல் ரூ.1.30 கோடி வரை (எக்ஸ் ஷோ -ரூம் இந்தியா) இருக்கும் . புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட MPV முந்தைய வெர்ஷனை விட கிட்டத்தட்ட ரூ.23 லட்சம் கூடுதலான விலையில் கிடைக்கிறது.

முன்பை விட உறுதியான தோற்றம்

2023 Toyota Vellfire

டார்க் க்ரோம் ஸ்லாட்களுடன் கூடிய இதன் பிரம்மாண்டமான கிரில், சமீபத்திய டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி -யில் உள்ளதைப் போலவே தோற்றமளிக்கிறது. புதிய வெல்ஃபயர் காரில் மெல்லிய 3 பீஸ் LED ஹெட்லைட்டுகள் மற்றும் DRLs வழங்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் பம்பரில் குரோம் லிப் மற்றும் ஃபாக் லைட்களை உள்ளடக்கிய பெரிய ஏர் டேம்கள்  ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

2023 Toyota Vellfire rear

வெல்ஃபயரின் தோற்றம் MPV போன்ற ஈர்ப்பை தக்க வைத்துக் கொள்கிறது, அதே நேரத்தில் இப்போது B-தூணில் Z- வடிவ பாகம் உள்ளது, இது ஜன்னல் வரிசையில் கிங்க் போல செயல்படுகிறது. இந்த கோணத்தில் இருந்து பார்த்தால், அதன், பிளாக் 19 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் MPV -யின் விரிவான நீளம் மற்றும் வீல்பேஸ் முறையே 5.01 மீ மற்றும் 3 மீ ஆகியவை வலுவானது போன்று தோன்றும். பின்புறத்தில், புதிய வெல்ஃபயர் விங் ஷேப் போர்வை மற்றும் கனெக்ட்டட் LED டெயில்லைட்டுகள், ஒரு பெரிய, நிமிர்ந்த டெயில்கேட் மற்றும் "வெல்ஃபயர்" சின்னத்துடன் வருகிறது.

இது மூன்று வெளிப்புறம் மூன்று கலர் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன: பிளாக், ப்ரீசியஸ் மெட்டல் மற்றும் பிளாட்டினம் ஒயிட் பியர்ல்.

மேலும் படிக்கவும்: புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா லேண்ட் க்ரூஸர் ப்ராடோ பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்

கூடுதலான பிரீமியம் கேபின் அனுபவம்

2023 Toyota Vellfire cabin

டொயோட்டா நிறுவனம் வெல்ஃபயர் கேபினின் பிரீமியத்தை மினிமலிசம் மற்றும் கிளீனர் லேஅவுட்டை வழங்குவதன் மூலம் அதிகரித்துள்ளது.  MPV -யின் புதிய பதிப்பில் காப்பர் ஆக்ஸன்ட்களுடன் கூடிய புதிய 3-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் உள்ளது. அதன் கேபினை மூன்று தீம்களில் காணலாம்: சன்செட் பிரவுன், பெய்ஜ் மற்றும் பிளாக்.

2023 Toyota Vellfire seats

விஐபி எக்ஸிகியூட்டிவ் லாஞ்ச் எனப்படும் டாப்-ஸ்பெக் நான்கு இருக்கை காரை நீங்கள் தேர்வு செய்தால் புதிய வெல்ஃபயரின் மிக முக்கியமான விவரமாக அதன் இரண்டாவது வரிசை இருக்கைகள் இருக்கும். இது நடுத்தர வரிசையில் ஒட்டோமான் இருக்கைகளை வழங்குகிறது, மேலும் அட்ஜஸ்ட்மென்ட் மற்றும் மசாஜ் போன்ற பல செயல்பாடுகளை வழங்குகிறது. வெல்ஃபயரின் இரண்டாவது வரிசை இருக்கைகள் உங்கள் அனைத்து நெடுஞ்சாலை பயணங்களிலும் நீங்கள் வசதியாக இருப்பதை உறுதி செய்கின்றன. நீங்கள் இங்கே சலிப்பாக உணரும் போது பொழுது போக்கிற்காக டொயோட்டா இரண்டு 14 இன்ச் பின்புற டிஸ்பிளேவை (ஒவ்வொரு பயணிக்கும் ஒன்று) கொடுத்துள்ளது.

மேலும் படிக்கவும்: டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவை இப்போது ஆம்புலன்சாக மாற்றியமைக்கலாம்

ஏராளமான அம்சங்கள்

2023 Toyota Vellfire touchscreen and digital driver display

புதிய தலைமுறை கேபினின் கவனத்தை ஈர்க்கும் அம்சம் 14 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகும், இது இந்தியாவில் உள்ள டொயோட்டா கார்களில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சென்ட்ரல் டிஸ்ப்ளேவாகும். முழுமையான டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, டூயல் பேனல் சன்ரூஃப், வயர்லெஸ் போன் சார்ஜிங் மற்றும் 60+ கனெக்டட் கார் தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. மெமரி செயல்பாட்டுடன் கூடிய 8 வழி பவர்-அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் இருக்கை, 14 கலர் ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் 15-ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டம் ஆகியவையும் இதில் உள்ளன.

இதன் பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரையில் ஆறு ஏர்பேக்குகள், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், லேன்-கீப் அசிஸ்ட், வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா மற்றும் நான்கு டிஸ்க் பிரேக்குகளையும் கொண்டுள்ளது.

பெட்ரோல்-ஹைபிரிட் பவர் 

2023 Toyota Vellfire petrol-hybrid powertrain

இந்தியாவைப் பொறுத்தவரை, டொயோட்டா நான்காவது தலைமுறை வெல்ஃபயர் காரில் 193PS மற்றும் 240Nm கொடுக்கும் 2.5 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரிட் பவர்டிரெயின் பொருத்தப்பட்டுள்ளது, அது e-CVT. உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன் வலுவான ஹைபிரிட் அமைப்புக்கு நன்றி, இது லிட்டருக்கு 19.28 கிமீ சராசரி  மைலேஜை தரும் என டொயோட்டா தெரிவிக்கிறது.

இது எதனுடன் போட்டியிடுகிறது?

புதிய வெல்ஃபயர் காருக்கு இப்போதைக்கு நேரடி போட்டியாளர்கள் யாரும் இல்லை என்றாலும், இந்தியாவில் வரவிருக்கும் 2024 மெர்சிடிஸ் பென்ஸ் V-க்ளாஸ் கார் போட்டியாக இருக்கும்  . புதிய டொயோட்டா வெல்ஃபயர் காரின் டெலிவிரி 2023 நவம்பரில் இருந்து தொடங்கும்.

மேலும் படிக்கவும்: வெல்ஃபயர் ஆட்டோமெட்டிக்   

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Toyota வெல்லபைரே

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience