2017 ஆடி S4 மாடலில் சூப்பர் சார்ஜெர், மேனுவல் கியர் அமைப்பு மாற்றப்பட்டு டர்போ சார்ஜெர் வசதி இணைக்கப்பட்டுள்ளது.
published on செப் 21, 2015 08:18 pm by bala subramaniam
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
சென்னை :
2015 ப்ரேன்க்பர்ட் மோட்டார் ஷோவில் ஆடி நிறுவனம் தனது ஆடி S4 செடான் மற்றும் S4 அவான்ட் கார்களை காட்சிக்கு வைத்தது. இந்த புதிய ஆடி S4 கார்களில் S – ஸ்பெசிபிக் பின்புற டிப்யூசர் உடன் கூடிய குவாட் எக்ஸ்ஹாஸ்ட் டெயில் பைப் , வெளிப்புறதில் உள்ள ரியர் வியூ கண்ணாடிகளில் அலுமினிய இணைப்புகள் என சிறிய அளவிலான மாற்றங்களே செய்யப்பட்டுள்ளன. மற்றபடி பார்வைக்கு இதற்கு முந்தைய S4 கார்களைப் போன்ற தோற்றத்தையே கொண்டுள்ளது. ஆனால் அதி முக்கியமான மாற்றம் என்று பார்த்தால் தற்போது உள்ள மாடலில் காணப்படும் சூப்பர் சார்ஜிங் தொழில்நுட்பம் மாற்றப்பட்டு டர்போ சார்ஜிங் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.
2017 ஆடி S4 புதிதான மேம்படுத்தப்பட்ட டர்போசார்ஜிங் வசதியுடன் கூடிய V6 பெட்ரோல் என்ஜின் மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த 3.0 லிட்டர் என்ஜின் 1300 - 4500 rpm என்ற அளவிலான சுழற்சியில் 354 hp என்ற அளவிலான குதிரை சக்தியையும் 500 nm அளவிலான முடுக்கு விசையையும் வெளிப்படுத்தி தற்போதைய ஆடி S4 கார்களை பின்னுக்கு தள்ளுகிறது.
எட்டு வேக டிப்ட்ரானிக் ட்ரேன்ஸ்மிஷன் வசதி கொண்ட இந்த புதிய 2017 S4 கார் மணிக்கு 0 – 100 கி.மீ. வேகத்தை வெறும் 4.7 நொடிகளில் (0.2 நொடிகள் தற்போதய மாடலை விட அதிகம் ) அடைந்து விடுகிறது. மேலும் அதிகபட்சமாக மின்னணு முறையில் கட்டுபடுத்தப்பட்டு மணிக்கு 250 கி.மீ. வேகம் வரை பாய்ந்து செல்கிறது.
உட்புறத்தில் பந்தய கார்களை போன்ற இருக்கை அமைப்புகள் , உயர்ரக நப்பா தோல் மற்றும் அலகான்ட்ரா கலவையினால் மூடப்பட்டு ரோடோர் பழுப்பு மற்றும் எபாணி சிகப்பு நிறங்களில் நேர்த்தியாக்கப்பட்டிருகின்றன.
இவைகளைத் தவிர ஆடி விர்சுவல் காக்பிட் , முழுமையான 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் மற்றும் தேவைகேற்ப இணைத்துக்கொள்ள கூடிய MMI டச்உடன் கூடிய MMI ஆபரேடிங் சிஸ்டம் மற்றும் 8.3 அங்குல மானிடர், சூம் மற்றும் ஸ்க்ரால் செய்வதற்கான புஷ் பொத்தான் உடன் கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட டச்பேட் அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.