2016 டொயோடா இன்னோவா இந்தோனேசியாவில் அறிமுகமானது
டொயோட்டா இனோவா க்காக நவ 23, 2015 05:11 pm அன்று raunak ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 24 Views
- 6 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
புதிய இன்னோவா பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு ,அடுத்த வருடம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெய்பூர் : பல தரப்பட்ட செய்திகள் கசிந்த பின்பு, இறுதியில் இரண்டாவது தலைமுறை புதிய டொயோடா இன்னோவா இந்தேனேஷியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. MPV பிரிவில் உலக அளவில் இது டோயோடாவின் முதல் அறிமுகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய இன்னோவா கார்களின் அடிப்படை பெட்ரோல் வெர்ஷனின் விலை IDR 282 மில்லியன் ( ஏறக்குறைய ரூ. 13.60 லட்சங்கள் ) என்றும் அடிப்படை டீசல் வெர்ஷன்கள் IDR 310.1 மில்லியன் ( ஏறக்குறைய ரூ. 14.95 லட்சங்கள் ) என்றும் தெரியவந்துள்ளது. இந்த புதிய இன்னோவா பிப்ரவரியில் நடைபெற உள்ள இந்தியன் ஆட்டோ ஷூவில் காட்சிக்கு வைக்கப்பட்டு அதற்கு பின்னர் அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிகிறது.
இந்த புதிய இன்னோவா தற்போதைய இன்னோவாவை விட விலை சற்று கூடுதலாக இருக்கும் என்று தோன்றுகிறது, இந்தோனேஷியாவில் பெட்ரோல் மாடல் IDR 282 முதல் 384.8 மில்லியன் ( ஏறக்குறைய ரூ. 13.60 முதல் Rs. 18.6 லட்சங்கள் ) வரையிலும் , டீசல் - IDR 310.1 முதல் IDR 423.8 மில்லியன் ( ஏறக்குறைய ரூ. 14.95 முதல் ரூ.. 20.43 லட்சங்கள்) வரையிலும் இருக்கலாம் என்று தெரிய வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை முந்தைய இன்னோவா கார்களின் பெட்ரோல் வெர்ஷன் , அதிகமாக மக்களை கவர தவறியதால் நிறுத்தப்பட்டு வெறும் டீசல் வெர்ஷன்கள் மட்டுமெ தயாரித்து விற்பனை செய்யப்பட்டன. இந்த அனுபவத்தால் டொயோடா நிறுவனம் இந்த புதிய இரண்டாம் தலைமுறை டொயோடா கார்களை டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இயந்திர ரீதியில் , முற்றிலும் புதிய 2.4 லிட்டர் - 2 GD FTV 4 இன்லைன் சிலிண்டர், VNT இன்டர்கூலர் உடன் கூடிய 16 வால்வ் DOHC என்ஜின் இந்த புதிய இன்னோவாவில் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த 2,393 சி,சி மோட்டார் 1,200-2,800 rpm ல் 342 Nm அளவு டார்கையும் , 3400 rpm ல் 149 PS அளவு சக்தியையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. ட்ரேன்ஸ்மிஷன் அம்சத்தைப் பொறுத்தவரை 5 - வேக கியர் அமைப்பு அனைத்து மாடல்களிலும் கொடுக்கப்பட்டிருந்தாலும் , கூடுதல் ஆப்ஷனாக 6- வேக கியர் அமைப்பும் வாடிக்கையாளரின் தேவைகேற்ப வழங்கப்படும் என்று தெரிகிறது.
இதையும் படியுங்கள்