• English
  • Login / Register

2015 பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் புதிய டிகுவான் காரை காட்சிக்கு வைக்கிறது வோல்க்ஸ்வேகன்

published on செப் 15, 2015 03:16 pm by nabeel for வோல்க்ஸ்வேகன் டைகான் 2017-2020

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

வோல்க்ஸ்வேகன் நிறுவனம் இந்த SUV-யை இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஜெய்ப்பூர்:

இந்த மாதம் 17 முதல் 27 ஆம் தேதி வரை நடக்க உள்ள பிராங்பேர்ட் IAA-வில், தனது புதிய டிகுவான் காரை காட்சிக்கு வைக்க உள்ளதாக, வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்போர்ட்டி டிகுவான் R-லைன், கிளாஸிக் ஆன்-ரோடு மாடல் மற்றும் ஆஃப்-ரோடு பதிப்பு என்ற மூன்று பதிப்புகளில் டிகுவான் கிடைக்கும். இதனோடு 160kW/218PS சிஸ்டம் பவர் கொண்ட டிகுவான் GTE என்ற பிளெக்-இன் ஹைபிரிட் தொழில்நுட்ப பதிப்பும் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

8 வேறுபட்ட என்ஜின் வகைகளை கொண்டுள்ள புதிய டிகுவானில், 85 kW / 115 PS மற்றும் 176 kW / 240 PS என்ற அளவுகளுக்கு இடைப்பட்டு ஆற்றல் வெளியீடு கிடைக்கிறது. எரிபொருள் சிக்கனத்தின் அளவு குறித்து எந்த அதிகாரபூர்வமான தகவல்களும் வெளியாகாத நிலையில், புதிய சக்தி வாய்ந்த டிகுவான், இதற்கு முந்தைய மாடல்களை விட 24 சதவீதம் அதிக எரிபொருள் சிக்கனத்தில் ஈடுபடும் என்று இந்த ஜெர்மன் வாகன தயாரிப்பு நிறுவனம் உறுதி அளிக்கிறது. இந்த SUV-ல் புதிய 4மோஷன் ஆக்டிவ் கன்ட்ரோல் 4-வீல் டிரைவ் சிஸ்டம் பயன்படுத்தி உள்ளதால், எல்லா வகையான ஓட்டும் சூழ்நிலைகளுக்கும் ஏற்ப மாற்றிக் கொள்வது எளிதாக உள்ளது. இந்த SUV-யின் முன்புறம், தரமான சிட்டி எமர்ஜென்ஸி பிரேக்கிங் மற்றும் பாதசாரிகள் கண்காணிப்பு, லென் அசிஸ்ட் மற்றும் ஆட்டோமேட்டிக் போஸ்ட்-கோலிஸன் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும், வோல்க்ஸ்வேகன் SUV-களில் முதல் முறையாக, இது MQB (மாடுலார் டிரான்ஸ்வெர்ஸ் மேட்ரிக்ஸ்) பிளாட்பாமை அடிப்படையாக கொண்டுள்ளது. அதாவது, சுற்றுலா செல்லும் குடும்பத்தினருக்கு உதவும் வகையில், 2,500 கிலோவுக்கும் அதிகமான எடையை சுமக்கத்தக்க தகவமைப்பைக் கொண்டு டிகுவான் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த டிகுவானின் புதிய பதிப்பு, முந்தைய பதிப்பை விட 50 கிலோ எடை குறைவாக உள்ளது. இதன்மூலம் 615 லிட்டர் பூட் இடத்தில் உட்கொள்ளும் அதிகளவிலான சுமைகளை ஏற்றி செல்ல முடிகிறது. மேலும் பின்புற சீட்களை மடக்கினால், இந்த பூட் கொள்ளளவை 1655 லிட்டர் வரை அதிகரிக்க முடியும். இதன் மூலம் முந்தைய மாடல்களை விட, இதில் 145 லிட்டர் அதிக இடவசதி கிடைத்துள்ளது. ஆன்லைன் உதவியுடன் கூடிய தானியங்கி விபத்து குறிப்புணர்த்தி (ஆட்டோமேட்டிக் ஆக்ஸிடேட் நோட்டிஃபிக்கேஷன்), ஆன்லைன் டிராஃபிக், பார்க்கிங் ஸ்பேஸ் இன்ஃபோ மற்றும் வாகன நிலவர தகவல் (வெஹிக்கிள் ஸ்டேடஸ் ரிப்போர்ட்) ஆகிய அம்சங்களையும் டிகுவானில் காணலாம். ஆப் கனேக்ட் மற்றும் மீடியா கன்ட்ரோல் ஆப் மூலம் இந்த காரை, ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லேட்கள் ஆகியவற்றுடன் இணைக்க முடியும். இதன் மூலம் காரை ஓட்டும் போதே, போனில் உள்ள காரியங்களை இயக்குவது எளிதாக உள்ளது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Volkswagen டைகான் 2017-2020

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience