ஹூண்டாய் எக்ஸ்டர் முன்புறம் left side imageஹூண்டாய் எக்ஸ்டர் side காண்க (left)  image
  • + 13நிறங்கள்
  • + 37படங்கள்
  • shorts
  • வீடியோஸ்

ஹூண்டாய் எக்ஸ்டர்

Rs.6 - 10.51 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
காண்க ஏப்ரல் offer

ஹூண்டாய் எக்ஸ்டர் இன் முக்கிய அம்சங்கள்

இன்ஜின்1197 சிசி
பவர்67.72 - 81.8 பிஹச்பி
டார்சன் பீம்95.2 Nm - 113.8 Nm
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
டிரைவ் டைப்ஃபிரன்ட் வீல் டிரைவ்
மைலேஜ்19.2 க்கு 19.4 கேஎம்பிஎல்
  • முக்கிய விவரக்குறிப்புகள்
  • டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்

எக்ஸ்டர் சமீபகால மேம்பாடு

  • மார்ச் 20,2025: ஹூண்டாய் நிறுவனம் அதன் அனைத்து கார்களுக்கும் 3 சதவீதம் விலை உயர்வை அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு 2025 ஏப்ரல் முதல் அமலுக்கு வரும்.

  • மார்ச் 17, 2025: ஹூண்டாய் எக்ஸ்டருக்கு சராசரியாக 2 மாதங்கள் வெயிட்டிங் பீரியட் உள்ளது. 

  • மார்ச் 07, 2025: ஹூண்டாய் மார்ச் மாதத்தில் எக்ஸ்டரில் ரூ.35,000 வரை தள்ளுபடி கொடுக்கிறது.

  • அனைத்தும்
  • பெட்ரோல்
  • சிஎன்ஜி
எக்ஸ்டர் இஎக்ஸ்(பேஸ் மாடல்)1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு6 லட்சம்*காண்க ஏப்ரல் offer
எக்ஸ்டர் இஎக்ஸ் ஆப்ஷனல்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு6.56 லட்சம்*காண்க ஏப்ரல் offer
RECENTLY LAUNCHED
எக்ஸ்டர் இஎக்ஸ் dual சிஎன்ஜி1197 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 19.4 கிமீ / கிலோ1 மாத காத்திருப்பு
7.51 லட்சம்*காண்க ஏப்ரல் offer
எக்ஸ்டர் எஸ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.4 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு7.73 லட்சம்*காண்க ஏப்ரல் offer
எக்ஸ்டர் எஸ் பிளஸ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 19.2 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு7.93 லட்சம்*காண்க ஏப்ரல் offer
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

ஹூண்டாய் எக்ஸ்டர் விமர்சனம்

Overview

இன்றைக்கு, ஹூண்டாய் எக்ஸ்டர்  காரானது கிராண்ட் i10 நியோஸுடன் கொண்டுள்ள தொடர்பை மறந்துவிடுவோம் சந்தையில் ஏதாவது போட்டியாளர் இருக்கிறார் என்பதையும் மறந்துவிடுவோம். நீங்கள் எக்ஸ்டர் மீதுதான் ஆர்வமாக உள்ளீர்கள். ஆகவே இந்த மைக்ரோ -எஸ்யூவியில் உள்ள நிறைகள் மற்றும் குறைகள் குறித்து கவனம் செலுத்துவோம், மேலும் இது உங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாக இடம்பிடிப்பதற்கான சாத்தியம் உள்ளதா இல்லையா என்பதையும் நாம் கண்டுபிடிப்போம்.

மேலும் படிக்க

வெளி அமைப்பு

இது ஒரு எஸ்யூவி -போல் இல்லை ஆனால் எஸ்யூவி -யின் ஸ்கேல் மாடல் போல் தோற்றமளிக்கிறது. இது பெரும்பாலும் ஹேட்ச்பேக் போன்ற செங்குத்தான ரேக் செய்யப்பட்ட விண்ட்ஸ்கிரீனுடன் தொடர்புடையது. ஆயினும்கூட, எக்ஸ்டெர் அதன் வடிவமைப்பில் நிறைய எஸ்யூவி வடிவத்தை கொண்டுள்ளது. கூடுதலான தட்டையான மேற்பரப்புகள், விரிவடைந்த சக்கர வளைவுகள், சுற்றிலும் பாடி கிளாடிங் மற்றும் ரூஃப் ரெயில்கள் உள்ளன, அவை முரட்டுத்தனமான தோற்றத்திற்கு உதவுகின்றன. ஆனால் ஃபன் -னான பகுதி வடிவமைப்பில் உள்ளது. போலியான ரிவெட்டுகளுடன் கீழே ஒரு ஸ்கிட் பிளேட் உள்ளது. நவீன கால எஸ்யூவி -களைப் போலவே, கீழே பெரிய ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் LED H- வடிவ DRLகளைப் பெறுவீர்கள்.

பக்க வாட்டில், வடிவமைப்பானது வித்தியாசமாகத் தோன்றினாலும், பாக்ஸி தோற்றத்தைக் கொடுக்க முயற்சித்துள்ளனர். 15-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் நன்றாக இருக்கும் மற்றும் டூயல்-டோன் நிறமும் கொஞ்சம் பிரீமியமாக தோற்றமளிக்க உதவுகிறது. நேர்மையாக சொல்ல வெண்டுமானால், நான் எக்ஸ்டரின் பின்புற சுயவிவரத்தின் ரசிகன் அல்ல, ஏனெனில் இது சற்று தட்டையாக தோன்றுகிறது , இருப்பினும் ஹூண்டாய் இந்த H-வடிவ LED டெயில்லைட்கள் மற்றும் மேலே உள்ள ஸ்பாய்லர் போன்ற சில கூறுகளைக் கொடுக்க முயற்சித்திருப்பதால், வடிவமைப்பையும் ஒரளவுக்கு பார்க்கும் படியாக மாற்றுகிறது.

மேலும் படிக்க

உள்ளமைப்பு

எக்ஸ்டரின் உட்புறம் முழுக்க முழுக்க கருப்பு தீம் கொண்டது, அதன் கான்ட்ராஸ்ட்-கலர் பாகங்களால் நிரம்பியுள்ளது. ஏசி கன்ட்ரோல்கள் மற்றும் ஏசி வென்ட்களில் இவற்றை பார்க்க முடிகிறது, மேலும் இவை பாடியின் கலரிலேயே இருக்கும். இருக்கைகளில் உள்ள பைப்பிங்கள் கூட எக்ஸ்டீரியரில் அதே உள்ள நிறத்தை பிரதிபலிக்கின்றன. பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாகங்களின் தரமும் நன்றாக உள்ளது. மேலே இருப்பது மென்மையானதாக கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் 3D பேட்டர்ன் நன்றாக இருக்கிறது. இருப்பினும், இந்த வடிவமைப்பு டாடாவின் ட்ரை-ஆரோவ் வடிவத்துடன் சற்று ஒத்திருக்கிறது.

இது தவிர, அனைத்து கட்டுப்பாடுகளும் - ஏசி, ஸ்டீயரிங் பொத்தான்கள் மற்றும் ஜன்னல் சுவிட்சுகள் போன்றவை - மிகவும் அருமையாக இருக்கின்றன. அப்ஹோல்ஸ்டரி கூட துணி மற்றும் லெதரெட் ஆகியவற்றின் கலவையாக கொடுக்கப்பட்டுள்ளது, இது பிரீமியமாக உணர வைக்கிறது. ஆனால் இந்த உயர்தர அனுபவம் டாஷ்போர்டின் மேல் பகுதி மற்றும் டச் பாயின்ட்டுகளுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதையே டோர் பேட்கள் அல்லது டாஷ்போர்டின் கீழே உள்ள பிளாஸ்டிக்குகள் மீது கொடுத்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

வசதிகள்

ஹூண்டாய் எக்ஸ்டருக்கு அதிகமாக வழங்கியது எதுவென்று பார்த்தால், அதன் வசதிகளையே சொல்ல வேண்டும். முதலில், நீங்கள் ஒரு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெறுவீர்கள், அதன் ரீட்அவுட்கள் மிகப் பெரியதாகவும் தெளிவாகவும் இருக்கும், மேலும் மையத்தில் உள்ள MIDயும் மிகவும் பெரிதாக இருக்கும். உங்கள் டிரைவ் தகவல் மற்றும் பயணத் தகவல்களுடன், நீங்கள் டயர் பிரஷர் டிஸ்ப்ளேயையும் பெறுவீர்கள், இது மிகவும் எளிமையான அம்சமாகும்.

அடுத்தது இன்ஃபோடெயின்மென்ட் செட்டப். இது 8 இன்ச் டிஸ்ப்ளே ஆனால் வழக்கமான 8 இன்ச் ஹூண்டாய் டிஸ்ப்ளேவில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இது பெரிய 10 இன்ச் சிஸ்டம்களில் காணப்படும் சிறந்த இன்டெர்பேஸை இயக்குகிறது. எனவே, நீங்கள் இன்டெகிரேட்டட் நேவிகேஷன், கனெக்டட் கார் டெக்னாலஜி மற்றும் வாய்ஸ் கமென்ட்களை பெறுவீர்கள், அவை பயன்படுத்த மிகவும் எளிதானவை. இந்த அமைப்பில், நீங்கள் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவைப் பெறுவீர்கள், ஆனால் வயர்லெஸ் கிடையாது. இந்த சிஸ்டமில், நீங்கள் ஒலிக்கான 4 ஸ்பீக்கர் செட்அப்பையும் பெறுவீர்கள் மற்றும் சவுட்ண்ட் குவாலிட்டியும் நன்றாக உள்ளது.

அதன் பிறகு முன் மற்றும் கேபின் கேமராவுடன் இரட்டை கேமரா டேஷ் கேம் வருகிறது. இப்போதெல்லாம், சாலையில் அதிகரித்து வரும் பாதுகாப்பு தொடர்பான சம்பவங்கள் காரணமாக பல வாடிக்கையாளர்கள் வெளிச்சந்தையில் டாஷ் கேமராக்களை வாங்கி நிறுவுகின்றனர், எனவே தொழிற்சாலை பொருத்தப்பட்ட இந்த ஆப்ஷன் மிகவும் நல்ல விஷயம். கூடுதலாக, அனைத்து வயரிங் அனைத்தும் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது. இறுதியாக, நீங்கள் ஒரு சன்ரூஃபை பெறுவீர்கள், இது எக்ஸ்டரை இந்த அம்சத்தை கொடுக்கும் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாக மாற்றுகிறது.

மேலும், இந்த காரில் எலக்ட்ரிக்கலி சரிசெய்யக்கூடிய ORVM -கள், புஷ் பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப், க்ரூஸ் கன்ட்ரோல், டில்ட்-அட்ஜஸ்ட்டபிள் ஸ்டீயரிங், உயரத்தை சரிசெய்யக்கூடிய இருக்கை, டைனமிக் வழிகாட்டுதல்களுடன் கூடிய பின்புற பார்க்கிங் கேமரா, ஃபுட்வெல் ஆம்பியன்ட் விளக்குகள், ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றைப் பெறுவீர்கள். இவை அனைத்தையும் கொண்டிருப்பதால், காணாமல் போன அம்சங்களைக் கண்டுபிடிப்பது கடினமாகிறது. ஆனால் ஓட்டுநரின் பக்கவாட்டு ஜன்னலோடு ஆட்டோ டவுன், ஆட்டோ அப் ஆகியிருந்தால் இன்னும் வசதியாக இருந்திருக்கும். மேலும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்களுடன் ஆட்டோமெட்டிக் வைப்பர்களும் கிடைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

கேபின் நடைமுறை

எக்ஸ்டர் ஒரு நடைமுறைக்கு ஏற்ற கேபினைப் பெறுகிறது. நீங்கள் வயர்லெஸ் சார்ஜரைப் பெறுவீர்கள், எனவே ஸ்மார்ட்போன்களை சேமிப்பது எளிது. அதன் பிறகு, டாஷ்போர்டின் பக்கத்தில் ஒரு பெரிய சேமிப்பகம் உள்ளது, அங்கு உங்கள் பர்ஸையும் பிற பொருட்களையும் எளிதாக சேமிக்க முடியும். நீங்கள் சென்டர் கன்சோலில் இரண்டு கப் ஹோல்டர்களை பெறுவீர்கள், மேலும் சாவிகளை வைக்க ஒரு பிரத்யேக சேமிப்பகம் வழங்கப்படுகிறது. குளோவ் பாக்ஸ் மிகவும் பெரியது மற்றும் கூலிங் அம்சத்தைக் கொண்டுள்ளது. டோர் பாக்கெட்டுகளில் 1-லிட்டர் தண்ணீர் பாட்டில்களை எளிதில் சேமித்து வைக்கலாம் மற்றும் உங்கள் துடைக்கும் துணி அல்லது ஆவணங்களை வைப்பதற்கும் அதிக இடம் உள்ளது.

சார்ஜிங் ஆப்ஷன்களும் ஏராளமாக உள்ளன. டைப்-சி போர்ட் மற்றும் யூஎஸ்பி போர்ட் ஆகியவை முன்பக்கம் உள்ளன. 12V சாக்கெட்டில் வயர்லெஸ் சார்ஜர் ப்ளக் இன் உள்ளது ஆனால் நீங்கள் அதை USB போர்ட் போல பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் 12V சாக்கெட்டை விரும்பினால், அதுவும் பின்புறத்தில் இருக்கிறது. இறுதியாக, கேபின் விளக்குகள். இந்த காரில் மூன்று கேபின் விளக்குகள் உள்ளன: முன்பக்கத்தில் இரண்டு மற்றும் நடுவில் ஒன்று.

பின் இருக்கை அனுபவம்

பெரிய கதவு இருப்பதால், காரில் ஏறுவதும் இறங்குவதும் மிகவும் எளிதானது. உள்ளே நுழைந்த பிறகு, இடமும் பெரியது மற்றும் பெரிய ஜன்னல்களுடன் ஒட்டுமொத்த சுற்றுப்புறமும் சிறப்பாக இருக்கும்.

இருக்கை குஷனிங் மென்மையானது மற்றும் இருக்கை தளம் சிறிது உயர்த்தப்பட்டுள்ளது, இது உங்களை வசதியாக உட்கார அனுமதிக்கிறது. முழங்கால் அறை மற்றும் கால் அறை போதுமானதாக உள்ளது, மற்றும் ஹெட்ரூம் சிறப்பாக உள்ளது. நீங்கள் இங்கு மூன்று பயணிகள் உட்கார முயற்சிக்கும் போது தான் உண்மையான பிரச்சனை தொடங்குகிறது, ஏனெனில் அகலம் குறைவாக இருப்பதால் நெருக்கடியை உணர முடியும்.

அம்சங்களைப் பொறுத்தவரை, நீங்கள் சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள், பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் 12V சாக்கெட் ஆகியவை இந்த காரில் இருக்கிறது, ஆனால் சேமிப்பகம் சற்று குறைவாக உள்ளது. நீங்கள் டோர் பாக்கெட்டுகளைப் பெறுவீர்கள், ஆனால் ஆர்ம்ரெஸ்ட் இல்லை, கப் ஹோல்டர்கள் இல்லை மற்றும் இருக்கையின் பின் பாக்கெட் பயணிகள் இருக்கைக்கு பின்னால் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

பாதுகாப்பு

இந்த காரில் பேஸ் வேரியன்ட்டில் கூட  ஆறு ஏர்பேக்குகள் ஸ்டாண்டர்டாக உள்ளன. இது தவிர, நீங்கள் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், EBD உடன் ABS மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் ஆகிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த பிளாட்பாரத்தில் உள்ள மற்ற காருக்கு கிராஷ் டெஸ்டில் இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் ஹூண்டாய், எக்ஸ்டர் சிறந்த க்ராஷ் டெஸ்ட் மதிப்பீட்டிற்காக வலுவூட்டப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது, ஆனால் நாங்கள் இன்னும் 2 அல்லது 3 நட்சத்திர மதிப்பீட்டைமட்டுமே எதிர்பார்க்கிறோம். ஆனாலும், எங்களது கருத்து தவறாக இருக்கலாம் என்றும் நம்புகிறோம்.

மேலும் படிக்க

பூட் ஸ்பேஸ்

எக்ஸ்டர் தன்னை ஒரு எஸ்யூவி என்று அழைக்க விரும்புவதால், அதற்கு நல்ல பூட் ஸ்பேஸை கொடுத்திருக்கிறது. பேப்பரில், இது 391 லிட்டர் இடத்தைக் கொண்டுள்ளது, இது பிரிவு சிறந்தது, மேலும் தரையில், பூட் தளம் மிகவும் அகலமாகவும் நீளமாகவும் இருப்பதால் பெரிய சூட்கேஸ்கள் எளிதில் பொருந்துகின்றன. மேலும், நல்ல உயரம் இருப்பதால், இரண்டு சூட்கேஸ்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்துக் கொள்ளலாம். ஒரு வார இறுதி சாமான்களை வைப்பதில் எக்ஸ்டர் -க்கு எந்த பிரச்சனையும் இல்லை. நீங்கள் பெரிய லக்கேஜ்களை ஏற்ற விரும்பினால், இந்த ட்ரேவை அகற்றிவிட்டு, இந்த இருக்கையை மடித்தால் போதும், மேலும் நீண்ட பொருட்களையும் இங்கே வைத்துக்கொள்ளலாம்.

மேலும் படிக்க

செயல்பாடு

ஹூண்டாய் எக்ஸ்டர் 1.2லி பெட்ரோல் இன்ஜினுடன் AMT மற்றும் CNG ஆப்ஷனுடன் வருகிறது. ஆனால் நீங்கள் டர்போ பெட்ரோல் அல்லது டீசல் இன்ஜினை தேடுகிறீர்களானால், உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை. வாகனத்தை ஓட்டிப் பாருங்கள், ரீஃபைன்மென்ட் நன்றாக இருப்பதையும், நகரத்தின் உள்ளே வேகத்தில் கேபின் அமைதியாகவும் நிதானமாகவும் இருக்கும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.]

ஆனால் இந்த இன்ஜின் சிரமமில்லாத பயண அனுபவத்திற்காக உருவாக்கப்பட்டதே தவிர செயல்திறனை தேடுபவர்களுக்கானது அல்ல. இருப்பினும், பயணம் என்று வரும்போது, அது உண்மையில் சிரமமற்றதாக இருக்கிறது. பவர் டெலிவரி மிகவும் மென்மையானது மற்றும் ஆக்சலரேஷனும் சீராக இருக்கிறது. நகரத்தில் முந்தும்போது வேகத்தை 20 முதல் 40 கிமீ, மற்றும் 40 முதல் 60 கிமீ வரை எளிதாக மாற்றலாம். ஆனால் இந்த இன்ஜின் நெடுஞ்சாலைகளில் தடுமாறுவதை உணர முடிகிறது. மணிக்கு 80 கிமீ வேகத்தில் முந்திச் செல்ல அதிக ஆக்சிலரேட்டரைப் பயன்படுத்த வேண்டியிருக்கும், மேலும் இங்கே இன்ஜின் சத்தமாகவும் இருக்கிறது.

எக்ஸ்டர் வசதிக்காக ஒரு AMT டிரான்ஸ்மிஷனைப் பெறுகிறது, என் கருத்துப்படி, அதுதான் கிட்டத்தட்ட அனைவரும் வாங்க வேண்டிய ஒன்றாக இருக்கும். அதன் கியர் மாற்றத்திற்குப் பின்னால் உள்ள லாஜிக் மிகவும் சிறப்பாக உள்ளது மற்றும் ஆக்ச்லரேஷனுக்காக நீங்கள் எப்போது டவுன் செய்ய வேண்டும் என்பதை கியர்பாக்ஸ் புரிந்துகொள்கிறது, மேலும் க்ரூஸ் செய்யும் போது மீண்டும் மேலே செல்கிறது. இது இன்ஜினை ஒரு வசதியானஇடத்திலேயே வைத்திருக்கிறது, எனவே நீங்கள் சக்தியின் பற்றாக்குறையை உணர மாட்டீர்கள். மற்றும் மிக முக்கியமாக, AMT ஸ்டாண்டர்ட்டுகளுக்கு, கியர் மாற்றங்கள் விரைவாக இருக்கும். மேலும், முதல் முறையாக, சிறந்த மேனுவல் கட்டுப்பாட்டிற்காக, AMT உடன் பேடில் ஷிஃப்டர்களை இதில் ஹூண்டாய் கொடுத்துள்ளது. நீங்கள் கூடுதல் செலவு செய்ய விரும்பவில்லை என்றாலும் கூட, மேனுவல் டிரான்ஸ்மிஷன் உங்களால் எதுவும் குறை சொல்ல முடியாது. கிளட்ச் இலகுவானது, கியர் ஸ்லாட்டை எளிதாக மாற்றுகிறது மற்றும் வாகனம் ஓட்டும் வசதி எளிமையானதாக இருக்கிறது.

நீங்கள் ஒரு எக்ஸைட்டிங்கான டிரைவிங்கை தேடுகிறீர்கள் என்றால், இந்த இன்ஜின் ஏமாற்றத்தை உங்களுக்கு கொடுக்கும். அதிக ஹை ரெவ்களில் ஆற்றல் பற்றாக்குறையை உணர முடிகிறது, அங்குதான் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது. நியோஸின் பழைய 1-லிட்டர் டர்போ பெட்ரோல் இங்கே சரியான பொருத்தமாக இருக்கும். ஹூண்டாய் அந்த ஆப்ஷனை வழங்கியிருந்தால், இந்த கார் சிறந்த ஆல்ரவுண்டர் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கும்.

மேலும் படிக்க

ரிடே அண்ட் ஹண்ட்லிங்

ஹூண்டாய் எக்ஸ்டரின் சஸ்பென்ஷன் பேலன்ஸ் ஒரு விவேகமான ஒன்றாகும். அதன் பெரும்பாலான கிலோமீட்டர்களை நகரத்தில் செலவிடப் போகிறது என்பதால், சஸ்பென்ஷன் மென்மையான இடத்தில் செட் செய்யப்பட்டுள்ளது. குண்டும் குழியுமான சாலைகள், சாலைக்கு வெளியே மற்றும் உடைந்த சாலைகளில் எக்ஸ்டரை ஓட்டிச் சென்றோம் - அதன் மூலமாக சஸ்பென்ஷன் மிகவும் சீராக உள்ளது என்றே சொல்லலாம். சாலைகளில் உள்ள குழிகளை நீங்கள் அதிகம் உணர முடியாது மேலும் மேடுகள் கூட உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாது. ஸ்பீட் பிரேக்கர்கள் நன்கு குஷனிங் ஆக உள்ளன, மேலும் குழிகள் கூட உங்களை பதட்டமடைய செய்யாது. மேலும் இது விரைவாகத் தீர்க்கப்படுவதால், நீண்ட சாலைப் பயணங்களும் வசதியாக இருக்கும். நெடுஞ்சாலைகளில், அது ஸ்டேபிளாக உணர வைக்கிறது மற்றும் நீங்கள் கவலைப்பட வேண்டிய அளவுக்கு பாடி ரோல் எதுவும் இல்லை.

இப்போது, இந்த கார் ஒரு உயரமான கார் என்பதால், நீங்கள் கொஞ்சம் உயரமாக உட்கார்ந்தால் கூட, ஒரு பெரிய கண்ணாடிப் பகுதி இருப்பதால் சாலையின் தோற்றம் நன்றாக இருக்கிறது. இது உங்களின் முதல் காராக இருந்தால் அல்லது நீங்கள் இப்போதுதான் ஓட்டக் கற்றுக்கொண்டிருந்தால், அதைச் சரிசெய்வது எளிதாக இருக்கும். கையாளுதல் பாதுகாப்பானதாக உணர வைக்கிறது மற்றும் ஸ்டீயரிங் வளைவான மற்றும் சிக்கலான சாலைகளில் நம்பிக்கையைத் கொடுக்கிறது. எனவே நீங்கள் இந்த காரை மலைப் பகுதிக்கு கொண்டு செல்லப் போகிறீர்கள் என்றால், நீங்கள் பதட்டமடைய தேவையிருக்காது.

மேலும் படிக்க

வகைகள்

ஹூண்டாய் எக்ஸ்டரை ஏழு வேரியன்ட்களில் வழங்குகிறது - அவை  EX, EX(O), S, S(O), SX, SX(O), SX(O) கனெக்ட்.

ஹூண்டாய் எக்ஸெட்டர் மைக்ரோ எஸ்யூவியின் ஆரம்ப விலை ரூ. 6 லட்சம் முதல் ரூ. 10.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). அவை என்ட்ரி லெவல் வேரியன்ட்களில் போட்டியிடுகின்றன, அதே சமயத்தில் பெட்டர் எக்யூப்டு சிறந்த வேரியன்ட்கள்- போட்டியாளர்களை விட கூடுதல் பிரீமியமாக இருக்கின்றன.

மேலும் படிக்க

வெர்டிக்ட்

எக்ஸ்டர் அதனை எதிர்நோக்கியிருக்கும் பார்வையாளர்களை நன்கு அறிந்து வைத்திருக்கிறது, ஆகவே இது எங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சுலபமானதாக்குகிறது. கேபின் அனுபவம், இடவசதி, நடைமுறைக்கு ஏற்ற தன்மை, வசதி, சுலபமான டிரைவிங் மற்றும் பூட் ஸ்பேஸ் போன்ற பல விஷயங்களை இது சரியாக பெற்றிருக்கிறது. மேலும் வசதிகளின் பட்டியலும் மிகவும் நன்றாக உள்ளது, அதை ரூ.10 லட்சத்திற்குள் கொடுப்பதும் மிகவும் கடினமாக இருக்கும். எப்படியிருந்தாலும், எக்ஸ்டெர் காரை ஓட்டும் போது உற்சாகம் இருப்பதில்லை, மேலும் இது ஒரு எஸ்யூவி -யாக இருக்க மிகவும் கடினமாக முயற்சிப்பது போல் தெரிகிறது. மேலும் இது பாதுகாப்பு தொழில்நுட்பம் சிறப்பானதாக தெரிந்தாலும், கிராஷ் டெஸ்ட் மதிப்பீட்டை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சோதனையில் நான்கு நட்சத்திரங்களை பெற முடிந்தால், பட்ஜெட்டில் ஒரு சிறிய குடும்பத்துக்கு ஏற்ற கார் வரிசையில் எக்ஸ்டர் முன்னணியில் இருக்கும்.

மேலும் படிக்க

ஹூண்டாய் எக்ஸ்டர் இன் சாதகம் & பாதகங்கள்

  • நாம் விரும்பும் விஷயங்கள்
  • நாம் விரும்பாத விஷயங்கள்
  • முரட்டுத்தனமான எஸ்யூவி போன்ற தோற்றம்
  • உயரமான இருக்கைகள் மற்றும் உயரமான ஜன்னல்கள் நல்ல ஓட்டுபவருக்கு கூடுதலான நம்பிக்கையை அளிக்கின்றன
  • டாஷ்கேம் மற்றும் சன்ரூஃப் போன்ற பிரத்யேக அம்சங்களுடன் கூடிய சிறப்பான அம்சங்களின் பட்டியல்
ஹூண்டாய் எக்ஸ்டர் brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
கையேட்டை பதிவிறக்கவும்

ஹூண்டாய் எக்ஸ்டர் comparison with similar cars

ஹூண்டாய் எக்ஸ்டர்
Rs.6 - 10.51 லட்சம்*
Sponsored
ரெனால்ட் கைகர்
Rs.6.15 - 11.23 லட்சம்*
டாடா பன்ச்
Rs.6 - 10.32 லட்சம்*
ஹூண்டாய் வேணு
Rs.7.94 - 13.62 லட்சம்*
மாருதி ஃபிரான்க்ஸ்
Rs.7.54 - 13.04 லட்சம்*
க்யா சிரோஸ்
Rs.9 - 17.80 லட்சம்*
மாருதி பாலினோ
Rs.6.70 - 9.92 லட்சம்*
மாருதி வாகன் ஆர்
Rs.5.64 - 7.47 லட்சம்*
Rating4.61.1K மதிப்பீடுகள்Rating4.2503 மதிப்பீடுகள்Rating4.51.4K மதிப்பீடுகள்Rating4.4431 மதிப்பீடுகள்Rating4.5599 மதிப்பீடுகள்Rating4.668 மதிப்பீடுகள்Rating4.4608 மதிப்பீடுகள்Rating4.4448 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்
Engine1197 ccEngine999 ccEngine1199 ccEngine998 cc - 1493 ccEngine998 cc - 1197 ccEngine998 cc - 1493 ccEngine1197 ccEngine998 cc - 1197 cc
Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeடீசல் / பெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி
Power67.72 - 81.8 பிஹச்பிPower71 - 98.63 பிஹச்பிPower72 - 87 பிஹச்பிPower82 - 118 பிஹச்பிPower76.43 - 98.69 பிஹச்பிPower114 - 118 பிஹச்பிPower76.43 - 88.5 பிஹச்பிPower55.92 - 88.5 பிஹச்பி
Mileage19.2 க்கு 19.4 கேஎம்பிஎல்Mileage18.24 க்கு 20.5 கேஎம்பிஎல்Mileage18.8 க்கு 20.09 கேஎம்பிஎல்Mileage24.2 கேஎம்பிஎல்Mileage20.01 க்கு 22.89 கேஎம்பிஎல்Mileage17.65 க்கு 20.75 கேஎம்பிஎல்Mileage22.35 க்கு 22.94 கேஎம்பிஎல்Mileage23.56 க்கு 25.19 கேஎம்பிஎல்
Airbags6Airbags2-4Airbags2Airbags6Airbags2-6Airbags6Airbags2-6Airbags6
Currently Viewingசலுகைகள்ஐ காண்கஎக்ஸ்டர் vs பன்ச்எக்ஸ்டர் vs வேணுஎக்ஸ்டர் vs ஃபிரான்க்ஸ்எக்ஸ்டர் vs சிரோஸ்எக்ஸ்டர் vs பாலினோஎக்ஸ்டர் vs வாகன் ஆர்
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
15,360Edit EMI
48 மாதங்களுக்கு 9.8% படி கணக்கிடப்பட்ட வட்டி
View EMI Offers
ஹூண்டாய் எக்ஸ்டர் offers
Benefits On Hyundai Exter Benefits Upto ₹ 50,000 O...
11 நாட்கள் மீதமுள்ளன
view முழுமையான offer

ஹூண்டாய் எக்ஸ்டர் கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
தென் கொரியாவில் தென்பட்ட புதிய தலைமுறை Hyundai Venue

ஸ்பை ஷாட்கள் வெளிப்புற வடிவமைப்பை காட்டுகின்றன. இது புதிய அலாய் வீல்களுடன் ஷார்ப்பான டீடெயிலிங்கை பெறுகிறது.

By kartik Apr 09, 2025
Hyundai Exter பேஸ் வேரியன்ட்டில் சிஎன்ஜி ஆப்ஷன்: 8 லட்சத்திற்கும் குறைவான சிஎன்ஜி மைக்ரோ-எஸ்யூவியா ?

இஎக்ஸ் வேரியன்ட்டில் சிஎன்ஜி சேர்க்கப்பட்டுள்ளதால் ஹூண்டாய் எக்ஸ்டரில் சிஎன்ஜி ஆப்ஷன் ரூ.1.13 லட்சம் விலை குறைவாக கிடைக்கும்.

By kartik Apr 07, 2025
தென்னாப்பிரிக்காவில் ஏற்றுமதியான மேட்-இன்-இந்தியா Hyundai Exter

இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஹூண்டாயின் 8 -வது மாடல் எக்ஸ்டர் ஆகும்.

By dipan Sep 23, 2024
சன் ரூஃப் உடன் Hyundai Exter -ன் புதிய வேரியன்ட்கள் அறிமுகமாகியுள்ளன

இந்த புதிய வேரியன்ட்கள் மூலமாக எக்ஸ்டரில் சிங்கிள் பேன் சன்ரூஃப் ரூ.46,000 வரை குறைவான விலையில் கிடைக்கும்.

By dipan Sep 06, 2024
Tata Punch காரை போன்ற டூயல் சிஎன்ஜி சிலிண்டர் தொழில்நுட்பத்துடன் Hyundai எக்ஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது, இதன் விலை ரூ.8.50 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

புதுப்பிக்கப்பட்ட எக்ஸ்டர் CNG மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த அப்டேட் காரணமாக காரின் விலை ரூ.7,000 உயர்த்துள்ளது.

By rohit Jul 16, 2024

ஹூண்டாய் எக்ஸ்டர் பயனர் மதிப்புரைகள்

ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (1148)
  • Looks (319)
  • Comfort (312)
  • Mileage (215)
  • Engine (96)
  • Interior (154)
  • Space (87)
  • Price (294)
  • மேலும்...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical
  • T
    tufail on Apr 14, 2025
    4.7
    The Comfort Zone

    Very best and reliable car ,feels like awesome go for it ,car look good and alloy wheel is also awesome the makes u happy,and the front look is muscular ,like a elephant go for it,the air suspense feels you vry relaiblity,my friend recomended to this i suggest to my elder for buy thuis,literallt to say its awesome,good and enjoyfull..மேலும் படிக்க

  • R
    rohit singh on Apr 08, 2025
    4.2
    Great Family Car On Budget

    It has been 2 months; I am driving the SX Knight AMT variant. I have drove almost 1800 Kms. The AMT calibration is smooth, city ride is so comfortable. If you are a good driver, you can easily get a mileage of 19 on highways and around 12-13 in city. I have been able to get an average of 17 kmpl since I bought this, and my AC is always ON. The mileage shown in the dashboard is pretty. I tested the mileage tank to tank, and I calculated it to be 17.5 when dashboard was showing 18.2. Highway ride seems a little bumpy, but my tyre pressure was at 42 psi, so that could be a contributing factor. But still I feel the suspension could have been better. But overall, this is a great family car on budget.மேலும் படிக்க

  • S
    sudipta bhattacharya on Apr 06, 2025
    4.7
    ஹாட்ச்பேக் இல் Exterrrrrrr.Got SUV விலை

    Just using the Exter and loved this with long driving as well as city driving. My whole family happy with this new SUV. Got Base model with showroom+corporate discount.Taken insurance self@15k only.Now modified to Standard level with very minimum cost.Stable driving with smooth gear shifting and smooth steering control.மேலும் படிக்க

  • A
    abhilesh aklesh dehankar on Mar 26, 2025
    4.8
    Very Best Feature With Best Safety

    First of all in this car secure and safety 6 airbag with ai feature and small interior with comfortable seats . In this car one feature is very good Tyre aur direct show in head mitter .. midium size of car outlook , sunroof feature are very good, fuel per km direct show for to the owner.மேலும் படிக்க

  • N
    nilesh kumar panekar on Mar 08, 2025
    4.2
    Nice Car Provide Bye Hyundai

    Good car Hyundai features top  provided by the Hyundai and average mileage given Hyundai colour variant also good and price will be negotiable this is very important happy with the serviceமேலும் படிக்க

ஹூண்டாய் எக்ஸ்டர் மைலேஜ்

இந்த பெட்ரோல் மாடல்கள் 19.2 கேஎம்பிஎல் க்கு 19.4 கேஎம்பிஎல் with manual/automatic இடையே மைலேஜ் ரேஞ்சை கொடுக்கக்கூடியவை. இந்த சிஎன்ஜி மாடல்கள் 19.4 கிமீ / கிலோ க்கு 27.1 கிமீ / கிலோ இடையே மைலேஜ் ரேஞ்சை கொடுக்கக்கூடியவை.

ஃபியூல் வகைட்ரான்ஸ்மிஷன்அராய் மைலேஜ்
பெட்ரோல்மேனுவல்19.4 கேஎம்பிஎல்
பெட்ரோல்ஆட்டோமெட்டிக்19.2 கேஎம்பிஎல்
சிஎன்ஜிமேனுவல்27.1 கிமீ / கிலோ

ஹூண்டாய் எக்ஸ்டர் வீடியோக்கள்

  • Shorts
  • Full வீடியோக்கள்
  • Design
    5 மாதங்கள் ago |
  • Performance
    5 மாதங்கள் ago |
  • Highlights
    5 மாதங்கள் ago |

ஹூண்டாய் எக்ஸ்டர் நிறங்கள்

ஹூண்டாய் எக்ஸ்டர் இந்தியாவில் பின்வரும் நிறங்களில் கிடைக்கிறது. கார்தேக்கோ -வில் வெவ்வேறு நிறங்களின் ஆப்ஷன்களுடன் அனைத்து கார் படங்களையும் பார்க்கவும்.
நட்சத்திர இரவு
காஸ்மிக் ப்ளூ
கடுமையான சிவப்பு
ஷேடோ கிரே வித் அபிஸ் பிளாக் ரூஃப்
உமிழும் சிவப்பு
காக்கி டூயல் டோன்
ஷேடோ கிரே
காஸ்மிக் டூயல் டோன்

ஹூண்டாய் எக்ஸ்டர் படங்கள்

எங்களிடம் 37 ஹூண்டாய் எக்ஸ்டர் படங்கள் உள்ளன, எஸ்யூவி காரின் வெளிப்புறம், உட்புறம் மற்றும் 360° காட்சியை உள்ளடக்கிய எக்ஸ்டர் -ன் படத்தொகுப்பை பாருங்கள்.

tap க்கு interact 360º

ஹூண்டாய் எக்ஸ்டர் வெளி அமைப்பு

360º காண்க of ஹூண்டாய் எக்ஸ்டர்

புது டெல்லி -யில் பரிந்துரைக்கப்படும் ஹூண்டாய் எக்ஸ்டர் மாற்று கார்கள்

Rs.7.49 லட்சம்
202317,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.9.95 லட்சம்
20245,700 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.5.96 லட்சம்
202410,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.5.96 லட்சம்
202410,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.9.25 லட்சம்
20235, 800 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.7.65 லட்சம்
20235, 500 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.8.95 லட்சம்
202318,000 kmசிஎன்ஜி
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.7.75 லட்சம்
20235,000 kmபெட்ரோல்
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.9.00 லட்சம்
202340,000 kmசிஎன்ஜி
விற்பனையாளர் விவரங்களை காண்க
Rs.9.10 லட்சம்
20254,000 kmசிஎன்ஜி
விற்பனையாளர் விவரங்களை காண்க

போக்கு ஹூண்டாய் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular எஸ்யூவி cars

  • டிரெண்டிங்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்

Rs.18.90 - 26.90 லட்சம்*
Rs.17.49 - 22.24 லட்சம்*
Rs.7 - 9.84 லட்சம்*
Are you confused?

48 hours இல் Ask anythin g & get answer

Ask Question

கேள்விகளும் பதில்களும்

Mohsin asked on 9 Apr 2025
Q ) Are steering-mounted audio and Bluetooth controls available?
Sahil asked on 26 Feb 2025
Q ) What is the Fuel tank capacity of Hyundai Exter ?
Mohit asked on 25 Feb 2025
Q ) How many airbags does the vehicle have?
Singh asked on 21 Jan 2025
Q ) Hyundai extra Grand height
Advik asked on 22 Dec 2024
Q ) Seven,seater
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
காண்க ஏப்ரல் offer