Hyundai Exter: இரண்டாவது நீண்ட கால விமர்சன அறிக்கை: 8000 கி.மீ
Published On டிசம்பர் 27, 2023 By arun for ஹூண்டாய் எக்ஸ்டர்
- 1 View
- Write a comment
எக்ஸ்டர் எங்களுடனான 3000 கிமீ சாலைப் பயணத்தில் இணைந்து கொண்டது, மேலும் எங்களை இது ஆச்சரியப்படுத்தியது
ஹூண்டாய் எக்ஸ்டர் நகரத்தை மையமாகக் கொண்ட ஒரு கார் என பெயரெடுத்துள்ளது. அதை
ஒரு நீண்ட சாலை பயணத்திற்கு எடுத்துச் செல்வதை பலரும் விரும்ப மாட்டார்கள். ஆனால் நாங்கள் அதைத்தான் செய்தோம். ஒரு குறுகிய, ஒரு வார பயணத்தில் வாகனத்துடன் அதிக நேரம் செலவழித்ததால் வாகனத்தைப் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை நாங்கள் கண்டறிந்தோம். இனிமேல் அவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
கம்ஃபோர்ட் விஷயங்கள்
சராசரி அளவிலான நபர்களுக்கு, எக்ஸ்டரின் இருக்கைகள் ஆதரவாகவும் வசதியாகவும் இருக்கும். நாங்கள் கிட்டத்தட்ட 5 மணிநேரத்தை ஒரே தொடர் டிரைவிங்கில் செலவிட்டோம். அப்போது வலியோ அல்லது உணர்வின்மையோ இல்லை. நீங்கள் XL அளவுடையவராக இருந்தால், முன் இருக்கைகளில் இருந்து சற்று ‘வெளியே இருப்பதை’ நீங்கள் காண்பீர்கள். உங்கள் முதுகு மற்றும் தோள்பட்டை பகுதிகளுக்கு சற்று கூடுதல் ஆதரவை இருக்க வேண்டும் என்பதை நீங்கள் விரும்புவீர்கள். அதேபோல, நீங்கள் உயரமாக இருந்தால், எக்ஸ்டரில் உள்ள இன்டெகிரேட்ட ஹெட்ரெஸ்ட் போதுமானதாக இருக்காது. கழுத்து பகுதிக்கான குஷனை வாங்குவதை நீங்கள் பரிசீலிக்கலாம்.
நீண்ட பயணங்களில், நாங்கள் முன்னால் ஒரு ஆர்ம்ரெஸ்ட்டை இல்லாததை உணர்ந்தோம். இது இந்த காருக்கு இன்னும் கொஞ்சம் சேமிப்பிடத்தை வழங்க உதவுயிருக்கிறது.
இடத்தை பொறுத்தவரை, புகார் செய்ய எதுவும் இல்லை. உயரமான இருக்கை மற்றும் பெரிய ஜன்னல்கள் இருப்பதால், நீங்கள் கேபினுக்குள் இருப்பது என்பது ஒரு தடையாக இருக்கவில்லை.
ரிலாக்ஸ் ஆனதா ? ஆம். சக்தி வாய்ந்ததா? இல்லை!
முழுப் பயணத்திற்கும், எக்ஸ்டர் தொடர்ந்து 100 கிமீ வேகத்தில் செல்வதற்கு வசதியாக இருந்தது. இது அதிக வேகத்தை தக்க வைத்திருக்கும் திறனைக் கொண்டுள்ளது, ஆனால் இயந்திரம் முழுவதும் அழுத்தமான இடத்தில் இருப்பதை போல உணர வைக்கிறது.
செயல்திறன் நிலைப்பாட்டில் பார்க்கப்போனால், நீங்கள் வேகத்தைக் குறைத்து, அதற்குப் பதிலாக 75-80 கிமீ வேகத்தில் பயணத்தை இருப்பதையே கார் விரும்புகிறது.
இருப்பினும், இந்த வேகத்தில், விரைவாக முந்திச் செல்ல இது உண்மையிலேயே போராடுவதை பார்க்க முடிகிறது. வாகனத்தை முந்துவதற்கு மூன்றாவது அல்லது சில சமயங்களில் இரண்டாவது கியர் தேவைப்படுவதை நாங்கள் கண்டறிந்தோம்.
ஒரு அமைதியான இயந்திரம் மற்றும் நன்கு கட்டுப்படுத்தப்பட்ட சாலை, காற்று மற்றும் டயர் இரைச்சல் ஆகியவை கேபினை ஒரு வசதியான இடமாக ஆக்குகின்றன. இந்திய நெடுஞ்சாலை நிலைமைகளில், இதன் மூலம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 50-60 கிமீ வரை பயணிக்கலாம், இது நியாயமான முன்னேற்றம்.
மைலேஜை பொறுத்த வரையில் - ஒரு நிதானமான நெடுஞ்சாலை ஓட்டினால் 16-17 கிமீ/லி கிடைக்கும். வேகத்தை அதிகரித்தால், உங்களுக்கு 13-14 கிமீ/லி கிடைக்கலாம்.
தொழில்நுட்ப வசதிகள்
எக்ஸ்ட்டர் -ல் வழங்கப்படும் 8 இன்ச் டச் ஸ்கிரீன் பயன்படுத்த எளிதானது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றைப் பெறுகிறது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இது வயர்டு இணைப்பில் மட்டுமே கிடைக்கும். ஒரு வகையில் நீண்ட பயணத்தில், உங்கள் ஃபோன் இணைக்கப்பட்டு 100 சதவிகிதம் சார்ஜில் தொடர்ந்து இருக்கும். ஆனால் இது மொபைலின் பேட்டரி ஆயுளுக்கு நல்லதல்ல. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்ப்ளே இந்தக் குறையை சரி செய்திருக்கும்.
வயர்லெஸ், இரண்டு டைப்-A மற்றும் டைப்-C சார்ஜர்களுக்கு இடையில், நீங்கள் நான்கு சாதனங்களை சார்ஜ் செய்யலாம். வயர்லெஸ் சார்ஜர் சற்று மெதுவாக உள்ளது. மேலும் உங்கள் ஃபோனில் இருந்து இசையை ஸ்ட்ரீமிங் செய்தால் சார்ஜ் தாங்கும். மேலும், ஆப்பிள் கார்ப்ளே/ஆண்ட்ராய்டு ஆட்டோவை ஆபரேட் செய்யும் டைப்-சி போர்ட் இதுவாக இருந்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஏனெனில் இப்போது பெரும்பாலான புதிய ஃபோன்கள் டைப்-சி கேபிளுடன் வருகின்றன.
டாப்-ஸ்பெக் பதிப்பில் இன்-பில்டு டாஷ்கேம் உள்ளது. இது அவசரநிலையின் போதோ அல்லது நீங்கள் நினைவுகளை உருவாக்க விரும்பினாலோ இரண்டுக்குமே சிறந்ததாக இருக்கும். சாலைப் பயணத்தில், இந்த அம்சம் உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும்.
டேக் இட் ஈஸி!
எக்ஸ்டரின் மற்றொரு அம்சம், சவாரி தரம் எவ்வளவு வசதியானது என்பதுதான். குறைந்த வேகத்தில், இது கேபினில் அதிக அசைவு இல்லாமல் எல்லாவற்றையும் சமன் செய்கிறது. அதிவேக நிலைத்தன்மையும் பாராட்டத்தக்க வகையில் உள்ளது. இது மூன்று இலக்க வேகத்தில் கூட இலகுவாகவோ மற்றும் மிதக்கும் தன்மையையோ கொடுப்பதில்லை. இருப்பினும், நெடுஞ்சாலை வேகத்தில் விரிவாக்க பகுதிகள் அல்லது மேடுகள் மீது ஏறினால், கார் சற்று துள்ளுகிறது. இந்த உணர்வை பின் இருக்கைகளில் இருப்பவர்கள் அனுபவிப்பார்கள்.
மொத்தத்தில், எக்ஸ்டெர் காரானது ஒரு சாலைப் பயணத்துக்கு ஏற்ற துணையாகத் தெரிகிறது - அது சாத்தியமில்லத ஒன்று என நீங்கள் நினைக்கலாம். ஆனால் நிதானமாக இயக்கப்படும் போது இது விரும்பும் வகையிலேயே இருக்கின்றது.
எக்ஸ்டர் இப்போது புனேவில் உள்ள தளத்திற்குத் திரும்புகிறது, அங்கு அது படப்பிடிப்புகளுக்கு உதவியாக இருக்கும்.
நேர்மறை விஷயங்கள்: வசதியான இருக்கைகள், பயன்படுத்த எளிதான இன்ஃபோடெயின்மென்ட்
எதிர்மறை விஷயங்கள்: போதுமான பவர் இல்லாதது
பெற்ற தேதி: அக்டோபர் 10, 2023
பெறப்பட்டபோது கிலோமீட்டர்கள்: 3,974கிமீ
இதுவரை ஓடிய கிலோமீட்டர்கள்: 8,300 கிமீ