ஹூண்டாய் எக்ஸ்டர்: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்
Published On டிசம்பர் 12, 2023 By ansh for ஹூண்டாய் எக்ஸ்டர்
- 1 View
- Write a comment
தோற்றத்தில் நன்றாக இருக்கின்றது, நகரத்திற்கு ஏற்ற வகையில் அளவு மற்றும் வசதியான சவாரியையும் கொண்டுள்ளது ,ஆனால் செயல்திறனில்தான் சற்று பின்தங்கியுள்ளது
கடந்த இரண்டு ஆண்டுகளில், எஸ்யூவி -களுக்கான தேவை கூடுதலாக உள்ளது. ஆகவேதான் ஒவ்வொரு நிறுவனமும் இந்த பிரிவில் நுழைய விரும்புகிறது . மேலும் முடிந்தவரை பல்வேறு எஸ்யூவி -களையும் விற்பனைக்கு கொண்டு வரவே விரும்புகின்றன, அவற்றில் சில பாரம்பரியமான எஸ்யூவி விற்பனையாளர்களாக இல்லாவிட்டாலும் கூட.
ஹூண்டாய் எக்ஸ்டர் நிச்சயமாக அப்படி ஒரு கார்தான், இது நமது சந்தையில் உள்ள எஸ்யூவிகளின் நீண்ட பட்டியலில் சமீபத்திய இணைந்தது. எங்களிடம் இருந்த வேரியன்ட் டாப்-ஸ்பெக் SX (O) கனெக்ட் டூயல்-டோன் மேனுவல் ஆகும், இதன் விலை ரூ.9.42 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). மேலும் 250 கி.மீக்கு மேல் அதை ஓட்டியதன் மூலமாக எங்களுக்கு தோன்றிய முதல் விஷயங்கள் இதோ.
கொஞ்சம் மாடர்ன், கொஞ்சம் முரட்டுத்தனம்
எக்ஸ்டெர் முக்கியமான இரண்டு அம்சங்களையும் அதன் வடிவமைப்பபில் ஒருங்கிணைத்துள்ளது, ஆகவே இது ஒரு எஸ்யூவி -யின் உணர்வைத் தருகிறது. அதே நேரத்தில் நவீன எலமென்ட்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. முதல் பார்வையில், இது ஒரு நேரான முன்பக்கம், நேர்கோடுகள், நேர்த்தியான கிரில் மற்றும் H-வடிவ DRL -களுடன் உங்களை வரவேற்கிறது, இது நவீனமானது மற்றும் நீங்கள் முன்பு பார்த்த கார்களில் இருந்து இது நிச்சயம் வேறுபட்டது என்பதை உங்களுக்கு சொல்கிறது.
நீங்கள் கொஞ்சம் நெருக்கமாகப் பார்த்தால், அதன் வடிவமைப்பில் கரடுமுரடான பகுதியையும் காணலாம். ஸ்கிட் பிளேட், வீர் ஆர்ச்கள், டோர் கிளாடிங் மற்றும் பெரிய பம்ப்பர்களுடன் இணைந்த ஒரு பாக்ஸி வடிவமைப்புடன் இது இருக்கின்றது. இந்த நாட்களில் நிறைய கார்களில் இதே வடிவமைப்பை நீங்கள் பார்க்கலாம். ஆனால் இங்கே, அவை மிகவும் நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டு, எக்ஸ்டருக்கு மஸ்குலரான எஸ்யூவி போன்ற தோற்றத்தை கொடுக்கிறது.
சிறிது நேரம் எக்ஸ்டரை ஓட்டிவிட்டு, அதிலுள்ள விவரங்களை சரியாகப் பார்க்காமல் மக்கள் திரும்பிய நிகழ்வுகள் நிறைய உண்டு. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இது கண்ணைக் கவரும் வகையில் உள்ளது.
காம்பாக்ட் ஃபார்ம் ஃபேக்டர்
இது ஒரு ஹேட்ச்பேக்கின் அளவில் இருக்கின்றது, ஏனெனில் இது ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் காரை அடிப்படையாகக் கொண்டது. அதன் எஸ்யூவி போன்ற வடிவமைப்பு காரணமாக இது பெரியதாக தோன்றலாம், ஆனால் இது உண்மையில் மிகவும் கச்சிதமானது, துல்லியமாக சொல்லப்பஓனால் 3815 மிமீ நீளம், இது மாருதி ஸ்விஃப்ட் காரை விட சிறியதாகும். ஆனால் சிறியதாக இருப்பது ஒரு மோசமான விஷயம் அல்ல, மேலும் எக்ஸ்டரை பொறுத்தவரை, இது ஒரு தனித்துவமான விஷயத்தில் ஒரு நன்மையை கொண்டுள்ளது.
பெரும்பாலான பாரம்பரிய எஸ்யூவி -கள் பெரிய அளவைக் கொண்டவை. அவற்றால் ஒட்டிச் செல்லும் போது போக்குவரத்தை கடப்பது, குறுகிய தெரு வழியாக ஓட்டுவது அல்லது போதுமான பெரிய வாகன நிறுத்துமிடத்தைக் கண்டறிவது கடினம். ஆனால் எக்ஸ்டருக்கு இவை பெரிய பிரச்சனைகள் அல்ல. ஆகவே இந்த காரால் கடந்த சில நாட்களாக, போக்குவரத்தை எளிதில் முறியடித்து, குறுகிய தெருக்களில் எளிதாக சென்று, இறுக்கமான வாகன நிறுத்துமிடங்களில் பொருத்துவது சிரமமாக இருக்கவில்லை.
வசதியானதா இருக்கிறதா ? நிச்சயமாக
உங்கள் ஓட்டுநர் வசதியை அப்படியே வைத்திருக்க எக்ஸ்ட்டர் முயற்சிக்கிறது. சீட் குஷனிங் சமநிலையில் உள்ளது, அது உங்களை இடத்தில் வைத்திருக்கிறது மற்றும் முன்பக்கத்தில் ஒரு நல்ல ஹெட்ரூம் உள்ளது. பின்புறத்திலும், குஷனிங் நன்றாக இருக்கின்றது, மற்றும் ஹெட்ரூம் மற்றும் முழங்காலுக்கான அறையும் நன்றாக உள்ளது.
வாகனம் ஓட்டும்போது, கம்ஃபோர்ட் லெவல் ஒரே மாதிரியாக இருக்கும். சஸ்பென்ஷன் ஆனது குழிகள் மற்றும் ஸ்பீட் பிரேக்கர்களை நன்றாகவே சமாளிக்கின்றது, கேபினுக்குள் அவற்றை உணர முடியாது. கார் அதிக வேகத்தில் நிலையானதாக இருக்கும், மேலும் சைடு பாடி ரோல் மிகக் குறைவு. ஆனால் இது ஒரு பெரிய எஸ்யூவி அல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், மேலும் பெரிய மேடுகள் மற்றும் குழிகளை நெருங்கும் போது வேகத்தைக் குறைக்க வேண்டும், இல்லையெனில், கார் தடுமாறுவதை உங்களால் உணர்வீர்கள்.
இன்னும் கூடுதல் பவர் தேவைப்படுகிறது
எக்ஸ்டர் -ல் இல்லாத ஒன்று செயல்திறன். அதை காட்ட எதுவும் இல்லை என்பது போல் இல்லை. 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ரீஃபைன்மென்ட் ஆக இருக்கிறது, உங்களுக்கு நிதானமாக டிரைவிங் அனுபவத்தை வழங்குகிறது. ஆனால் அது ரெஸ்பான்ஸிவ் அல்லது விரைவாகவோ இல்லை. இது உங்கள் இன்புட்டிற்கு பதிலளிக்கிறது, ஆனால் வேகத்தை பெற சிறிது நேரம் தேவைப்படுகிறது.
குறைந்த வேக நகரப் பயணங்கள் அல்லது அதிவேக நெடுஞ்சாலைப் பயணம் எதுவாக இருந்தாலும், வேகத்தை அதிகரிக்க எடுக்கும் நேரத்தை நீங்கள் உணர்வீர்கள். ஓவர்டேக் செய்யும்போது, தேவையான சக்தியையும் வேகத்தையும் பெறுவதற்கு ஒரு கியரை டவுன்ஷிஃப்ட் செய்வதற்கான தேவை இருக்கின்றது. இது கிராண்ட் i10 நியோஸ் அடிப்படையிலானது. ஹூண்டாய் மிகவும் முக்கியமாக எஸ்யூவி போன்ற டிரைவிங் அனுபவத்தை வழங்க, அதிக சக்திவாய்ந்த இன்ஜினை பொருத்தியிருக்க வேண்டும்.
250 கி.மீ ஓட்டிய பிறகு, ஹூண்டாய் எக்ஸ்டர் நன்றாக இருப்பதாகவே தோன்றியது. இது கண்களைக் கவரும் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, சிறிய அளவு மற்றும் வசதியான சவாரி தரத்துடன் நகரப் பயணங்களை எளிதாக்குகிறது. மேலும் இன்னும் கொஞ்சம் ஓட்டும்போது எங்கள் விரிவான மதிப்பாய்வில் கிடைக்கும் அம்சங்களின் நம்பிக்கைக்குரிய பட்டியலையும் கொண்டுள்ளது. ஆனால், பவர் இல்லாததால் இன்னும் அதிகமாக ஆசைப்படுவீர்கள். எக்ஸ்டர் ஆறு மாதங்களுக்கு எங்களுடன் இருக்கும், எனவே சரியான நேரத்தில் இன்னும் விரிவான விமர்சனத்துக்கு காத்திருங்கள்.
நேர்மறையான விஷயங்கள்: அளவு, வடிவமைப்பு, வசதியான கேபின்
எதிர்மறையான விஷயங்கள்: போதுமான பவர் இல்லாதது
கார் கிடைத்த தேதி: 10 அக்டோபர் 2023
கிடைத்தபோது கார் ஓடியிருந்த கிலோமீட்டர்: 3,974கி.மீ
இதுவரை ஓடிய கிலோமீட்டர்: 4,234 கி.மீ