• English
  • Login / Register
  • மாருதி ஆல்டோ k10 முன்புறம் left side image
  • மாருதி ஆல்டோ k10 பின்புறம் view image
1/2
  • Maruti Alto K10
    + 7நிறங்கள்
  • Maruti Alto K10
    + 15படங்கள்
  • Maruti Alto K10
  • Maruti Alto K10
    வீடியோஸ்

மாருதி ஆல்டோ கே10

4.4380 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.3.99 - 5.96 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view ஜனவரி offer

மாருதி ஆல்டோ கே10 இன் முக்கிய அம்சங்கள்

engine998 cc
பவர்55.92 - 65.71 பிஹச்பி
torque82.1 Nm - 89 Nm
ட்ரான்ஸ்மிஷன்மேனுவல் / ஆட்டோமெட்டிக்
mileage24.39 க்கு 24.9 கேஎம்பிஎல்
fuelசிஎன்ஜி / பெட்ரோல்
  • ஏர் கண்டிஷனர்
  • central locking
  • ப்ளூடூத் இணைப்பு
  • கீலெஸ் என்ட்ரி
  • touchscreen
  • ஸ்டீயரிங் mounted controls
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

ஆல்டோ கே10 சமீபகால மேம்பாடு

Maruti Alto K10 -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

மாருதி இந்த டிசம்பரில் Maruti Alto K10 -ல் ரூ. 72,100 வரை பலன்களை கொடுக்கிறது. சலுகையில் பணத் தள்ளுபடி, கார்ப்பரேட் போனஸ் மற்றும் ஸ்கிராப்பேஜ் போனஸ் ஆகியவை அடங்கும். 

Maruti Alto K10 காரின் விலை என்ன?

மாருதி ஆல்டோ k10 காரின் விலை ரூ.3.99 லட்சத்தில் தொடங்கி ரூ.5.96 லட்சம் வரை உள்ளது. 

பெட்ரோல்-மேனுவல் பேஸ்-ஸ்பெக் STD வேரியன்ட் -ல் இருந்து தொடங்குகிறது, இதன் விலை ரூ.3.99 லட்சம் முதல் ரூ.5.35 லட்சம் வரை இருக்கும். பெட்ரோல்-ஆட்டோமெட்டிக் ஹையர்-ஸ்பெக் VXi வேரியன்ட்டிலிருந்து தொடங்குகிறது, இது ரூ 5.51 லட்சம் முதல் ரூ 5.80 லட்சம் வரை இருக்கும். மிட்-ஸ்பெக் மற்றும் ஹை-ஸ்பெக் LXi மற்றும் VXi வேரியன்ட்களும் CNG உடன் வழங்கப்படுகின்றன, மேலும் இதன் விலை ரூ. 5.74 லட்சம் முதல் ரூ. 5.96 லட்சம் வரை இருக்கும் (அனைத்து விலை விவரங்களும் எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி -க்கானவை).

Maruti Alto K10 காரில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

ஆல்டோ k10 ஆனது 4 வேரியன்ட்களில் கிடைக்கிறது: 

  • Std  

  • LXi  

  • VXI  

  • VXi பிளஸ்  

Maruti Alto K10-ன் பணத்திற்கு மிகவும் மதிப்புமிக்க வேரியன்ட் எது?

AMT மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் மற்றும் CNG வேரியன்ட் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய ஒன்-பிலோவ்-டாப்-ஸ்பெக் VXi வேரியன்ட் பணத்திற்கான சிறந்த மதிப்பு கொண்டதாக இருக்கும். இந்த வேரியன்ட் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் உள்ளடக்கியது மட்டுமல்லாமல், முன்பக்க பவர்டு ஜன்னல்கள், உள்ளே இருந்தபடியே சரிசெய்து கொள்ளக்கூடிய ORVM -கள் போன்ற பிற முக்கிய அம்சங்களை உள்ளடக்கியது. ஆல்டோ K10 -ன் இந்த ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்டின் விலை ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ. 5.96 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது.

Maruti Alto K10 என்ன வசதிகளை பெறுகிறது? 

Alto K10 -ன் ஃபீச்சர் தொகுப்பில் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, ஸ்டீயரிங்-மவுண்டட் கன்ட்ரோல்கள், மேனுவலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வெளிப்புற ரியர் வியூ மிரர்கள் (ORVMகள்) மற்றும் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை அடங்கும். ட்ரீம் பதிப்பு வேரியன்ட் கூடுதல் ஸ்பீக்கர்கள் உடன் வருகிறது.

Maruti Alto K10 எவ்வளவு விசாலமானது?

இந்த மாருதியின் ஹேட்ச்பேக்கின் முன் இருக்கைகள் போதுமான அகலம் கொண்டவை மற்றும் நீண்ட பயணங்களில் கூட வசதியான பயணத்தை வழங்குகிறது. சுமார் 5 '6 உயரமுள்ள நபருக்கு, நீங்கள் எந்தப் பிரச்சினையையும் சந்திக்க மாட்டீர்கள், ஆனால் நீங்கள் இதை விட உயரமாக இருந்தால், ஸ்டீயரிங் உங்கள் முழங்கால்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும். 

ஸ்டோரேஜ் இடங்களைப் பொறுத்தவரையில் முன் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். இது பெரிய முன் டோர் பாக்கெட்டுகள், உங்கள் தொலைபேசியை வைக்க ஒரு இடம், ஒரு சராசரி அளவிலான க்ளோவ் பாக்ஸ் மற்றும் இரண்டு கப் ஹோல்டர்களுடன் கிடைக்கும். 214 லிட்டர் பூட் கணிசமாக பெரியது. பூட் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது ஆனால் பூட் லிட் உயரத்தில் இருப்பதால் பெரிய பொருட்களை ஏற்றுவது சற்று கடினமாக உள்ளது. 

Maruti Alto K10 -ல் என்ன இன்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன? 

ஆல்டோ K10 மாடலில் 67 PS மற்றும் 89 Nm டார்க்கை கொடுக்கும் 1 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இந்த இன்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT உடன் இணைக்கப்படலாம். கூடுதலாக, 57 PS மற்றும் 82 Nm அவுட்புட் கொண்ட CNG வேரியன்ட் உள்ளது, பிரத்தியேகமாக 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி வேரியன்ட் ஐடில் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது.

Maruti Alto K10 காரின் மைலேஜ் என்ன?

5-ஸ்பீடு பெட்ரோல்-மேனுவல் டிரான்ஸ்மிஷனுக்கு 24.39 கி.மீ மைலேஜையும், ஏஎம்டி டிரான்ஸ்மிஷனுக்கு 24.90 கி.மீ மைலேஜ் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. CNG பதிப்பின் மைலேஜ் திறன் 33.85 கி.மீ/கிலோ ஆகும்.

Maruti Alto K10 எவ்வளவு பாதுகாப்பானது?

பாதுகாப்புக்காக டூயல் முன்பக்க ஏர்பேக்குகள், ஒரு ரிவர்சிங் கேமரா (டிரீம் பதிப்புடன்), EBD உடன் ABS, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

Maruti Alto K10 உடன் எத்தனை கலர் ஆப்ஷன்கள் உள்ளன? 

வாடிக்கையாளர்கள் இதை ஏழு மோனோடோன் நிறங்களில் வாங்கலாம்: மெட்டாலிக் சிஸ்லிங் ரெட், மெட்டாலிக் சில்க்கி சில்வர், மெட்டாலிக் கிரானைட் கிரே, மெட்டாலிக் ஸ்பீடி ப்ளூ, பிரீமியம் எர்த் கோல்ட், ப்ளூஷ் பிளாக் மற்றும் சாலிட் ஒயிட்.

நாங்கள் குறிப்பாக விரும்புவது:

மாருதி ஆல்டோ K10 -ல் மெட்டாலிக் சிஸ்லிங் ரெட்.

நீங்கள் Maruti Alto K10 வாங்க வேண்டுமா?

ஆல்டோ K10 காரில் சிறிய குறைபாடுகள் உள்ளன. மேலும் பின் இருக்கை பயணிகளுக்கு ஸ்டோரேஜ் இடமில்லாமல் இருப்பது கடினம். இருப்பினும் ஆல்டோ K10 போன்ற காருக்கு இந்த இன்ஜின் சக்தி வாய்ந்தது மற்றும் சிறந்த டிரைவிங் அனுபவத்தை வழங்குகிறது. இது நான்கு நபர்களுக்கு போதுமான இடம் மற்றும் சவாரி தரம் வசதியாக உள்ளது.

Maruti Alto K10 -க்கு மாற்று என்ன? 

ஆல்டோ K10 ரெனால்ட் க்விட் உடன் நேரடியாக போட்டியிடுகிறது. மேலும் இதன் விலை நிர்ணயம் காரணமாக மாருதி எஸ்-பிரஸ்ஸோ -வுக்கு ஒரு மாற்றாக கருதப்படலாம்.

மேலும் படிக்க
ஆல்டோ k10 எஸ்டிடி(பேஸ் மாடல்)998 cc, மேனுவல், பெட்ரோல், 24.39 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.3.99 லட்சம்*
ஆல்டோ k10 எல்எஸ்ஐ998 cc, மேனுவல், பெட்ரோல், 24.39 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.4.83 லட்சம்*
மேல் விற்பனை
ஆல்டோ k10 விஎக்ஸ்ஐ998 cc, மேனுவல், பெட்ரோல், 24.39 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்பு
Rs.5 லட்சம்*
ஆல்டோ k10 விஎக்ஸ்ஐ பிளஸ்998 cc, மேனுவல், பெட்ரோல், 24.39 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.5.35 லட்சம்*
ஆல்டோ k10 விஎக்ஸ்ஐ ஏடி998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 24.9 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.5.51 லட்சம்*
மேல் விற்பனை
ஆல்டோ k10 எல்எக்ஐ எஸ்-சிஇன்ஜி998 cc, மேனுவல், சிஎன்ஜி, 33.85 கிமீ / கிலோ1 மாத காத்திருப்பு
Rs.5.74 லட்சம்*
ஆல்டோ k10 வக்ஸி பிளஸ் அட்998 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 24.9 கேஎம்பிஎல்1 மாத காத்திருப்புRs.5.80 லட்சம்*
ஆல்டோ k10 விஎக்ஸ்ஐ s-cng(top model)998 cc, மேனுவல், சிஎன்ஜி, 33.85 கிமீ / கிலோ1 மாத காத்திருப்புRs.5.96 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

மாருதி ஆல்டோ கே10 comparison with similar cars

மாருதி ஆல்டோ கே10
மாருதி ஆல்டோ கே10
Rs.3.99 - 5.96 லட்சம்*
sponsoredSponsoredரெனால்ட் க்விட்
ரெனால்ட் க்விட்
Rs.4.70 - 6.45 லட்சம்*
மாருதி செலரியோ
மாருதி செலரியோ
Rs.4.99 - 7.04 லட்சம்*
டாடா டியாகோ
டாடா டியாகோ
Rs.5 - 7.90 லட்சம்*
மாருதி எஸ்-பிரஸ்ஸோ
மாருதி எஸ்-பிரஸ்ஸோ
Rs.4.26 - 6.12 லட்சம்*
மாருதி வாகன் ஆர்
மாருதி வாகன் ஆர்
Rs.5.54 - 7.33 லட்சம்*
மாருதி இக்னிஸ்
மாருதி இக்னிஸ்
Rs.5.84 - 8.06 லட்சம்*
மாருதி இகோ
மாருதி இகோ
Rs.5.32 - 6.58 லட்சம்*
Rating4.4380 மதிப்பீடுகள்Rating4.3855 மதிப்பீடுகள்Rating4312 மதிப்பீடுகள்Rating4.4799 மதிப்பீடுகள்Rating4.3436 மதிப்பீடுகள்Rating4.4404 மதிப்பீடுகள்Rating4.4624 மதிப்பீடுகள்Rating4.3282 மதிப்பீடுகள்
Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல் / ஆட்டோமெட்டிக்Transmissionமேனுவல்
Engine998 ccEngine999 ccEngine998 ccEngine1199 ccEngine998 ccEngine998 cc - 1197 ccEngine1197 ccEngine1197 cc
Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல் / சிஎன்ஜிFuel Typeபெட்ரோல்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி
Power55.92 - 65.71 பிஹச்பிPower67.06 பிஹச்பிPower55.92 - 65.71 பிஹச்பிPower72.41 - 84.82 பிஹச்பிPower55.92 - 65.71 பிஹச்பிPower55.92 - 88.5 பிஹச்பிPower81.8 பிஹச்பிPower70.67 - 79.65 பிஹச்பி
Mileage24.39 க்கு 24.9 கேஎம்பிஎல்Mileage21.46 க்கு 22.3 கேஎம்பிஎல்Mileage24.97 க்கு 26.68 கேஎம்பிஎல்Mileage20.09 கேஎம்பிஎல்Mileage24.12 க்கு 25.3 கேஎம்பிஎல்Mileage23.56 க்கு 25.19 கேஎம்பிஎல்Mileage20.89 கேஎம்பிஎல்Mileage19.71 கேஎம்பிஎல்
Boot Space214 LitresBoot Space279 LitresBoot Space313 LitresBoot Space242 LitresBoot Space240 LitresBoot Space341 LitresBoot Space260 LitresBoot Space540 Litres
Airbags2Airbags2Airbags2Airbags2Airbags2Airbags2Airbags2Airbags2
Currently Viewingசலுகைகள்ஐ காண்கஆல்டோ கே10 vs செலரியோஆல்டோ கே10 vs டியாகோஆல்டோ கே10 vs எஸ்-பிரஸ்ஸோஆல்டோ கே10 vs வாகன் ஆர்ஆல்டோ கே10 vs இக்னிஸ்ஆல்டோ கே10 vs இகோ

Save 31%-50% on buying a used Maruti ஆல்டோ கே10 **

  • மாருதி ஆல்டோ கே10 விஎக்ஸ்ஐ
    மாருதி ஆல்டோ கே10 விஎக்ஸ்ஐ
    Rs3.25 லட்சம்
    201761,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • மாருதி ஆல்டோ கே10 விஎக்ஸ்ஐ ஏஎம்பி
    மாருதி ஆல்டோ கே10 விஎக்ஸ்ஐ ஏஎம்பி
    Rs4.25 லட்சம்
    201940,73 3 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • மாருதி ஆல்டோ கே10 விஎக்ஸ்ஐ
    மாருதி ஆல்டோ கே10 விஎக்ஸ்ஐ
    Rs3.25 லட்சம்
    201862,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • மாருதி ஆல்டோ கே10 VXI Optional
    மாருதி ஆல்டோ கே10 VXI Optional
    Rs3.75 லட்சம்
    201949,000 Kmபெட்ரோல்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • மாருதி ஆல்டோ கே10 எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி
    மாருதி ஆல்டோ கே10 எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி
    Rs2.30 லட்சம்
    201568,000 Kmசிஎன்ஜி
    விற்பனையாளர் விவரங்களை காண்க
** Value are approximate calculated on cost of new car with used car

மாருதி ஆல்டோ கே10 விமர்சனம்

CarDekho Experts
ஆல்டோ கே10 முதல் முறை கார் உரிமையாளர்களை இலக்காகக் கொண்டது, ஆனால் இன்னும் அது ஒரு தந்திரமாக காராக மாறவில்லை. இது இப்போது நான்கு பயணிகளுக்கு விசாலமானதாக இருக்கிறது, ஓட்டுவதற்கு எளிமையானதாகவும் மற்றும் சிறந்த சிக்கன செயல்திறனையும் உறுதியளிக்கிறது. ஆனால், இது சில வசதிகளையும் நடைமுறை அம்சங்களையும் இழக்கிறது, ஆனால் இன்னும் கூட ஒருவர் வாங்குதற்கு ஏற்ற சிறப்பான முதல் காராக இருக்கிறது.

overview

மாருதி சுஸூகி ஆல்டோ K10 ஆனது அதிக சக்தி வாய்ந்த மோட்டாரைக் கொண்டிருப்பது மட்டுமின்றி, உண்மையில் ஒரு புத்தம் புதிய தயாரிப்பாகவும் இருக்கிறது. இது வேறு ஏதாவது நல்ல விஷயங்கள் இருக்கிறதா?.

overview

ஆல்டோ என்ற பெயருக்கு அறிமுகம் தேவையில்லை. தொடர்ந்து பதினாறு ஆண்டுகளாக இது இந்திய சந்தையில் சிறந்த விற்பனையாகும் காராக இருந்து வருகிறது, இப்போது 2022 -ல், மாருதி சுஸூகி மிகவும் சக்திவாய்ந்த K10 வேரியன்ட்டுடன் வந்துள்ளது. நல்ல விஷயம் என்னவென்றால், அப்டேட்கள் இன்ஜினுக்கு மட்டும் கொடுக்கப்படவில்லை; முழுமையான காரும் புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விலை அடிப்படையில் மாருதி சுஸூகி ஆல்டோ K10 ஆல்டோ 800 ஐ விட சுமார் 60-70 ஆயிரம் விலை அதிகம். கேள்வி என்னவென்றால், எப்போதும் பிரபலமான 800 வேரியன்டுடன் ஒப்பிடும் போது இது சரியான அப்டேட்டை கொடுத்தது போல் தெரிகிறதா?.

வெளி அமைப்பு

Exterior

புதிய ஆல்டோ K10 கண்ணுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் இருக்கிறது. டியர்டிராப் வடிவ ஹெட்லேம்ப்கள் மற்றும் பெரிய, ஸ்மைலிங் பம்பர் ஆகியவை மகிழ்ச்சியை காட்டுகின்றன. பம்பர் மற்றும் கூர்மையான மடிப்புகள் சற்று ஆக்ரோஷத்தை சேர்க்கிறது. பின்புறத்திலும், பெரிய டெயில் லேம்ப்கள் மற்றும் கூர்மையாக வெட்டப்பட்ட பம்பர் ஆகியவை அழகாகவும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போதும், ஆல்டோ சமச்சீராகத் தெரிகிறது. பின்புறத்தில் இருந்து பார்க்கும்போது ஒரு நல்ல தோற்றதையே கொண்டுள்ளது. பக்கவாட்டில் பார்க்கும் போது ஆல்டோ இப்போது 800 -ஐ விட பெரியதாகத் தெரிகிறது. இது 85 மிமீ நீளம், 55 மிமீ உயரம் மற்றும் வீல்பேஸ் 20 மிமீ அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, ஆல்டோ K10 800 உடன் ஒப்பிடும் போது அதிக முன்னிலையில் உள்ளது. வலுவான தோள்பட்டை வரிசையும் அதை நவீனமாகவும், 13-இன்ச் சக்கரங்கள் ஒட்டுமொத்த அளவு அதிகரித்திருந்தாலு சரியான அளவிலேயே இருக்கின்றது.

Exterior

உங்கள் ஆல்டோ K10 பளிச்சென்று தோற்றமளிக்க விரும்பினால், நீங்கள் கிளின்டோ ஆப்ஷன் பேக்கிற்கு செல்லலாம், இது வெளிப்புறத்தில் நிறைய குரோம் பிட்களை சேர்க்கிறது மற்றும் நீங்கள் ஒரு ஸ்போர்ட்டி தோற்றத்தை விரும்பினால், மாருதி சுஸூகி இம்பேக்டோ பேக்கை வழங்குகிறது, இது எக்ஸ்டீரியரில் வித்தியாசமான ஆரஞ்சு நிற ஆக்சென்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

உள்ளமைப்பு

Interior

வெளிப்புறத்தைப் போலவே உட்புறமும் அழகாக இருக்கிறது. டேஷ்போர்டின் வடிவமைப்பு தெளிவாகவும் இருக்கிறது, நவீனமாகத் தோற்றமளிக்கும் V-வடிவ சென்ட்ரல் கன்சோலும் சற்று அதிநவீனத்தை சேர்க்கிறது. அனைத்து கன்ட்ரோல்கள் மற்றும் சுவிட்சுகளை எளிதாக பயன்படுத்தும் வகையில் உள்ளன மற்றும் எரகனமிக்ஸ் ரீதியாக சிறப்பாக இருக்கின்றன., இது ஆல்டோ K10 இன் கேபினை பயன்படுத்த மிகவும் எளிதானதாக ஆக்குகிறது.

தரத்தைப் பொறுத்தவரையிலும் குறை கூறுவதற்கு பெரிதாக எதுவும் இல்லை. பிளாஸ்டிக் நல்ல தரமாக உள்ளது மற்றும் ஃபிட் மற்றும் ஃபினிஷ் சீரானது. ஒரே சீரற்ற மேற்பரப்பைக் கொடுக்கும் இடது முன் ஏர்பேக்கிற்கான கவர் மட்டுமே சரியாக பொருந்தாத பிளாஸ்டிக் ஆகும்.

Interior

ஆல்டோ K10 காரின் முன் இருக்கைகள் போதுமான அகலம் கொண்டவை மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு கூட வசதியாக இருக்கும். இருக்கையின் விளிம்பு சற்று தட்டையாக இருந்தாலும், குறிப்பாக காட் பிரிவுகளில் பக்கவாட்டு ஆதரவு போதுமானதாக இருக்கிறது. மற்றொரு சிக்கல் டிரைவருக்கு அட்ஜஸ்ட்மென்ட் இல்லாதது. நீங்கள் இருக்கை உயரம் சரிசெய்தல் அல்லது சரிசெய்யக்கூடிய ஸ்டீயரிங் -கை பெறவில்லை. நீங்கள் சுமார் 5 அடி 6 இருந்தால், உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது, ஆனால் நீங்கள் உயரமாக இருந்தால், ஸ்டீயரிங் உங்கள் முழங்கால்களுக்கு மிக அருகில் இருக்கும்.

Interior

ஆனால் மிகப்பெரிய ஆச்சரியம் பின் இருக்கை. முழங்கால் அறை வியக்கத்தக்க வகையில் நன்றாக உள்ளது மற்றும் ஆறு அடிகள் உடையவர்கள் கூட இங்கு வசதியாக இருக்கலாம். போதுமான ஹெட்ரூம் உள்ளது மற்றும் பெஞ்ச் நல்ல தொடை ஆதரவையும் வழங்குகிறது. நிலையான ஹெட்ரெஸ்ட்கள் ஏமாற்றமளிக்கின்றன. அவை குறுகியவை மற்றும் பின்புற தாக்கம் ஏற்பட்டால் உங்களுக்கு பாதுகாப்பை வழங்காது.

Interior

சேமிப்பக இடங்களைப் பொறுத்தவரை, முன் பயணிகள் நன்றாக அவை கிடைக்கின்றன. பெரிய முன் கதவு பாக்கெட்டுகள், உங்கள் ஃபோனை வைக்க ஒரு இடம், சராசரி அளவிலான க்ளோவ் பாக்ஸ் மற்றும் இரண்டு கப் ஹோல்டர்கள் கிடைக்கும். மறுபுறம் பின்புற பயணிகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை. கதவு பாக்கெட்டுகள், கப் ஹோல்டர்கள் அல்லது இருக்கை பின் பாக்கெட்டுகள் கூட இல்லை.

அம்சங்கள்

InteriorInterior

டாப் VXi பிளஸ் வேரியண்டில் உள்ள Alto K10 ஆனது முன் பவர் ஜன்னல்கள், கீலெஸ் என்ட்ரி, ஏர் கண்டிஷனிங் சிஸ்டம், பவர் ஸ்டீயரிங், ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட ஆடியோ மற்றும் டெலிபோன் கண்ட்ரோல்கள் மற்றும் நான்கு ஸ்பீக்கர்களுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும் கிடைக்கும். பெரிய ஐகான்களுடன் இன்ஃபோடெயின்மென்ட்டைப பயன்படுத்த எளிதாக இருக்கிறது மற்றும் அதன் வேகம் மிகச்சிறப்பாக உணர்கிறது. டிரிப் தகவலை கொண்ட டிஜிட்டல் டிரைவரின் இன்ஸ்ட்ரூமென்டையும் நீங்கள் பெறுவீர்கள். எதிர்மறையாக ஒரு டேகோமீட்டர் இதில் கொடுக்கப்படவில்லை.

மிரர் அட்ஜஸ்ட், ரியர் பவர் ஜன்னல்கள், ரிவர்சிங் கேமரா, இருக்கை உயரம் அட்ஜஸ்ட்மென்ட் மற்றும் ஸ்டீயரிங் ஹெயிட் அட்ஜஸ்ட்மென்ட் ஆகியவையும் இந்த காரில் இல்லை.

பாதுகாப்பு

பாதுகாப்பிற்கு வரும்போது ஆல்டோ டூயல் ஏர்பேக்குகள், EBD உடன் ABS மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்களுடன் வருகிறது.

பூட் ஸ்பேஸ்

Boot Space

ஆல்டோ 800 இன் 177 லிட்டரை விட 214 லிட்டரில் உள்ள பூட் கணிசமான அளவு பெரியது. பூட் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் ஏற்றும் உதடு சற்று அதிகமாக இருப்பதால் பெரிய பொருட்களை ஏற்றுவது சற்று கடினமாக உள்ளது. கூடுதலாக தேவைப்பட்டால் பின் இருக்கையை மடித்து கொள்ள முடியும் இது அதிக சேமிப்பிடத்தை அளிக்கிறது.

செயல்பாடு

Performance

ஆல்டோ K10 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டூயல்ஜெட் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, இது 66.62 PS ஆற்றலையும் 89 Nm டார்க்கை உருவாக்குகிறது. இதே மோட்டார் தான் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட செலிரியோவிலும் இருக்கிறது.

Performance

ஆனால் ஆல்டோ K10 செலிரியோவை விட சிறியதாகவும், இலகுவாகவும் இருப்பதால், ஓட்டுவதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது. இது நல்ல லோ எண்ட் டார்க்கை கொண்டுள்ளது மற்றும் ஐடில் இன்ஜின் வேகத்திலும் மோட்டார் சுத்தமாக இழுவை திறனுடன் இருக்கிறது, இதன் விளைவாக குறைந்த வேகத்தில் K10 கியர் ஷிப்ட்கள் குறைந்தபட்சமாக வைக்கப்படுவதால், ஓட்டுவதற்கு மன அழுத்தம் இல்லாமல் இருக்கும். மேனுவல் டிரான்ஸ்மிஷனும் மென்மையாய் இருக்கிறது மற்றும் கிளட்ச் லேசாக இருக்கிறது. மறுபுறம் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் AMT கியர்பாக்ஸுக்கு வியக்கத்தக்க வகையில் மென்மையாக இருக்கிறது. லைட் த்ரோட்டில் அப்ஷிஃப்ட்கள் குறைந்த ஷிப்ட் ஷாக் உடன் போதுமான விரைவானவை மற்றும் விரைவான டவுன்ஷிஃப்ட்கள் கூட விரைவாகவும் நம்பிக்கையுடனும் செயல்படுத்தப்படும். இது கடினமான ஆக்சலரேஷனின் கீழ் மட்டுமே, அப்ஷிஃப்ட்கள் சற்று மெதுவாக உணர வைக்கின்றன, ஆனால் அதைத் தவிர வேறு எதுவும் குறை கூற வேண்டியதில்லை. பவர் டெலிவரி ரெவ் வரம்பு முழுவதும் வலுவாக உள்ளது, இது K10 -ஐ டிரைவிங் செய்வதை ஃபன் -ஆக மாற்றுகிறது. நெடுஞ்சாலை ஓட்டங்களுக்கு இதிலுள்ள செயல்திறன் போதுமானதாக உள்ளது, மேலும் இது ஒரு அப அம்சங்களை கொண்ட தயாரிப்பாக அமைகிறது.

Performance

நாங்கள் புகார் செய்ய வேண்டியிருந்தால், அது மோட்டாரின் ரீஃபைன்மென்ட் ஆகும். இது சுமார் 3000rpm வரை அமைதியாக இருக்கும், ஆனால் அதற்கு மேல் சத்தமாக இருக்கும் மற்றும் கேபினிலும் சில அதிர்வுகளை நீங்கள் உணரலாம்.

ரிடே அண்ட் ஹண்ட்லிங்

Ride and Handling

நீங்கள் முதல் முறையாக கார் வாங்குபவராக இருந்தால், எளிதாக ஓட்டும் விஷயத்தில் Alto K10 ஐ விட சிறந்த கார்கள் அதிகம் இல்லை. ஆல்ட்டோ உண்மையில் ட்ராஃபிக்கில் ஓட்டுவது ஃபன் - னாக உள்ளது - இது சிறிய இடம் இருந்தால் கூட அதில் பொருந்துகிறது, சாலையின் பார்வை சிறப்பாக உள்ளது மற்றும் அதை நிறுத்துவதற்கும் எளிதானது. சமன்பாட்டில் லைட் ஸ்டீயரிங், ஸ்லிக் கியர்பாக்ஸ் மற்றும் ரெஸ்பான்ஸிவ் இன்ஜின் ஆகியவற்றால், ஆல்டோ K10 ஒரு சிறந்த நகர டிரைவிங்கை கொடுக்கிறது. குறைந்த வேகத்தில் வாகனம் ஓட்டும்போது உங்களை எரிச்சலூட்டுவது ஸ்டீயரிங் அதுவாகவே மையத்துக்கு திரும்புவதில்லை. ஆகவே குறுகலான திருப்பங்களை எடுக்கும்போது இது சற்று கூடுதலான முயற்சி தேவைப்படுகிது.

Ride and Handling

ஆல்டோ K10 -ன் சவாரி தரமும் உங்களை ஆச்சரியப்படுத்துகிறது. இது மிகக் கூர்மையான குழிகளை கூட எளிதில் சமாளித்து விடுகிறது. சஸ்பென்ஷனில் நல்ல அளவு பயணம் உள்ளது மேலும் இது உங்களுக்கு வசதியான பயணத்தை வழங்க அமைதியாக வேலை செய்கிறது. சிறிது டயர் மற்றும் சாலை இரைச்சலுக்கு தவிர்க்கும் ஆல்டோ கேபின் ஒரு இனிமையான இடம். ஆல்டோ K10 அலைச்சலுக்கு மேல் கூட நல்ல அமைதியைக் காட்டுகிறது, நெடுஞ்சாலைப் டிரைவிங்கும் நன்றாகவே உள்ளது. ஒரு குறிப்பிட்ட பாயின்டுக்கு பிறகு சவாரி சிறிது சமதளமாக இருக்கும், ஆனால் ஒருபோதும் சங்கடமானதாக உணர வைக்காது.

வெர்டிக்ட்

ஒட்டுமொத்தமாக, புதிய மாருதி சுஸூகி K10 உண்மையில் ஈர்க்கிறது ஆனால் சில குறைபாடுகளும்இருக்கின்றன. இன்ஜின் அதிக ரெவ்களில் சத்தம் எழுப்புகிறது, பின்புற இருக்கை பயணிகளுக்கான சேமிப்பு இடங்கள் முற்றிலும் இல்லை மற்றும் சில முக்கிய வசதி அம்சங்களையும் காணவில்லை. இது தவிர, ஆல்டோ K10-வில் குறை செய்வது கடினம். இது உள்ளே விரும்பத்தக்கதாக இருக்கிறது, இன்ஜின் சிறந்த டிரைவிபிலிட்டியுடன் சக்தி வாய்ந்தது, நான்கு நபர்களுக்கு அதிக இடவசதி உள்ளது, சவாரி தரம் வசதியானது மற்றும் ஓட்டுவது மிகவும் எளிதானது. புதிய ஆல்டோ K10 ஆனது 800 -க்கு ஒரு சரியான அப்டேட்டைகொடுத்தது போல உணர வைக்கவில்லை, ஆனால் ஒட்டுமொத்தமாக ஒரு சிறந்த தயாரிப்பாக ஜொலிக்கிறது.

மாருதி ஆல்டோ கே10 இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • நான்கு பெரியவர்களுக்கு வசதியானதாக இருக்கிறது
  • பெப்பியான செயல்திறன் மற்றும் நல்ல சிக்கனம்
  • மென்மையான AGS டிரான்ஸ்மிஷன்

நாம் விரும்பாத விஷயங்கள்

  • பின்பகுதியில் மூன்று பேருக்கு ஏற்றபடி அகலமாக இல்லை
  • சில விடுபட்ட கம்ஃபோர்ட் அம்சங்கள்
  • பின்பக்க பயணிகளுக்கு குறைவான ஸ்டோரேஜ்
View More

மாருதி ஆல்டோ கே10 கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • ரோடு டெஸ்ட்
  • Maruti Dzire விமர்சனம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
    Maruti Dzire விமர்சனம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

    புதிய டிசையர் இப்போது பெரும்பாலான விஷயங்களில் இன்ஸ்பையரேஷனை முற்றிலுமாக தவிர்த்துள்ளது. அந்த முடிவின் பலன் காரில் நன்றாகவே தெரிகிறது.

    By nabeelNov 12, 2024
  • Maruti Swift விமர்சனம்: குறைவான ஸ்போர்ட்டி தன்மை ஆனால் குடும்பத்துக்கானது
    Maruti Swift விமர்சனம்: குறைவான ஸ்போர்ட்டி தன்மை ஆனால் குடும்பத்துக்கானது

    புதிய இன்ஜினுடன் கொஞ்சம் பவர் குறைக்கப்பட்டிருந்தாலும் கூட புதிய வசதிகள் சேர்க்கப்பட்டது மற்றும் டிரைவிங் அனுபவம் ஆகியவை இந்த காரை சிறந்த தினசரி காராக மாற்றுகின்றன.

    By anshOct 14, 2024
  • 2024 Maruti Swift ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: புதிதாக தெரிய கடுமையாக உழைத்துள்ளது
    2024 Maruti Swift ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: புதிதாக தெரிய கடுமையாக உழைத்துள்ளது

    2024 ஸ்விஃப்ட் காரை பார்க்கும் போது பழைய வசீகரமான ஆளுமையைத் தக்க வைத்துக் கொண்டவாறே, புதிதாக மாற எவ்வளவு கடினமாக உழைத்துள்ளது என்பது தெரிகிறது.

    By nabeelMay 31, 2024
  • Maruti Suzuki Wagon R Facelift: இந்தியாவில் இது மிகவும் பிரபலமான காராக இருப்பதற்கான காரணம் என்ன ?
    Maruti Suzuki Wagon R Facelift: இந்தியாவில் இது மிகவும் பிரபலமான காராக இருப்பதற்கான காரணம் என்ன ?

    மாருதி நிறுவனம் வேகன் R காரின் வடிவத்தை விட செயல்பாட்டிற்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. அதில் எது வேலை செய்துள்ளது? எது வேலை செய்யவில்லை ?

    By AnonymousMay 03, 2024
  • Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்
    Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்

    இந்த வித்தியாசமான தோற்றமுடைய க்ராஸ்ஓவர் எஸ்யூவி இன்னும் சில மாதங்களுக்கு எங்களிடம் இருக்கும். இந்த காரை பற்றிய எங்களது முதல் பார்வை இங்கே.

    By anshApr 15, 2024

மாருதி ஆல்டோ கே10 பயனர் மதிப்புரைகள்

4.4/5
அடிப்படையிலான380 பயனாளர் விமர்சனங்கள்
ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (380)
  • Looks (77)
  • Comfort (115)
  • Mileage (123)
  • Engine (71)
  • Interior (58)
  • Space (66)
  • Price (88)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical
  • R
    ritu on Jan 19, 2025
    5
    Style Power And Performance
    I have been driving this car for past 2 years now. Me being a passionate driver, find so much comfort and luxury in XL 6. The car is very easy 2 understand and gives excellent milage. The AC becomes effective after say-3 to 4 minutes. But then it is excellent. This 6 seater is a pure bliss.
    மேலும் படிக்க
  • N
    nitinkumar on Jan 18, 2025
    4
    Family Happiness Seamlessly
    Most comfortable vehicle for city ride and daily commute . Once you experience this car I am sure you have to think twice before going for another option pocket rocket
    மேலும் படிக்க
  • D
    devendra pratap singh on Jan 18, 2025
    4
    Himaruti Alto 0is The Best Car.
    Ye car midium clas walo ke liye bahot best hai es car ki mailage ahot achhi hai ye five sitter car hai ye price ke hisab se bahot achhi car hai?
    மேலும் படிக்க
    1
  • M
    mahesh on Jan 16, 2025
    5
    Value For Money
    Impressive fuel efficiency and compact style , Low running cost peppy performance is good safety comfortable seat power steering no other car for this prices segments boot space also enough
    மேலும் படிக்க
  • H
    haider on Jan 16, 2025
    5
    Maruti Alto K10 Is Best
    Maruti Alto K10 is best for middle purchaser it's comfort for every middle class families Alto K10 is also suitable for small families and good in performance attractive look and colours.
    மேலும் படிக்க
    1
  • அனைத்து ஆல்டோ k10 மதிப்பீடுகள் பார்க்க

மாருதி ஆல்டோ கே10 நிறங்கள்

மாருதி ஆல்டோ கே10 படங்கள்

  • Maruti Alto K10 Front Left Side Image
  • Maruti Alto K10 Rear view Image
  • Maruti Alto K10 Grille Image
  • Maruti Alto K10 Headlight Image
  • Maruti Alto K10 Wheel Image
  • Maruti Alto K10 Exterior Image Image
  • Maruti Alto K10 Rear Right Side Image
  • Maruti Alto K10 Steering Controls Image
space Image

மாருதி ஆல்டோ கே10 road test

  • Maruti Dzire விமர்சனம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
    Maruti Dzire விமர்சனம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

    புதிய டிசையர் இப்போது பெரும்பாலான விஷயங்களில் இன்ஸ்பையரேஷனை முற்றிலுமாக தவிர்த்துள்ளது. அந்த முடிவின் பலன் காரில் நன்றாகவே தெரிகிறது.

    By nabeelNov 12, 2024
  • Maruti Swift விமர்சனம்: குறைவான ஸ்போர்ட்டி தன்மை ஆனால் குடும்பத்துக்கானது
    Maruti Swift விமர்சனம்: குறைவான ஸ்போர்ட்டி தன்மை ஆனால் குடும்பத்துக்கானது

    புதிய இன்ஜினுடன் கொஞ்சம் பவர் குறைக்கப்பட்டிருந்தாலும் கூட புதிய வசதிகள் சேர்க்கப்பட்டது மற்றும் டிரைவிங் அனுபவம் ஆகியவை இந்த காரை சிறந்த தினசரி காராக மாற்றுகின்றன.

    By anshOct 14, 2024
  • 2024 Maruti Swift ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: புதிதாக தெரிய கடுமையாக உழைத்துள்ளது
    2024 Maruti Swift ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: புதிதாக தெரிய கடுமையாக உழைத்துள்ளது

    2024 ஸ்விஃப்ட் காரை பார்க்கும் போது பழைய வசீகரமான ஆளுமையைத் தக்க வைத்துக் கொண்டவாறே, புதிதாக மாற எவ்வளவு கடினமாக உழைத்துள்ளது என்பது தெரிகிறது.

    By nabeelMay 31, 2024
  • Maruti Suzuki Wagon R Facelift: இந்தியாவில் இது மிகவும் பிரபலமான காராக இருப்பதற்கான காரணம் என்ன ?
    Maruti Suzuki Wagon R Facelift: இந்தியாவில் இது மிகவும் பிரபலமான காராக இருப்பதற்கான காரணம் என்ன ?

    மாருதி நிறுவனம் வேகன் R காரின் வடிவத்தை விட செயல்பாட்டிற்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. அதில் எது வேலை செய்துள்ளது? எது வேலை செய்யவில்லை ?

    By AnonymousMay 03, 2024
  • Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்
    Maruti Fronx: நீண்ட கால விமர்சனத்துக்கான கார் அறிமுகம்

    இந்த வித்தியாசமான தோற்றமுடைய க்ராஸ்ஓவர் எஸ்யூவி இன்னும் சில மாதங்களுக்கு எங்களிடம் இருக்கும். இந்த காரை பற்றிய எங்களது முதல் பார்வை இங்கே.

    By anshApr 15, 2024
space Image

கேள்விகளும் பதில்களும்

Abhi asked on 9 Nov 2023
Q ) What are the features of the Maruti Alto K10?
By CarDekho Experts on 9 Nov 2023

A ) Features on board the Alto K10 include a 7-inch touchscreen infotainment system ...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswers (3) இன் எல்லாவற்றையும் காண்க
Devyani asked on 20 Oct 2023
Q ) What are the available features in Maruti Alto K10?
By CarDekho Experts on 20 Oct 2023

A ) Features on board the Alto K10 include a 7-inch touchscreen infotainment system ...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Bapuji asked on 10 Oct 2023
Q ) What is the on-road price?
By Dillip on 10 Oct 2023

A ) The Maruti Alto K10 is priced from INR 3.99 - 5.96 Lakh (Ex-showroom Price in Ne...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Devyani asked on 9 Oct 2023
Q ) What is the mileage of Maruti Alto K10?
By CarDekho Experts on 9 Oct 2023

A ) The mileage of Maruti Alto K10 ranges from 24.39 Kmpl to 33.85 Km/Kg. The claime...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Prakash asked on 23 Sep 2023
Q ) What is the seating capacity of the Maruti Alto K10?
By CarDekho Experts on 23 Sep 2023

A ) The Maruti Alto K10 has a seating capacity of 4 to 5 people.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.10,678Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
மாருதி ஆல்டோ கே10 brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.4.81 - 7.20 லட்சம்
மும்பைRs.4.73 - 6.81 லட்சம்
புனேRs.4.69 - 6.76 லட்சம்
ஐதராபாத்Rs.4.74 - 7.09 லட்சம்
சென்னைRs.4.69 - 7.04 லட்சம்
அகமதாபாத்Rs.4.53 - 6.77 லட்சம்
லக்னோRs.4.45 - 6.65 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.4.63 - 7.22 லட்சம்
பாட்னாRs.4.70 - 6.95 லட்சம்
சண்டிகர்Rs.4.60 - 6.84 லட்சம்

போக்கு மாருதி கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்

Popular ஹேட்ச்பேக் cars

  • டிரெண்டிங்கில்
  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
அனைத்து லேட்டஸ்ட் ஹேட்ச்பேக் கார்கள் பார்க்க

view ஜனவரி offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience