Tata Tiago EV: ஃபைனல் லாங் டேர்ம் ரிப்போர்ட்
Published On ஆகஸ்ட் 06, 2024 By arun for டாடா டியாகோ இவி
- 0K View
- Write a comment
கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு டியாகோ EV கார்தேக்கோ கேரேஜிலிருந்து வெளியேறுகிறது.
மூன்று மாதங்களுக்கு முன்பு சோதனைக்கு வந்த டியாகோ இவி -யின் ஓடோமீட்டரில் 4500 கி.மீ ஓடிய பின்னர் அது நமது கேரேஜை விட்டு சென்றுள்ளது. எது சரியானது எது சரிவரவில்லை என்பது பற்றிய எங்கள் இறுதி கருத்துகள் இங்கே உள்ளன.
உங்களின் முதல் EV கார்!
டியாகோ EV உடன் பழகுவது எவ்வளவு எளிது என்பது ஒரு வகையில் ஆச்சரியம்தான். இது டியாகோ EV அனுபவத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக உள்ளது. வாகனம் ஓட்டும் புதியவர் உட்பட எவரும் சில நிமிடங்களில் அதைப் பழக்கப்படுத்திக்கொள்ளலாம். கச்சிதமான அளவு சூப்பர் லைட் ஸ்டீயரிங் வீல் மற்றும் யூகிக்கக்கூடிய பவர் டெலிவரி ஆகியவை உங்களுக்கு இந்த காரின் மேல் நம்பிக்கையைத் வைப்பதற்கு பெரிதும் உதவுகின்றன.
உண்மையில் பட்ஜெட் தொந்தரவு இல்லை என்றால் நிலையான பெட்ரோலை விட எலக்ட்ரிக் பதிப்பைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அதிர்வுகள், சராசரி செயல்திறன் மற்றும் மெதுவான ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகியவை பெட்ரோல் டியாகோவில் பொதுவான புகார்களாக கூறப்படும். இவை அனைத்தும் EV உடன் சரி செய்யப்பட்டுள்ளன. டியாகோ EV -யின் லாங் ரேஞ்ச் பதிப்பிலும் அதிக பவர்ஃபுல்லான மோட்டார் கிடைக்கிறது.
உங்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும்
அதன் விலைக்கு டியாகோ EV அனைத்து அத்தியாவசிய விஷயங்களையும் கொண்டுள்ளது. செய்கிறது. டேடைம் ரன்னிங் லைட்ஸ் மற்றும் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள் ஆகியவை உள்ளன. அலாய் வீல்கள் மிகவும் மிகவும் கொடுக்கப்படவில்லை. ஆனால் ஒருவேளை கொடுக்கப்பட்டிருந்தால் இது டியாகோவின் விலையை உயர்த்தியிருக்கும். கீலெஸ் ஸ்டார்ட், கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற பிட்களுடன் வசதிகளின் பட்டியலும் விரிவானது.
இந்த விலைக்கு நீங்கள் அதிகம் விரும்புவது மிகக் குறைவு. இருப்பினும் முன் ஆர்ம்ரெஸ்ட்கள் போன்றவை கொடுக்கப்படவில்லை. எங்கள் சோதனைக் கார் ரிவர்ஸ் கேமராவுடன் வந்தது. ஆனால் பார்க்கிங் சென்சார்கள் இல்லை.
மேலும் இன்ஃபோடெயின்மென்ட் அனுபவம் - டச் ஸ்கிரீன் தெளிவு/ரெஸ்பான்ஸ் மற்றும் அடிப்படை கால்குலேட்டர் போன்ற இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகிய அடிப்படை விஷயங்கள் 2024 -ஆம் ஆண்டு கார்களில் ஒப்பிடும் போது கொஞ்சம் சுமாராகவே இருக்கின்றன.
வீட்டிலேயே சார்ஜ் செய்யுங்கள்! முடிந்தவரை சார்ஜ் செய்யுங்கள்!
எங்கள் ஆரம்ப அறிக்கையில் இதை நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம் மேலும் நாம் மீண்டும் ஒருமுறை சொல்ல வேண்டியிருக்கிறது. டியாகோ EV போன்ற வாகனங்களுக்கு வீட்டில் சார்ஜர் இருப்பது மிகவும் அவசியமானது. சோதனைக் காலத்தின் முடிவில் 180-200 கி.மீ தூரத்தை ஒரு சார்ஜ் மூலம் வழங்க முடியும் என்பதில் நான் உறுதியாக தெரிந்தது. இருப்பினும் பொது சார்ஜிங் உள்கட்டமைப்பை சார்ந்திருக்க வேண்டியதன் மூலம் சார்ஜிங்கை சற்று திட்டமிட வேண்டியிருந்தது.
என்னால் முடிந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் டியாகோ EV -யை சார்ஜ் செய்ய முயற்சித்தேன். அதை டாப் அப் செய்வது குறிக்கோள் அல்ல. நான் செலவழித்த சார்ஜை திரும்பப் பெற்றால் போதும் என்று தோன்றியது. உதாரணமாக வேலைக்காக தானேயிலிருந்து புனேவுக்கு வாகனம் ஓட்டும்போது பேட்டரி 10-15% ஆகக் குறையும். நான் எனது நாளுக்குச் செல்லும்போது டியாகோ EV உடனடியாகச் சார்ஜரில் இணைக்கப்படும். வேலை நாளின் முடிவில் வீட்டிற்குத் திரும்புவதற்கு போதுமான சார்ஜ் தேவைக்கும் அதிகமாக இருந்தது.
ஒட்டுமொத்தமாக டியாகோ EV உடன் வாழ்வது எளிது நீங்கள் மனநிலையில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தினால் போதுமானது. நீங்கள் சக்கரத்தின் பின்னால் அதிக நேரம் செலவழிக்கும்போது EV-யை எவ்வாறு திறமையாக ஓட்டுவது என்பதையும் நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள்.
சிறிய தவறுகள் மற்றும் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என நினைக்கக்கூடிய விஷயங்களின் பட்டியல் இங்கே:
-
பின்புற வலது டோர் ஹேண்டிலில் உள்ள பூச்சு உறிவதை போல தோன்றியது. கடினமான பிளாஸ்டிக் டிரிம் கொடுக்கப்பட்டிருந்தால் இங்கே சிறப்பாக இருந்திருக்கும்.
-
இன்ட்டீரியரில் வெள்ளை நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளதால் கறை படிவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதை அழகாக வைத்திருக்க நீங்கள் சற்று நேரத்தையும் முயற்சியையும் பணத்தையும் செலவிட வேண்டும்.
-
பஞ்சர் ரிப்பேர் கிட் அவசரத் தேவைக்கு போதுமானதுதான் என்றாலும் ஸ்பேர் வீல் எதுவும் வழங்கப்படவில்லை.
-
தரையின் கீழ் வைக்கப்பட்டுள்ள பேட்டரி பேக் என்பது உயர்த்தப்பட்ட இருக்கை நிலையைக் குறிக்கிறது. ஓட்டுநர் இருக்கை உயரத்திற்கு ஏற்ப சரி செய்யக்கூடியது. துரதிர்ஷ்டவசமாக கோ-டிரைவர் பயணி தங்கள் முழங்கால்களை உயர்த்தி வழக்கத்தை விட உயரமாக உட்கார வேண்டியிருக்கிறது. 6 அடிக்கு மேல் உயரம் உள்ளவர்களுக்கு இங்கு சிரமமாக இருக்கும்.
-
ரீஜென் சுவிட்சுகளை வைக்கும் இடம் சிறப்பாக இருந்திருக்கலாம். இது பயன்படுத்த மிகவும் எளிதாக இல்லை. குறிப்பாக பயணத்தின் போது.
-
கேபினில் உள்ள ஸ்டோரேஜ் பயன்படுத்த முடியாதது.
அடிப்படையில் டியாகோ EV என்பது உபயோகத்தின் எளிமை , அடிப்படை வசதிகள் ஆகியவற்றில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற ஒரு வாகனமாகும். இன்ஃபோடெயின்மென்ட் அனுபவத்தின் அடிப்படையில் இது பழமையானதாக உணர வைக்கிறது . இந்த காரின் விலை உங்களுக்கு ஏற்றதாக தோன்றினாலோ வீட்டில் மற்றும்/அல்லது அலுவலகத்தில் சார்ஜ் செய்வது எல்லா நேரங்களிலும் சாத்தியமாக இருந்தாலோ டியாகோ EV உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். நிலையானதாக உங்கள் பயன்பாடு சுமார் 100-150 கி.மீ இருந்தால் எலக்ட்ரிக் வாகனத்தை இயக்குவதற்கான செலவு பலன்களை உண்மையிலேயே அறுவடை செய்யலாம்.
டாடா இப்போது செய்ய வேண்டியது அதன் தரக் கட்டுப்பாடு மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சர்வீஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது மட்டுமே. பிரேக் டவுன்கள் மற்றும் குறைபாடுகள் பற்றிய உரிமையாளர்களின் அறிக்கைகள் தயாரிப்பின் நம்பகத்தன்மையைப் பற்றி சந்தேகம் கொள்ள வைக்கக்கூடும்.
எல்லாமே நன்றாக வேலை செய்யும் பட்சத்தில் ஒரு நல்ல சிட்டி EV எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு டியாகோ EV ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.