• English
  • Login / Register

டாட்டா நெக்ஸான் டீசல் AMT: வல்லுநர் விமர்சனம்

Published On மே 21, 2019 By nabeel for டாடா நிக்சன் 2017-2020

  • 1 View
  • Write a comment

டாட்டா நெக்ஸான் டீசல் AMT க்கான மேனுவல் அதிக அளவு பிரீமியத்தை எதிர்பார்க்கின்றது. கூடுதல் பணத்தை செலவு செய்யும் அளவிற்கு அது அளிக்கும் வசதி மதிப்புள்ளதா?

Tata Nexon AMT

ஆட்டோமேட்டிக்ஸ் தேவை அதிகரித்ததால், டாட்டா நெக்ஸான் ஒரு AMT உடன் பொருத்தப்பட்டது மற்றும் அது 2018 தயாராக இருந்தது. ஆனால், இந்த சௌகரியம் மிகுந்த செலவில் மட்டுமே கிடைக்கின்றது. நெக்ஸான்  AMT வகைகளில், ரூ. 70,000  பிரீமியம் மேனுவல் மேல் புகுத்தியது, ஆனால் கூடுதல் அம்சங்களை வழங்கவில்லை. பணத்தை மிச்சப்படுத்தி மேனுவல் வாங்க திட்டமிடுகிறீர்களா இல்லை கேட்ட விலை மதிப்பென்று நினைக்கிறீர்களா வசதியை மனதில் கொண்டு?

Car Tested: Tata Nexon AMT

  • கார் சோதனை: டாடா நெக்ஸான் AMT
  •  வேரியண்ட்: XZA + உடன் டுவள்-டோன் ரூப்
  •  எஞ்சின்: 1.5 லிட்டர் டீசல்
  •  விலை: ரூ 10.59 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி)

தோற்றம்

Tata Nexon

  • நெக்ஸான் ஒரு வழக்கமான SUV போல் இல்லை, ஆனால் இதன்  கவர்ச்சிமிக்க உடல் வேலைபாடு ஒரு நல்ல சாலை உணர்வை கொடுக்கிறது.
  •  முன் தோற்றம் கண்ணை கவரும் வகையில் உள்ளது, பெரிய ஹெட்லேம்ப்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த LED DRLs க்ரில்லில் இணைக்கின்றது.
  •  புதிய ஆரஞ்சு பாடி பெயிண்ட், சாம்பல் நிற கூரை இணைந்து நெக்ஸானுக்கு சிறந்த இரட்டை தொனியில் பெயிண்ட் திட்டத்தை வழங்குகின்றது.

Tata Nexon

  •  பக்கத்திலிருந்து பார்த்தால், நெக்ஸானின் சறுக்கும் கூரை கூப்- போன்ற நிலைப்பாட்டை தருகிறது.
  •  பெரிய 215/60, R16 சக்கரங்கள் மற்றும் கருப்பு உறைப்பூச்சு ஆகியவை காட்சி கடினத்தன்மைக்குச் சேர்க்கின்றன.

Tata Nexon

  • ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் இடையேயான ஒரே வேறுபாடு முன்னவனின் டைல்கேட் மீதுள்ள மீது "XZA +" பேட்ஜ் ஆகும்.
  •  நெக்ஸான் பின்புறத்தில் இருந்து குறிப்பாக ஈர்க்கத்தக்க விதத்தில் இல்லை, 209 மிமீ கிரௌண்ட் கிலீயரென்ஸ் மற்றும் வெளிப்படும் வெளியேற்ற மஃப்லெர்க்கு நன்றி.

உட்புறம்

Tata Nexon

  • மூன்று அடுக்கு டாஷ்போர்டு அமைப்பு சுத்தமாக இருக்கிறது மற்றும் உயர் தரமான பிளாஸ்டிக்கு நன்றி, இது பிரீமியம் உணர்வை தருகின்றது. குறிப்பாக, இது காம்பெடிஷனை விட சிறந்தது.

​​​​​​​Tata Nexon

  • 6.5 அங்குல தொடுதிரை இப்பிரிவில் மிகச் சிறந்தது அல்ல, ப்ர்ஸ்சா மற்றும் எக்கோஸ்போர்ட்டில் உள்ளவை மிகச் சிறந்தது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ இணக்கத்தன்மையுடன் வந்துள்ளது, ஆனால் ஆப்பிள் கார்ப்ளேயில் இலக்கு தவறியது.

  • டிரைவ் பயன்முறைகளை மாற்றுதல் திரையில் விவரிக்கும் வண்ணத்தை மாற்றுகிறது.

  • 8 ஸ்பீக்கர் ஹர்மன் ஒலி அமைப்பு மிகவும் சிறந்தது.

​​​​​​​Tata Nexon

  • பெரிய வேறுபாடு இங்குள்ள சென்டர் கன்சோலில் உள்ள AMT கியர் லிவர் உடன் பின்னால் உள்ள டிரைவ்-மோட் செலெக்டர் ஆகும்.

​​​​​​​Tata Nexon

  • கேபினில் உள்ள இடம் நெக்ஸான்க்கு வலுவான புள்ளியாக உள்ளது, இதில் போதுமான ஷோல்தேர், கால் மற்றும் க்னீரூம் (முறையே 1385 மிமீ, 970 மிமீ, 715-905 மி.மீ)ல் கிடைக்கின்றது.

  • காபின் நன்றாக இருந்தாலும், அது நடைமுறைக்கு ஏற்றவாறு இல்லை. உதாரணமாக, சேமிப்பக இடங்கள் குறுகிய மற்றும் பெரிய ஸ்மார்ட்போன்கள் வைத்துக்கொள்ள எதுவாக இல்லை.

​​​​​​​Tata Nexon Diesel AMT: Expert Review

  • சென்டர் கன்சோலில் உள்ள டம்போர் கதவு பாக்கெட் குறுகி மற்றும் ஆழமாக உள்ளது. மேலும், பாதிப்புக்குள்ளாகும் பொருட்களை உள்ளே தள்ளி வைக்க முடியாது.

  • எங்களுக்கு ஹாங்க்கிங்கிலும் ஒரு சிக்கல் இருந்தது. ஹார்ன் பேட்டில் சில பிரச்சனை இருந்தது மற்றும் அது ஹார்ன் சத்தமிட மிகவும் கடுமையான உந்துதல் வேண்டும்.

  • நாங்கள் மீண்டும் கவனித்தோம், பின்புற கதவு பூட்டுகள் ஏற்கனவே துருப்பிடித்திருந்தன.

  • அறிமுகப்படுத்திய பின்னரே சோதனை செய்த மேனுவல் கார்கள் சில மின்சார சிக்கல்களைக் கொண்டிருந்தன, அவற்றை இங்கே பார்க்கலாம். இந்த நேரத்தில் என்றாலும், அது மீண்டும் ஏற்படவில்லை.

செயல்திறன்

Tata Nexon Diesel AMT: Expert Review

  •  டாட்டாவின் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. 1500RM எனக் குறைவாக இருக்கும் 260NM டார்க், நகரத்தில் சிரமமின்றி அதை மாற்ற உதவுகிறது.
  •  AMT ஒரு நல்ல பயன்படுத்தும் அனுபவத்தை செய்கிறது. அதிக கியரில் கூட, 30kmph மூன்றாவதில், SUV டவுன்ஷிப்ட் இல்லாமல் சுத்தமாக பிக்அப் ஆகின்றது.

​​​​​​​Tata Nexon Diesel AMT: Expert Review

  •  இது என்னவென்றால் மெதுவான கியர்ஷிபிட்ஸ், AMT யின் பண்புகள், கடுமையாக முடுக்கும் போது உங்கள் வழியில் வராது மற்றும் மின் விநியோகத்தில் எந்த வெளிப்படையான பின்னடைவும் இல்லை, ஏறத்தாழ 1600rpm டர்போவுடன்.
  •  எதிர்மறையாக, முதல் கியர் சிறிது தோராயமாக ஈடுபடுகிறது. மற்றும் பம்பர்-க்கு-பம்பர் போக்குவரத்த்தில், சிறிய குலுக்கம் ஏற்படுத்துகின்றது இது காலப்போக்கில் சிறிய எரிச்சலூட்டும் உணர்ச்சியை தரலாம்.

​​​​​​​Tata Nexon Diesel AMT: Expert Review

  •  மேனுவல் போலவே, நீங்கள் தேர்வு செய்ய மூன்று இயக்கி முறைகள் உள்ளன - சிட்டி, ஸ்போர்ட் மற்றும் ஈக்கோ.  இவை இயந்திர வரைபடத்தை மாற்றியமைக்கும் ஒவ்வொன்றிற்கும் உள்ள வேறுபாடு மிகவும் தெளிவாக உள்ளது.
  •  ஸ்போர்ட் மோடில், த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் மேலும் தீவிரமாகி, அதிக rpm வரை டிரான்ஸ்மிஷன் ரெவ்ஸ்களைக் கொண்டுள்ளது.
  •  நீங்கள் நல்ல மனநிலையில் இருந்தால் இது நல்ல வேடிக்கையை தரும், ஆனால் மற்றபடி சவாரி செய்வது சற்று குலுக்கமானது.

​​​​​​​Tata Nexon Diesel AMT: Expert Review

  • இந்த மோடில், Nexon AMT 0-100kmph ல்  16.62 வினாடிகளில் செல்கிறது, சற்று 3 வினாடிகளுக்கு மேல் அதன் மேனுவல் வகையறாக்களை விட.
  • 20-80kmph கிக் டவுன் 9.96 விநாடிகள் எடுத்தது.

  • மேலும், நீங்கள் மேனுவலுக்கு மாற்றப்பட வேண்டும் என்றால், இயல்பாகவே ஸ்போர்ட்டிற்கு அமைக்கப்பட்டிருக்கும். இது சற்று உக்கிரமானதாகவும் மற்றும் பயணங்களுக்கு ஏற்றதாக இல்லை.

​​​​​​​Tata Nexon

  • சிட்டி மோடில், த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் நன்றாக உள்ளது மற்றும் ஷிபிட்ஸ் மென்மையானவை.

  • ஈக்கோ மோடுக்கு மாற்றவும், த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் மறுபடியும்  கீழிறங்கி, ஓய்வான ஓட்டத்திற்கு சிறந்ததாக அமைகிறது. இந்த முறையில் SUV நகரில் 17.13 kmpl மற்றும் நெடுஞ்சாலையில் 23.60kmpl கொடுத்தது, இது சராசரியாக, மேனுவலை விட  1 கிமீ குறைவாக உள்ளது.

ரைடு மற்றும் கையாளுதல்

Tata Nexon Diesel AMT: Expert Review

  • நெக்ஸான் சவாரி ஒரு வழக்கமான SUV போன்றது -  மென்மையான சிறிய பக்க- பக்க இயக்கம் கொண்டது.
  •  நீங்கள் அந்த சிறிய குழிகள் அல்லது நகரில் ஸ்பீட் பிரேக்கர்களை உணர மாட்டீர்கள், மெதுவான வேகத்தில் சில சிறிய அசைவு அறையில் தெரியும்.
  •  SUV உடல் சுழற்சியால் பாதிக்கப்படுகின்றது, ஆனால் அது சற்று கவலையை அளிக்கின்றது  உற்சாகமாக வலது கால் மூலம் மூலைகளில் எடுத்து போது மட்டுமே.

​​​​​​​Tata Nexon Diesel AMT: Expert Review

  • சஸ்பென்ஷன் ரோட்டில் உள்ள புடைப்புகளுக்கு பிறகு தன்னை வேகமாக சரி செய்து கொள்கிறது, மற்றும் இது நெடுஞ்சாலைகளில் மூன்று இலக்க வேகத்தில் SUV யை நிலை செய்கிறது.
  •  இருக்கைகளின் 'குஷனிங் கூட மென்மையாக உள்ளது மற்றும் இது நீங்கள் வசதியாக இருக்க உதவுகிறது.
  •  ப்ரெஸ்ச மற்றும் எக்கோஸ்போர்ட் ஒப்பிடும்போது, நெக்ஸான் சவாரி தரமானது இந்திய சாலைகள் மிகவும் ஏற்றதாகும்.

வகைகள்

Tata Nexon Diesel AMT: Expert Review

  • நெக்ஸான் AMT XMA, XZA + மற்றும் நெக்ஸான் XZA + டுவல் டோன் ரூப் உடன் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் கிடைக்கின்றன.
  •  நீங்கள் XZA + க்காக பட்ஜெட்டைக் கொண்டிருக்கவில்லை மற்றும் இன்னும் ஒரு ஆட்டோமேட்டிக் தேவைப்பட்டால், இப்போது நீங்கள் குறைந்த XMA மாறுபாட்டிற்கு தேர்வு செய்யலாம், இது ரூ 8.53 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) விலையில் கிடைக்கின்றது.
  •  அவ்வாறு செய்வதால், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், DRLs, ரூப்ரெயில்ஸ், அலாய் சக்கரங்கள், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு, தொடுதிரை இன்போடைன்மென்ட் சிஸ்டம், நான்கு ஸ்பீக்கர்கள், டிரைவர் இன் சீட் உயரம் சரிசெய்தல், முன் ஆர்ம்ரஸ்ட் மற்றும் டம்போர் கதவு சேமிப்பு, பின்புற ஆர்ம்ரஸ்ட், பின் டீஃபாஹர் மற்றும் ISOFIX மவுன்ட்ஸ் போன்றவைகளை இழக்க நிற்கின்றது.

தீர்ப்பு

Tata Nexon Diesel AMT: Expert Review

AMT அன்றாட ஓட்டுநர் தொல்லைகளை நன்கு தவிர்க்கும் ஆற்றல் கொண்டது. ஸ்டாப்-அண்ட்-கோ போக்குவரத்து நெரிசலில் மட்டுமே நீங்கள் சற்று கடினமாக உணர நேரிடும். மெட்ரோ நகரங்களில் நீங்கள் ஒரு புது ஓட்டுநர் அல்லது மெட்ரோவின் தினசரி ட்ராஃபிக்கைக் கண்டு களைத்து போனவராக இருந்தால், அப்போதுதான் Nexon AMT அர்த்தமுள்ளதாக இருக்கும். ஆனால், உங்களுடைய பகுதியில் போக்குவரத்து சூழ்நிலை மோசமாக இருக்கவில்லை என்றால், பணத்தை காப்பாற்றுவது ஞானமானது.

பரிந்துரை வாசிக்க

  •  டாட்டா ஜூலை சலுகைகள்: நெக்ஸான், டியோகோ, டைகோர்க்கு அற்புதமான நன்மைகள் கிடைக்கும்
  • மாருதி விட்டாரா ப்ர்ஸ்சா Vs டாடா நெக்ஸான் Vs ஃபோர்ட் ஈகோஸ்போர்ட் - எந்த கார் சிறந்த இடத்தை வழங்குகிறது
Published by
nabeel

சமீபத்திய எஸ்யூவி கார்கள்

வரவிருக்கும் கார்கள்

  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா be 6
    மஹிந்திரா be 6
    Rs.18.90 - 26.90 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • புதிய வகைகள்
    மஹிந்திரா xev 9e
    மஹிந்திரா xev 9e
    Rs.21.90 - 30.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஆடி க்யூ6 இ-ட்ரான்
    ஆடி க்யூ6 இ-ட்ரான்
    Rs.1 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு

சமீபத்திய எஸ்யூவி கார்கள்

×
We need your சிட்டி to customize your experience