Mahindra Thar Roxx விமர்சனம்: மிகவும் நன்றாகவே இருக்கிறது, ஒரே ஒரு விஷயத்தை தவிர
Published On ஆகஸ்ட் 30, 2024 By nabeel for மஹிந்திரா தார் ராக்ஸ்
- 1 View
- Write a comment
மஹிந்தரா நிறுவனம் கேட்டுக் கொண்டிருந்தது. பத்திரிகையாளர்கள் தார் பற்றி புகார் கூறும்போது அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு முறையும் ஒரு உரிமையாளர் தார் காரின் மேல் விரக்தியடையும் போதும் அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். இப்போது தார் மீண்டும் வந்துள்ளது - இப்போது முன்பை விட பெரியதாக, சிறந்ததாக மற்றும் மிரட்டலாக.
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தார் 5-டோர் எஸ்யூவி -யான மஹிந்திரா தார் ரோக்ஸ் இறுதியாக டிரைவரை போலவே குடும்பத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. RWD வேரியன்ட்களுக்கான விலை ரூ.12.99 லட்சத்தில் தொடங்கி ரூ.20.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும். அதற்கு நேரடி போட்டியாளர்கள் யாரும் இல்லை என்றாலும், இது மஹிந்திரா ஸ்கார்பியோ N, ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், டாடா ஹாரியர் மற்றும் மாருதி ஜிம்னி ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
தோற்றம்
நாங்கள் மிகவும் விரும்பிய தாரின் மிகப்பெரிய பாசிட்டிவ் பாயிண்ட் என்பது சாலையில் இதன் தோற்றம்தான். மேலும் தார் ராக்ஸ்ஸுடன் அந்த விஷயம் இன்னும் மேம்பட்டுள்ளது. ஆம், நிச்சயமாக, இந்த கார் முன்பை விட நீளமானது மேலும் வீல்பேஸும் நீளமானது. இருப்பினும் அகலம் கூட அதிகரித்துள்ளது மற்றும் அதன் சாலை தோற்றம் இப்போது மேம்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல, மஹிந்திரா 3-டோரில் இருந்து சில விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளன. மற்றும் இங்கு நிறைய பிரீமியம் எலமென்ட்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய மாற்றம் இந்த கிரில் ஆகும். இது முன்பை விட சிறியதாக மாறியுள்ளது. கிரில் தவிர நீங்கள் இப்போது புதிய LED DRL-கள், LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்கள், LED இண்டிகேட்டர்கள் மற்றும் LED ஃபாக் லேம்ப்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பக்கவாட்டில் நீங்கள் கவனிக்கும் மிகப்பெரிய மாற்றம் இந்த அலாய் வீல்கள். இவை 19-இன்ச் அலாய்களில் பெரிய ஆல் டெர்ரெயின் டயர்கள் உள்ளன. இந்த பின்புற டோர் முற்றிலும் புதியது. இந்த டோர்களின் மிகப்பெரிய விஷயம் டோர் ஹேண்டில்கள். அவை ஃப்ளஷ் டைப்பாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இங்கே சேர்க்கப்பட்டுள்ள மற்றொரு கூடுதல் வசதி ரிமோட் ஓப்பனிங் ஃப்யூல் ஃபில்லர் கேப் ஆகும். இப்போது காரின் உள்ளே இருந்து எரிபொருள் டேங்க் மூடியை திறக்க முடியும்.
இந்த காரின் பின்புற தோற்றம் 3-டோர் காரில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக தெரிகிறது. ஏனெனில் நிறைய விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளன. இப்போது உயர்வான இடத்தில் பொறுத்தபட்ட ஸ்டாப் லைட்டிங் உள்ளது. இப்போதும் முழு அளவிலான அலாய் 19-இன்ச் வீல்கள் உள்ளன. மேலும் லைட்டிங் எலமென்ட்கள்,, LED டெயில் லைட்ஸ், LED இண்டிகேட்டர்கள் உள்ளன. மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால் இப்போது நீங்கள் ஃபேக்டரியில் இருந்து பொருத்தப்பட்ட ரியர் கேமரா உள்ளது. எனவே நீங்கள் அதை வெளியில் நீங்கள் பொருத்த வேண்டியிருக்காது.
பூட் ஸ்பேஸ்
3-டோர் காரை விட பூட் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ அளவை பற்றி பேசினால் அது 447 லிட்டர் இடத்தைப் பெறுகிறது. இது பேப்பரில் ஹூண்டாய் கிரெட்டாவை விட அதிகம். மேலும் இங்கு பார்சல் அலமாரி இல்லாததால் நீங்கள் விரும்பும் வழியில் சாமான்களை அடுக்கி வைக்க உங்களுக்கு அதிக சுதந்திரம் உள்ளது. பெரிய சூட்கேஸ்களை இங்கே நேராக வைத்து ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கலாம். பூட் ஃப்ளோர் அகலமாகவும் தட்டையாகவும் இருப்பதால் இந்த சூட்கேஸ்களை பக்கவாட்டிலும் அடுக்கி வைக்கலாம்.
உட்புறம்
ரோக்ஸ் இல் ஓட்டுநர் நிலை சிறப்பாக உள்ளது. ஆனால் மிகவும் உயரமான ஓட்டுனர் நட்பு இல்லை. நீங்கள் 6 அடிக்கு கீழ் இருந்தாலும் கூட நீங்கள் அசௌகரியத்தை உணர மாட்டீர்கள். நீங்கள் உயரமாக உட்கார்ந்து பார்த்தால் நல்ல சாலை பார்வை கிடைக்கும். ஆகவே இது வாகனம் ஓட்டும் போது நம்பிக்கையை அளிக்கிறது. ஆனால் நீங்கள் உயரமாக இருந்தால், ஃபுட் வெல் சற்று குறைய தொடங்கும். மேலும், இந்த ஸ்டீயரிங் உயரத்தை மட்டுமே அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும் என்பதால் நீங்கள் ஃபுட் வெல் -க்கு அருகில் உட்கார வேண்டும். சில சமயங்களில் இது ஒரு மோசமான ஓட்டும் நிலையை ஏற்படுத்துகிறது.
ஃபிட், ஃபினிஷ் மற்றும் தரம்
ரோக்ஸ் அதன் உட்புறத்தை 3-டோர் தார் உடன் பகிர்ந்து கொள்கிறது என்று சொல்வது நியாயமற்றதாக இருக்கும். தளவமைப்பு பெரிய அளவில் ஒரே மாதிரியாக இருந்தாலும் -- பொருட்கள் மற்றும் அவற்றின் தரம் இப்போது முற்றிலும் மாறியுள்ளது. இப்போது ஆல் டாஷ்போர்டின் மேற்புறத்திலும் கான்ட்ராஸ்ட் ஸ்டிச் உடன் சாப்ட் லெதரெட் மெட்டீரியல் கிடைக்கும். ஸ்டீயரிங் வீல், டோர் பேட்கள் மற்றும் எல்போ பேட்களிலும் மென்மையான லெதரெட் கவர் கிடைக்கும். இருக்கைகளும் பிரீமியமாக இருக்கின்றன. ஒரு தார் காரை உள்ளே இவ்வளவு பிரீமியமாக பார்க்க முடியும் என்று நாங்கள் நினைத்து பார்க்கவில்லை.
வசதிகள்
நிறைய புதிய வசதிகளும் இப்போது சேர்க்கப்பட்டுள்ளன. டிரைவர் பக்க கன்சோலில் இப்போது அனைத்து பவர் விண்டோ ஸ்விட்சுகள், லாக் மற்றும் லாக் ஸ்விட்ச்கள் மற்றும் ORVM கன்ட்ரோல்கள், ஒரே இடத்தில் உள்ளன. கூடுதலாக உங்களிடம் ஆட்டோமெட்டிக் ஹெட்லேம்ப்கள், ஆட்டோமெட்டிக் வைப்பர்கள், அதிக ஸ்டீயரிங் கன்ட்ரோல், ஆட்டோ டே/நைட் IRVM, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் சீட்கள், பவர்டு டிரைவர் சீட் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட் ஸ்டாப் ஆகியவை உள்ளன. வசதிகளைப் பொறுத்தவரை மஹிந்திரா எந்த குறையும் வைக்கவில்லை
10.25 இன்ச் டச் ஸ்கிரீன் அவற்றின் அட்ரினாக்ஸ் மென்பொருளை கொண்டுள்ளது மற்றும் சில கஸ்டமைஸ்டு ஆப் -களுடன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோவை பெறுகிறது. இது பயன்படுத்த மென்மையானது ஆனால் இந்த இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பில் இன்னும் சில சிக்கல்கள் உள்ளன. ஆப்பிள் கார்பிளே சரியாக வேலை செய்யவில்லை மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு பிரேக் ஆகிக் கொண்டே இருக்கிறது. இந்த விஷயங்கள் அப்டேட் மூலமாக சரி செய்யப்பட வேண்டும். ஆனால் இந்த அப்டேட்கள் தொடர்பான மஹிந்திராவின் வரலாறு அவ்வளவு சிறப்பாக இல்லை. 9-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் நிறைய கஸ்டமைசேஷன் ஆப்ஷன்களை கொண்டுள்ளது மற்றும் சிறப்பாக இருக்கிறது.
ஸ்கார்பியோ N போன்ற டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் கிடைக்கும். 10.25-இன்ச் திரையில் வெவ்வேறு அமைப்புகள், நல்ல கிராபிக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை பயன்படுத்தும் போது கூகுள் மேப்ஸை காட்ட முடியும். மேலும் இடது மற்றும் வலது கேமரா இங்கே பிளைண்ட் ஸ்பாட் காட்சியைக் காட்டுகிறது. ஆனால் கேமராவின் தரம் மென்மையாகவும் சிறப்பாகவும் இருந்திருக்கலாம். நாம் அனைவரும் மிகவும் விரும்பும் கடைசி வசதி ஒன்று உள்ளது. அது பனோரமிக் சன்ரூஃப் ஆகும்.
பாதுகாப்பு
தார் ரோக்ஸ் காரில் நீங்கள் கூடுதலான வசதிகளை மட்டும் பெறவில்லை அப்படியே சிறந்த பாதுகாப்பு வசதிகளும் கிடைக்கும். அடிப்படை வேரியன்ட் -ல் நீங்கள் 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், அனைத்து பயணிகளுக்கும் 3 பாயின்ட் சீட் பெல்ட் மற்றும் பிரேக்-லாக்கிங் டிஃபெரன்ஷியல் ஆகியவற்றைப் பெறுவீர்கள். ஹையர் வேரியன்ட் முன் பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை இப்போது கொடுக்கப்பட்டுள்ளன..
கேபின் நடைமுறை
சிறிய பாட்டில், பெரிய வயர்லெஸ் சார்ஜர் ட்ரே, கப்ஹோல்டர்கள், ஆர்ம்ரெஸ்ட் ஸ்டோரேஜ் மற்றும் கூல்டு ஃபங்ஷன் உடன் கூடிய சிறந்த க்ளோவ் பாக்ஸ் ஆகியவற்றைக் கொண்டு சிறந்த டோர் பாக்கெட்டுகளுடன் கேபின் நடைமுறையும் ரோக்ஸ் காரில் சிறப்பாக உள்ளது. மேலும் RWD -ல் 4x4 ஷிஃப்டர் ஒரு பெரிய ஸ்டோரேஜ் பாக்கெட்டுக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் நடைமுறைக்குரியது. சார்ஜிங் ஆப்ஷன்களில் 65W வேரியன்ட் C சார்ஜர், USB சார்ஜர் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில் 12V சாக்கெட் கொடுக்கப்படவில்லை.
பின் இருக்கை அனுபவம்
உங்களைக் கவர வேண்டுமானால், இந்த தார் ரோக்ஸ் இங்கே சிறந்து விளங்க வேண்டும். உள்ளே செல்ல, நீங்கள் பக்கவாட்டு படியைப் பயன்படுத்த வேண்டும். நல்ல விஷயம் என்னவென்றால், மிகவும் வசதியாக கிராப் ஹேண்டில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் டோர்கள் 90 டிகிரியில் திறக்கப்படுகின்றன. குடும்பத்தின் இளைய உறுப்பினர்கள் எந்த பிரச்சனையையும் சந்திக்க மாட்டார்கள் -- ஆனால் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் இதை அதிகம் விரும்ப மாட்டார்கள்.
உள்ளே நுழைந்ததும் ஆச்சரியமான வகையில் இடம் கிடைக்கும். 6 அடி உயரமுள்ள நபருக்கு கூட கால், முழங்கால் மற்றும் ஹெட் ரூமில் எந்த பிரச்சனையும் இருக்காது. பனோரமிக் சன்ரூஃப் இருந்தபோதிலும் இட வசதி நன்றாகவே உள்ளது. மேலும் தொடையின் கீழ் கிடைக்கும் ஆதரவு நன்றாக உள்ளது மற்றும் குஷனிங் உறுதியாகவும் ஆதரவாகவும் உணர்கிறது. வசதியைச் சேர்க்க. உங்கள் தேவைக்கேற்ப பின்புற இருக்கைகளை சாய்த்துக் கொள்ளலாம்.
இடம் மட்டுமல்ல வசதிகளும் நன்றாக உள்ளன. 2 கப் ஹோல்டர்களுடன் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் கிடைக்கும், சீட் பேக் பாக்கெட்டில் பிரத்யேக வாலட் மற்றும் ஃபோன் ஸ்டோரேஜ், பின்புற ஏசி வென்ட்கள், பின்புற ஃபோன் சார்ஜர் சாக்கெட்டுகள் மற்றும் சிறிய டோர் பாக்கெட்டுகள் உள்ளன.
இன்ஜின் மற்றும் செயல்திறன்
5D தார் மற்றும் 3D தார் இடையே பொதுவான ஒன்று உள்ளது. இன்ஜின் ஆப்ஷன்கள் பொதுவானவை என்றாலும் - 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் ஆப்ஷன் இன்னும் கிடைக்கும். அசாதாரணமான விஷயம் என்னவென்றால் இரண்டு இன்ஜின்களும் அதிக டியூனில் வேலை செய்கின்றன. அதாவது இந்த எஸ்யூவி -யில் அதிக பவர் மற்றும் டார்க் கிடைக்கும்.
பெட்ரோல் |
மஹிந்திரா தார் ரோக்ஸ் |
இன்ஜின் |
2-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
பவர் |
177 PS வரை |
டார்க் |
380 Nm வரை |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT/ 6-ஸ்பீடு AT^ |
டிரைவ்டிரெய்ன் |
RWD |
கூடுதல் பவர் மற்றும் டார்க் ஆகியவை கூடுதல் எடையை ஈடுசெய்ய இங்கே கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. நகரத்தில் அதிகம் காரை ஓட்டுபவர்களுக்காக தேர்வு டர்போ-பெட்ரோல் ஆகும். ஓட்டுவது சிரமமற்றது மற்றும் முந்துவது எளிதானது. முழுமையான ஆக்ஸிலரேஷன் ஈர்க்கக்கூடியது மற்றும் தார் வேகமாக வேகத்தை கொடுக்கக்கூடியது. ரீஃபைன்மென்ட் சிறப்பாக உள்ளது மற்றும் கேபின் சத்தமும் கட்டுப்பாட்டில் உள்ளது.
டீசல் |
மஹிந்திரா தார் ரோக்ஸ் |
இன்ஜின் |
2.2 லிட்டர் டீசல் |
பவர் |
175 PS வரை |
டார்க் |
370 Nm வரை |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT/ 6-ஸ்பீடு AT |
டிரைவ்டிரெய்ன் |
RWD/4WD |
டீசல் இன்ஜினிலும் பவர் டெலிவரியில் குறைவு இல்லை. முந்திச் செல்வது நகரத்தில் எளிதானது மற்றும் நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் முந்திச் செல்வது கூட எளிதாகச் இருக்கிறது - முழு சுமையுடன் இருந்தாலும் கூட. ஆனால் பெட்ரோலைப் போல பவர் உடனடியாக வேகமெடுப்பதில்லை. இருப்பினும் நீங்கள் 4x4 ஆப்ஷனை விரும்பினால் உங்களுக்கு டீசல் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கும். நல்ல விஷயம் என்னவென்றால் நீங்கள் டீசல் இன்ஜின் ஆப்ஷனை எடுத்துக் கொண்டால் - நீங்கள் டிரைவிங் செலவில் சிறிது பணத்தை மிச்சப்படுத்துவீர்கள். டீசலுக்கு 10-12 கி.மீ மைலேஜையும், பெட்ரோலுக்கு 8-10 கி.மீ மைலேஜையும் ரோக்ஸில் எதிர்பார்க்கலாம்.
வசதி, கம்ஃபோர்ட்
மோசமான சாலைகளில் சவாரி செய்வதே தாரின் மிகப்பெரிய சவால். அதிர்வெண்ணை குறைக்கும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட டம்ப்பர்கள் மற்றும் புதிய இணைப்புகளுடன் சஸ்பென்ஷன் அமைப்பை முழுமையாகத் திருத்திய மஹிந்திராவுக்கு ஒரு நன்றி. ஆனால் அது இருந்தபோதிலும் தார் 3 டோர் கார் உடன் ஒப்பிடும் போது வித்தியாசம் குறிப்பிடத்தக்கதாக இல்லை. மென்மையான சாலைகளில் ரோக்ஸ் சிறப்பாக செயல்படுகிறது. இது நல்ல தார் நெடுஞ்சாலைகளில் சிறப்பாக இருக்கும். இருப்பினும் அது ஒரு சாலையில் உள்ள இணைப்பு அல்லது உயரம் மாறும் போது பயணிகள் அதை உணர்வார்கள். நகரத்தில் கூட ஒரு சிறிய குழியில் கூட கார் ஆங்காங்கே நகரத் தொடங்குகிறது. ஆகவே காரில் உள்ளவர்கள் அசைவதை உணர்வார்கள்.
இந்த ஒரு சிக்கலை மஹிந்திராவால் தீர்த்திருந்தால் இந்த எஸ்யூவியை விமர்சிப்பது மிகவும் கடினமாக இருந்திருக்கும். ஆனால் இது ஒரு பெரிய பிரச்சனையாகும் உங்கள் வீட்டைச் சுற்றியுள்ள சாலைகள் மோசமாக இருந்தால் தார் ரோக்ஸில் பயணிப்பது மிகவும் சங்கடமாக உணர வைக்கலாம், குறிப்பாக பின் இருக்கை பயணிகளுக்கு. ஆனால் நீங்கள் ஆஃப்ரோடர் அல்லது தார் 3 டோர் காரின் சவாரி தரத்திற்குப் பழகியிருந்தால் இது நிச்சயமாக மேம்படுத்தப்பட்டதாக தோன்றலாம்.
ஆஃப்-ரோடு
தாரின் ஆஃப்-ரோடு சான்றுகள் எப்போதும் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டவையாகும். ரோக்ஸ் காரில் இப்போது மஹிந்திரா எலக்ட்ரானிக் லாக்கிங் ரியர் டிஃபெரென்ஷியலை மேலும் சேர்த்துள்ளது. அதே சமயம் பிரேக் லாக்கிங் ரியர் டிஃபெரென்ஷியல் பேஸ் வேரியன்ட்டில் இருந்து ஸ்டாண்டர்டாக கிடைக்கிறது. மற்றொரு புதிய டிரிக் உள்ளது. நீங்கள் 4-லோ நிலையில் இருக்கும்போது, காரைக் கூர்மையாகத் திருப்ப முயற்சிக்கும்போது பின்புற உள் சக்கரம் உங்களுக்கு இறுக்கமான டர்னிங் ரேடியஸை கொடுக்கும். அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், நல்ல அணுகுமுறை மற்றும் புறப்படும் கோணங்களுடன் இந்த எஸ்யூவியை ஆஃப் ரோடுக்கு கொண்டு செல்வது சவாலாக இருக்காது.
தீர்ப்பு
தார் ராக்ஸ் டோர் தாரை விட சிறப்பாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். இருப்பினும் வித்தியாசத்தின் அளவு எங்களை ஆச்சரியப்படுத்தியது. சாலையில் தோற்றம் நன்றாக மேம்பட்டுள்ளது, கேபின் தரம் சுவாரஸ்யமாக உள்ளன, வசதிகளின் பட்டியல் சிறப்பாக உள்ளது, கேபின் நடைமுறை மேம்படுத்தப்பட்டுள்ளது மற்றும் 6 அடி வரை உள்ளவர்களுக்கும் கூட இட வசதி நன்றாக உள்ளது. கிரெட்டா மற்றும் செல்டோஸை விட பூட் ஸ்பேஸ் சிறப்பாக உள்ளது. ஒட்டுமொத்தமாக நீங்கள் ஒரு குடும்ப எஸ்யூவி கண்ணோட்டத்தில் இதை பார்த்தால் ரோக்ஸ் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்கிறது. ஒரேஎ ஒரு விஷயத்தை தவிர.
அது சவாரி தரம். நீங்கள் செல்டோஸ் மற்றும் கிரெட்டாவை ஓட்டியிருந்தால், தார் ரோக்ஸில் பயணிப்பது உங்களுக்கு வசதியாக இருக்காது. பின்பக்க பயணிகள் அதை இன்னும் அதிகமாக உணருவார்கள். ஒரு எஸ்யூவி மிகவும் நல்லதுதான் என்றாலும் கூட இந்த ஒரு குறை நியாயமற்றதாக உள்ளது இது பலரது வாங்கும் முடிவை எடுப்பதை பற்றி யோசிக்க வைக்கலாம்.