Mahindra XUV700 விமர்சனம்: ஒரு குடும்பத்துக்கு ஏற்ற எஸ்யூவி
Published On மே 30, 2024 By ujjawall for மஹிந்திரா எக்ஸ்யூவி700
- 1 View
- Write a comment
2024 அப்டேட்கள் புதிய வசதிகள் வண்ணங்கள் மற்றும் புதிய சீட் லேஅவுட் ஆகியவற்றுடன் வருகிறது. ஆகவே XUV700 முன்பை விட முழுமையாக ஒரு குடும்பத்துக்கான எஸ்யூவி -யாக மாறியுள்ளது.
மஹிந்திரா XUV700 எப்போதும் அதன் பிரீமியம் தோற்றம், கேபின் அனுபவம், நிறைய வசதிகள் மற்றும் ஏராளமான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் ஆகியவற்றுடன் ஒரு சிறந்த ஃபேமிலி எஸ்யூவி -யாக இருந்து வருகிறது. ரூ. 13.99 லட்சம் முதல் ரூ. 26.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரையிலான விலையில் இது. ஃபேஸ்லிஃப்ட் டாடா சஃபாரி, ஹாரியர் மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஆகியவற்றுடன் போட்டியிடுகின்றது.
டாடா போட்டியாளர்களான சஃபாரி மற்றும் ஹாரியர் ஆகிய இரண்டுக்கும் சமீபத்தில் முழுமையான ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் கொடுக்கப்பட்டிருந்தது. XUV700 ஆனது ஏறக்குறைய 2.5 ஆண்டுகளாக எந்தப் அப்டேட்டையும் பெறவில்லை. இப்போது புதிய வசதிகள், புதிய சீட் லேஅவுட் மற்றும் புதிய தீம் ஆகியவை XUV700 -யில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் உங்கள் குடும்பத்துக்கான அடுத்த எஸ்யூவி என்று நீங்கள் கருதும் அளவுக்கு இந்த மாற்றங்கள் போதுமானதாக உள்ளதா? அதை இந்த ரோடு டெஸ்ட் ரிவ்யூவில் பார்க்கலாம்.
சாவி
XUV700 முன்பு இருந்த அதே செவ்வக வடிவ சாவி சில்வர் இன்செர்ட் -களுடன் உள்ளது. இதன் எடை ஒரு நல்ல விதத்தில் உள்ளது. காரை திறக்கும்போது ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் தானாகவே வெளியே வரும் இது ஒரு நல்ல டச். உங்கள் பாக்கெட்டில் இருந்து சாவியை கையில் எடுக்க உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் கதவை திறக்க டிரைவர் பக்க ஃப்ளஷ் கதவு கைப்பிடியின் சென்சார் மீது தட்டவும். இருப்பினும் இந்த வசதி பயணிகள் பக்கம் இருக்கும் கதவில் இல்லை.
இந்த மோட்டார் ஃபிட்டட் கதவு ஹேண்டில் இல்லாத வேரியன்ட்களில் அவற்றைப் புரட்டுவதற்கு நீங்கள் அவற்றைத் தள்ள வேண்டும். உண்மையில் சொல்லப்போனால் இது சிறப்பானதாகவும் பயன்படுத்த எளிமையாகவும் இருக்கின்றது. கனெக்டட் கார் டெக்னாலஜி வசதிகள் மூலம் காரை தொலைவிலிருந்து பூட்டலாம்/திறக்கலாம்.
வடிவமைப்பு
மஹிந்திரா XUV700 -யின் வடிவமைப்பு இன்னும் அப்படியே உள்ளது. நீங்கள் படங்களில் பார்க்கும் புதிய பிளாக் கலர் தீம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நபோலி பிளாக் எக்ஸ்ட்டீரியர் நிறம் முன்பு கிடைத்தது. ஆனால் இப்போது இது அனைத்து வேரியன்ட்களிலும் வழங்கப்படுகிறது. இந்த ஷேடு அதன் கிரில் மற்றும் அலாய் வீல்களில் உள்ள பிளாக் எலமென்ட்களாக் ஃபில் செய்யப்பட்டுள்ளது. இது காருக்கு ஓரளவு சராசரி தோற்றத்தை அளிக்கிறது.
பக்கவாட்டு வடிவமைப்பு தெளிவாக உள்ளது. மற்றும் இது 18-இன்ச் அலாய் வீல்கள் இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த காருக்கு இவை பொருத்தமானதாகத் தோன்றினாலும் போட்டியாளர்களில் பெரிய 19-இன்ச் அலாய்கள் கிடைக்கின்றன.
பின்புற வடிவமைப்பு மாறாவில்லை. ஆனால் மஹிந்திரா அதன் கீழ் பம்பரில் கிரேயிஷ்-சில்வர் இன்செர்ட்டை மாற்றவில்லை. அதன் ஒட்டுமொத்த பிளாக் தோற்றத்திற்கு நல்ல கான்ட்ராஸ்ட்டை வழங்குகிறது. இதன் LED DRL செட்டப் டைனமிக் டர்ன் இண்டிகேட்டர்கள் மற்றும் அம்பு வடிவ LED டெயில்லைட்கள் அனைத்தும் பிளாக் நிற காம்போவுடன் குறிப்பாக இரவில் பிரீமியமாக தெரிகின்றன. ஆல் பிளாக் தீம் உங்களுக்குப் பொருந்தவில்லை என்றால் இப்போது மிட்நைட் பிளாக், எவரெஸ்ட் ஒயிட், டேஸ்லிங் சில்வர், எலக்ட்ரிக் ப்ளூ மற்றும் ரெட் ரேஜ் டூயல்-டோன் ஷேட்கள் மற்றும் நாபோலி பிளாக் ரூஃப் ஆகியவற்றுக்கான ஆப்ஷன் உள்ளது.
பூட் ஸ்பேஸ்
XUV700 -ன் பூட்டை திறப்பது மிகவும் எளிதானது. ஏனெனில் அதன் டெயில்கேட் மிகவும் கனமாக இல்லை. இருப்பினும் இங்கே பவர்டு ஆப்ஷன் இல்லை. 6 - மற்றும் 7-சீட்டர் வேரியன்ட்களில் மூன்றாவது வரிசை மேலே இருக்கும் போது இடம் சிறிது குறைவாக இருக்கும். மற்றும் டஃபிள் அல்லது ஆபீஸ் பேக்குகளுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.
நல்ல செய்தி என்னவென்றால் நீங்கள் மூன்றாவது வரிசையை மடிக்கலாம். இது 50-50 ஸ்பிளிட் வசதியை கொண்டுள்ளது. மேலும் சீட்டை தட்டையாக மடிக்கலாம். உங்கள் குடும்பத்திற்கு வார இறுதிக்கான சாமான்கள் மற்றும் பலவற்றை இங்கே எடுத்துச் செல்லலாம்.
உட்புறம்
XUV700 -ன் கேபின் அனுபவம் எப்பொழுதும் பிரீமியமாகவே இருந்து வருகிறது. நீங்கள் கேபினுக்குள் உள்ளே நுழையும் முன்பே இது தெரிய வருகிறது. ஏனெனில் நீங்கள் கதவைத் திறந்தவுடன் எளிதாக நுழைவதற்கு ஓட்டுநரின் இருக்கை பின்னால் நகர்கிறது.
2024 XUV700 -ன் கேபினில் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. ஒட்டுமொத்த வடிவமைப்பு ஒரே மாதிரியாகவும் தெளிவாகவும், மென்மையாகவும் இருக்கும். இங்கே ஆல் பிளாக் தீம் இல்லை. அது இன்னும் அதே மல்டி கலர் தீம் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.
சாஃப்ட்-டச் லெதரெட் மெட்டீரியல் சென்ட்ரல் பேனலில் இருப்பதால் மெட்டீரியல்களின் தரம் நன்றாக உள்ளது. இதை நீங்கள் டோர் பேட்கள் மற்றும் சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்டிலும் பார்க்கலாம். ஸ்டீயரிங் லெதரெட்டில் மூடப்பட்டிருக்கும். பட்டன்களின் தரம் சற்று சிறப்பாக இருந்திருக்கலாம்.
டாஷ்போர்டின் மேல் பேனல் கடினமான பிளாஸ்டிக் கொடுக்கப்பட்டிருந்தாலும் இதன் மேல் ஒரு சாஃப்ட் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இது மலிவான உணர்வை தரவில்லை. நீங்கள் இன்னும் டோர் பேனல்களில் உங்கள் எலக்ட்ரிக் சீட் அட்ஜஸ்ட்மென்ட் கன்ட்ரோல் கிடைக்கும். அவை இருக்கைகளின் பக்கவாட்டில் கீழே வைக்கப்படுவதைக் காட்டிலும் கண்டுபிடிக்கவும் செயல்படவும் மிகவும் எளிதாக இருக்கும்.
பியானோ பிளாக் எலமென்ட்கள் சென்ட்ரல் கன்சோலில் பயன்படுத்தப்பட்டுள்ளன மேலும் ஏசி கன்ட்ரோல்களின் அமைப்பு தெளிவாக இருந்தாலும் கூட அவற்றின் ஃபீல் மற்றும் ஃபினிஷ் சிறப்பாக இருந்திருக்கலாம். கியர் லீவரை சுற்றியுள்ள டயல்கள் மற்றும் பட்டன்கள் சற்று அடிப்படைத் தோற்றத்தில் உள்ளன. மேலும் பியானோ பிளாக் பேனல் காரணமாக கீறல் இல்லாமல் வைத்திருப்பது கடினமாக இருக்கலாம்.
சீட் அப்ஹோல்ஸ்டரி -க்கு லைட் கலர் கொடுக்கப்பட்டுள்ளதால் அது பராமரிக்க கடினமான இருக்கலாம். ஆனால் இந்த லைட் கலர் கேபினுக்கு வென்டிலேட்டட் உணர்வைத் தருகிறது. மேலும் சன்ரூஃப் திறந்திருக்கும் போது அந்த உணர்வு மேலும் அதிகரிக்கிறது.
ஆனால் பராமரிப்பு தவிர இது மிகவும் வசதியானதாக இருக்கும். சப்போர்ட் நன்றாக உள்ளது மற்றும் குஷனிங் வசதியாக உள்ளது. எலக்ட்ரிக்கலி அட்ஜஸ்ட்டபிள் இருக்கைகள் மற்றும் சாய்வு மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் காரணமாக சரியான ஓட்டுநர் நிலையைக் கண்டறிவது எளிதானது. ஆனால் விதமாக டெலஸ்கோபிக் அட்ஜஸ்ட்மென்ட் அதன் டாப்-ஸ்பெக் AX7L டிரிமில் மட்டுமே வழங்கப்படுகிறது.
இரண்டாவது வரிசை
XUV700 -ன் இரண்டாவது வரிசையில் மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது. அங்கு உங்களுக்கு இப்போது கேப்டன் இருக்கைகளுக்கான ஆப்ஷன் உள்ளது. கார் சற்று உயரமாக இருப்பதால் இங்கு செல்வதற்கு சிறிது முயற்சி தேவைப்படும். ஆனால் நீங்கள் அமர்ந்தவுடன் இந்த இருக்கைகள் முன் இருக்கைகளை விட அதிக வசதியையும் ஆதரவையும் தருகின்றன.
அடித்தளம் அகலமானது மற்றும் பெரிய உடலமைப்பு உள்ளவர்களுக்கு கூட நல்ல ஆதரவை வழங்குகிறது. ஏராளமான ஹெட்ரூம், முழங்கால் அறை மற்றும் ஃபுட்ரூம் போன்றவையும் நன்றாக உள்ளன. அனைத்து கேப்டன் சீட்களை போலவே தனிப்பட்ட ஆர்ம்ரெஸ்ட்களை பெறுவீர்கள். ஆனால் இன்னோவா கிரிஸ்ட்டாவை போல இல்லாமல் நீங்கள் விரும்பிய உயரத்தில் அமர்வதற்காக அட்ஜஸ்ட் செய்ய முடியாது.
பாஸ் மோடு ஆப்ஷன் மேனுவலாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் இருக்கைகளை நகர்த்த முயற்சி செய்ய வேண்டும். பயணிகளை குளிர்ச்சியாக வைத்திருக்க நீங்கள் ஏசி வென்ட்களை பெறுவீர்கள். ஆனால் அதற்கு ஃபுளோவர் கன்ட்ரோல் இல்லை.
மூன்றாவது வரிசை
மூன்றாவது வரிசைக்கு செல்வதற்கு ஒரே ஒரு ஆப்ஷன் மட்டுமே உள்ளது.ஏனெனில் கேப்டன் இருக்கைகள் வழக்கத்தை விட அகலமாக உள்ளன. இதன் விளைவாக நேரடியாக மூன்றாவது வரிசைக்குச் செல்ல இடமில்லை. நீங்கள் கீழே இறங்கி இடது பக்க இருக்கைகளை மடித்து டம்பிள் செய்ய வேண்டும். இது எளிதானது பின்னர் கடைசி வரிசைக்கு செல்ல வேண்டும். ஆனால் நீங்கள் அங்கு சென்றதும் அந்த இடம் சிறு குழந்தைகளுக்கு மட்டுமே நல்லது என்பது தெளிவாகத் தெரியும்.
முதலாவதாக நீங்கள் இரண்டாவது வரிசை இருக்கைகளை நகர்த்த முடியாது. மற்றும் சாய்வு கோணங்களை மட்டுமே சரி செய்ய முடியும். பெரியவர்கள் இங்கு அமரலாம் ஆனால் முழங்கால் மற்றும் லெக் ரூம் இல்லாததால் அவ்வளவு வசதியாக இருக்க முடியாது. உயரமான பயணிகளுக்கு ஹெட்ரூம் கூட குறைவாக இருக்கும். எனவே நீண்ட தூர பயணங்களுக்கு இது சிறந்த இடம் அல்ல.
வசதிக்காக இங்கு கன்ட்ரோல் நாப் உட்ன பிரத்யேக ஏசி வென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே மூன்றாம் வரிசை பயணிகளுக்கு வெப்பநிலை கன்ட்ரோல் குறித்து எந்த புகாரும் இருக்காது. ஆனால் பயன்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டிக் பற்றி புகார் செய்யலாம். இது கடினமாகவும் கீறல் விழக்கூடிய ஒன்றாகவும் உள்ளது. இங்கு சாஃப்ட் டச் பொருள் எதுவும் இல்லை. எனவே அனுபவம் சற்று மலிவான உணர்வை தருகிறது.
நடைமுறை
XUV700 மிகவும் நடைமுறை எஸ்யூவியாக இன்னும் தொடர்கிறது. முன் வரிசையில் டோர் பாக்கெட்டுகளில் 1 லிட்டர் பாட்டிலுக்கான இடம் உள்ளது. அதன் பின்னால் சிறிய பொருட்களை வைப்பதற்காக இடம் உள்ளது. இரண்டு கப் ஹோல்டர்கள் நடுவில் வழங்கப்பட்டுள்ளன. மேலும் சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்டின் கீழ் கூல்டு ஸ்டோரேஜ் பாக்ஸ் உள்ளது. அங்கு நீங்கள் உங்கள் குளிர்பானங்களை குளிர்ச்சியாக வைத்திருக்கலாம். இரண்டு USB சார்ஜிங் போர்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன மேலும் வயர்லெஸ் சார்ஜிங் பேட் உடன் உங்கள் மொபைலுக்கான பிரத்யேக ஸ்லாட்டும் உள்ளது.
க்ளோவ் பாக்ஸின் அளவு ஓரளவுக்கு போதுமானதாக உள்ளது. மேலும் கார் ஆவணங்களை ஸ்டோர் செய்வதற்கான ஒரு பிரத்யேக ஸ்லாட் உள்ளது. இது க்ளோவ் பெட்டியிலேயே இடத்தை கொடுக்கிறது.
இரண்டாவது வரிசையில் உங்கள் மொபைலை வைப்பதற்கான டோர் ஹேண்டில்கள் மற்றும் ஏசி வென்ட்களுக்குக் கீழே ஒரு பகுதியும் உள்ளது. சீட் பாக்கெட்டுகள் பத்திரிகைகள் அல்லது ஆவணங்களுக்கு போதுமானதாக இருக்கும். மேலும் 5- மற்றும் 7-சீட்டர் வேரியன்ட்களில் மத்திய ஆர்ம்ரெஸ்டில் இரண்டு கப் ஹோல்டர்கள் உள்ளன. சார்ஜ் செய்வதற்கு இங்கு டைப்-சி போர்ட் கிடைக்கும்.
மூன்றாவது வரிசையில் இரு பயணிகளும் பிரத்யேக கப் ஹோல்டர்கள் மற்றும் சார்ஜ் செய்வதற்கு 12 V சாக்கெட் உள்ளது. எனவே XUV700 மூன்று வரிசைகளுக்கும் நடைமுறைத் தன்மையைக் குறிப்பதை விட அதிகமாக கொடுக்கின்றன.
வசதிகள்
இந்த அப்டேட் மூலம் மஹிந்திரா XUV700 கார் மேலும் வசதி நிறைந்ததாக மாற்றியுள்ளது. இது முன்பு தவறவிட்ட சில வசதிகள் இருந்தன இப்போது அவற்றில் சில இங்கே சேர்க்கப்பட்டுள்ளன. முன்பக்க வென்டிலேஷன் சீட்கள் மற்றும் ORVMகளுக்கான செக்மென்ட்-ஃபர்ஸ்ட் மெமரி ஃபங்ஷன் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இருப்பினும் இவை இரண்டும் டாப்-ஸ்பெக் டிரிம்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
அதன் கனெக்டட் கார் டெக்னாலஜியுடன் கூடுதல் வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் வசதிகளின் முழு பட்டியல் இங்கே:
டாப்-ஸ்பெக் மஹிந்திரா XUV700 வசதிகள் பட்டியல் |
|
10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் |
டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே |
வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே |
மெமரி ஃபங்ஷன் கொண்ட 6-வே பவர்டு டிரைவர் சீட் |
ஆட்டோமெட்டிக் ஹெட்லேம்ப்கள் |
ரெயின் சென்ஸிங் வைப்பர்கள் |
டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் |
ஆல் LED ஹெட்லேம்ப்கள் மற்றும் LED DRL -கள் சீக்வென்ஷியல் டர்ன் இண்டிகேட்டர்கள் |
கார்னர் லைட் |
ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) |
18 இன்ச் டைமண்ட் கட் அலாய்ஸ் |
புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டார்ட் |
பனோரமிக் சன்ரூஃப் |
கனெக்டட் கார் டெக்னாலஜி (AdrenoX) |
12-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் (AX7 L மட்டும்) |
360 டிகிரி கேமரா (AX7 L -க்கு மட்டும்) |
அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் (AX7 L மட்டும்) |
டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் வீல் (AX7 L மட்டும்) |
எலக்ட்ரிக் பாப் அவுட் டோர் ஹேண்டில்கள் (AX7 L மட்டும்) |
வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் (AX7 L மட்டும்) |
எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் (AX7 L மட்டும்) |
கீலெஸ் என்ட்ரி (AX7 L மட்டும்) |
பின்புற LED சீக்வென்ஷியல் டேர்ன் இண்டிகேட்டர்கள் (AX7 L மட்டும்) |
வென்டிலேட்டட் இருக்கைகள் (AX7 L மட்டும்) |
ORVM -க்கான மெமரி ஃபங்ஷன் (AX7 L மட்டும்) |
பிலைண்ட் ஸ்பாட் மானிட்டர் (AX7 L மட்டும்) |
நீங்கள் கதவைத் திறக்கும் போது இருக்கை இயக்கம் ORVM -களுக்கான மெமரி ஃபங்ஷன் மற்றும் எலக்ட்ரிக் ஃப்ளஷ் டோர் ஹேண்டில்கள் போன்ற வசதிகள் நீங்கள் பிரீமியம் சொகுசு கார்களில் பார்க்கும் வசதிகளாகும். இந்த வசதிகளின் செயலாக்கம் சில இடங்களில் சிறப்பாக உள்ளது மற்றவற்றில் அவ்வளவு சிறப்பாக இல்லை. வசதிகளுக்கான சில நேர்மறை விஷயங்கள் இங்கே:
டூயல் 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள்: இரண்டு திரைகளும் ஒரே பெஸல் அழகாக இருப்பது மட்டுமல்லாமல் அவற்றை இயக்கும் அனுபவமும் நன்றாக இருக்கிறது. கிராபிக்ஸ் சாஃப்ட் ஆனது ரெஸ்பான்ஸ் நன்றாக உள்ளது. மற்றும் நீங்கள் டிரைவர் டிஸ்பிளேவில் மோட்களை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். எனவே நீங்கள் அதை மிகச்சிறியதாக மாற்றியமைக்கலாம் அல்லது அனைத்து வகையான தகவல்களையும் உங்களுக்கு வழங்கும். ஆம் இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றைப் பெறுகிறது.
பில்டு இன் நேவிகேஷன் -க்கான பிளஸ் பாயிண்ட் என்னவென்றால் இது டிரைவரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் காட்டப்படும். பகுதித் ஸ்கிரீன் அல்லது முழு ஸ்கிரீன் உடன் இங்கேயும் உங்களுக்கு ஆப்ஷன்கள் உள்ளன. கூகுள் மேப்ஸ் இண்டெகிரேஷன் இருந்திருந்தால் இந்த வசதி இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கும்.
12-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம்: அதிக சவுண்ட் லெவல்களில் கூட மிருதுவான மற்றும் தெளிவான ஒலியை தருகிறது. உண்மையில் இது 3D இம்மெர்ஸிவ் மோடை பெறுகிறது இது உங்களுக்கு சரியான கச்சேரி போன்ற உணர்வைத் தருகிறது. இது உங்கள் விஷயம் இல்லை என்றால் நீங்கள் விரும்பினால் நீங்கள் ஆஃப் செய்து வேறு சில செட்டப்பை பயன்படுத்தலாம்.
டிரைவருக்கான இருக்கைகள் மற்றும் OVRM -களுக்கான 3 மெமரி செட்டப் ஆகும்: மிகவும் எளிமையான அம்சம் குறிப்பாக குடும்பத்தில் பல பயனர்கள் இருந்தால் இது உதவும். ORVM க்கான மெமரி அமைப்பு அதை மேலும் சிறப்பாக்குகிறது.
பெரும்பாலான வசதிகள் நோக்கம் கொண்டதாக செயல்பட்டாலும் XUV700 சிறப்பாகச் செய்திருக்கக்கூடிய சில விஷயங்கள் இங்கே உள்ளன:
வென்டிலேட்டட் இருக்கைகள் இண்டெகிரேஷன்: சீட் வென்டிலேஷனைசெயல்படுத்த பிரத்யேக பட்டன் எதுவும் இல்லை. அதற்கு பதிலாக நீங்கள் திரையில் உள்ள சிறிய ஐகானை தட்ட வேண்டும் இது ஆண்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார்பிளே -வை பயன்படுத்தும் போது இரண்டு கிளிக்குகளில் செல்ல வேண்டும். இது பயன்படுத்த எளிமையானது அல்ல, குறிப்பாக வாகனம் ஓட்டும்போது.
360-டிகிரி கேமரா மற்றும் பிளைண்ட் வியூ மானிட்டர்: அவற்றின் ஃபீட் பிரேம் விகிதங்கள் இரண்டும் மெதுவாகவே இருக்கின்றன. மேலும் பிளைண்ட் வியூ மானிட்டர் ஒரு தாமதத்தை கொண்டுள்ளது. ஆகவே இது இரவில் பயனுள்ளதாக இருக்காது.
இந்தப் அப்டேட் இருந்தபோதிலும் XUV700 ஆனது போட்டியுடன் ஒப்பிடும் போது பவர்டு பயணிகள் இருக்கை, வென்டிலேட்டட் கேப்டன் இருக்கைகள், பவர்டு டெயில்கேட், ஆம்பியன்ட் லைட்ஸ், ஆட்டோ டிம்மிங் IRVM மற்றும் அனைத்து பயணிகளுக்கான ஒரு-டச் பவர் ஜன்னல்கள் போன்ற சில வசதிகளை இன்னும் கொடுக்கப்படவில்லை.
பாதுகாப்பு
பாதுகாப்பு என்பது XUV700 -ன் வலுவான தொகுப்புகளில் ஒன்றாகும். குளோபல் NCAP இதற்கு முழு 5-நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியது. மற்றும் இதிலுள்ள கிட் கூட சில விரிவான இன்ஸ்ட்ரூமென்ட்களை கொண்டுள்ளது.
7 ஏர்பேக்ஸ் |
டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் |
எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் |
ISFIX ஆங்கரேஜ்கள் |
லெவல்- 2 ADAS |
பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் |
எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் |
ஹில் டிசென்ட் கன்ட்ரோல் |
360 டிகிரி கேமரா |
அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் |
வழக்கமான ஏர்பேக்குகள் மற்றும் எலக்ட்ரானிக் தவிர XUV700 ஆனது கேமரா மற்றும் ரேடார்-அடிப்படையிலான அமைப்பை உள்ளடக்கிய Level-2 ADAS அமைப்புகளைக் கொண்டுள்ளது. இவை இந்திய ஓட்டுநர் நிலைமைகளுக்கு மாற்றப்பட்டு நன்றாக வேலை செய்கின்றன. கூடுதலாக அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற வசதிகள் இதை இன்னும் சிறந்த ஹைவே க்ரூஸர் ஆக்குகின்றன.
தவிர இந்த வசதிகள் நன்றாக இல்லை என்றாலும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளேவில் தட்டினால் நீங்கள் அவற்றை ஆஃப் செய்து கொள்ளலாம். ஆனால் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் வசதி இதில் இல்லை. குறிப்பாக இந்த அளவிலான காருக்கு இது ஒரு பயனுள்ள அம்சமாக இருந்திருக்கும்.
டிரைவிங் இம்ப்ரெஸன்
|
2-லிட்டர் டர்போ-பெட்ரோல் |
2.2 லிட்டர் டீசல் |
|
பவர் |
200PS |
156 PS |
185PS |
டார்க் |
380Nm |
360Nm |
450Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT/AT |
6-ஸ்பீடு MT |
6-ஸ்பீடு MT/AT |
டிரைவ்டிரெய்ன் |
ஃபிரன்ட் வீல் |
ஃபிரன்ட் வீல் |
முன் அல்லது ஆல் வீல் (AT மட்டும்) |
பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் இரண்டும் வழங்கப்படுவதால் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்களுடன் கிடைக்கிறது. XUV700 உடன் கிடைக்கும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களின் அடிப்படையில் எந்தப் பற்றாக்குறையும் இல்லை. எங்களுடன் சோதனையில் 185PS 2.2-லிட்டர் டீசல் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் கனெக்ட் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் செயல்திறனின் அடிப்படையில் உங்களைத் பின்தங்க விடாது.
சத்தம் மற்றும் அதிர்வுகள் டீசல் இன்ஜினுக்கு பழக்கமான ஒன்று. ஆரம்பத்தில் இன்ஜினை ஸ்டார்ட் செய்யும் போது கேபினுக்குள் சில அதிர்வுகள் மற்றும் இன்ஜின் சத்தத்தை உணர முடியும். ஆனால் நீங்கள் மூவ் செய்தவுடன் அதிர்வுகள் குறைகின்றன. இருப்பினும் சில இடங்களில் இன்ஜின் சத்தம் உள்ளது குறிப்பாக நீங்கள் காரைத் புஷ் செய்யும் போது, ஆனால் அது ஏற்கத்தக்கதாக இருக்கும்.
செயல்திறனைப் பொறுத்தவரை இது கீழ் ரேஞ்சில் இருந்தே அதிக டார்க் கிடைக்கிறது. எனவே அது நகரத்தில் இருந்தாலும் சரி அல்லது நெடுஞ்சாலையில் இருந்தாலும் சரி - ஓவர்டேக்குகள் விரைவாக இருக்கும். அதன் டிரான்ஸ்மிஷனும் சீரானது மேலும் நீங்கள் முந்திச் செல்ல வேண்டியிருக்கும் போது எந்த ஒரு பெரிய தாமதமும் இன்றி அது குறைகிறது. கியர் லீவர் மூலம் நீங்கள் விரும்பினால் மேனுவலாக கியர்களை மாற்றும் ஆப்ஷனும் உள்ளது (பேடில் ஷிஃப்டர்கள் இல்லை).
இங்கே மூன்று டிரைவர் மோட்கள் உள்ளன - ZIP ZAP மற்றும் ZOOM இதில் ஸ்டீயரிங் எடை மற்றும் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் மாறும். ZOOM -இல் அதன் ஸ்போர்ட்டிஸ்ட் மோடில் கியர்பாக்ஸ் கியர்களை அதிக நேரம் வைத்திருக்கும் மற்றும் த்ரோட்டில் ரெஸ்பான்ஸ் ஷார்ப் ஆக உள்ளது. த்ரோட்டில் ஸ்டீயரிங் பிரேக்குகள் மற்றும் ஏசி அமைப்புகளை உங்கள் விருப்பப்படி சரிசெய்யக்கூடிய கஸ்டமைஸ் மோடும் உள்ளது.
எங்களின் கலவையான டிரைவிங் நிலைகளில் இது 10-12 கிமீ/லி மைலேஜை எங்களுக்கு கொடுத்தது. இது இந்த அளவுள்ள காருக்கு ஏற்கத்தக்கது. நெடுஞ்சாலையில் சிறந்த எரிபொருள் செயல்திறனை நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் பெட்ரோல் இன்ஜினில் ஒற்றை இலக்க மைலேஜை பெற்றால் அதற்காக ஆச்சரியப்பட வேண்டாம்.
சவாரி மற்றும் கையாளுதல்
XUV700 அதன் நிதானமான சவாரி மற்றும் கையாளும் பழக்கவழக்கங்களால் தொடர்ந்து ஈர்க்கிறது. முதலாவதாக அதன் ஸ்டீயரிங் வீல் இலகுவானது. எனவே அதை திருப்புவது எளிதானது மற்றும் நகரத்தில் U- திருப்பங்களைச் செய்வது எளிதாக உள்ளது. அதன் சவாரி தரம் அடுத்த நிலைக்கு சென்றுள்ளது. சிறிய அல்லது பெரிய பள்ளங்களாக இருந்தாலும் கரடுமுரடான சாலைகளாக இருந்தாலும் உங்களுக்கு எந்தப் புகாரும் இருக்காது. அதன் ஹை கிரவுண்ட் கிளியரன்ஸ் காரணமாக நம்பிக்கையை கொடுக்கின்றது.
நெடுஞ்சாலையில் சமநிலை மற்றும் ஸ்திரத்தன்மை பாராட்டத்தக்கதாகும். மேலும் இது உங்கள் குடும்பத்தினருக்கு புகார் செய்ய எந்த காரணத்தையும் கொடுக்காது. ஆனால் ஆம் இவ்வளவு பெரிய எஸ்யூவியாக இருப்பதால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் திருப்பங்களில் சற்று பாடி ரோல் உள்ளது. ஆனால் ஆம் ஸ்டீயரிங் அதிக எடையைக் கொண்டிருக்கவில்லை. எனவே திருப்பங்கள்/வளைவுகளில் உற்சாகம் கொடுக்கக்கூடியது என்று சொல்ல முடியாது. இருப்பினும் அது இன்னும் நிலையானதாக உள்ளது.
தீர்ப்பு
நியாயமாக XUV700 இந்த அப்டேட் உடன் பெரிதாக மாறவில்லை. முன்னர் விடுபட்ட சில வசதிகள் புதிய 6-சீட்டர் அமைப்பு மற்றும் புதிய ஆல் பிளாக் தீம் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் நீங்கள் இரண்டாவது வரிசையில் அதிக நேரம் செலவிட விரும்பினால் அல்லது உங்கள் பெற்றோருக்கு வசதியான இரண்டாவது வரிசையைத் தேடுகிறீர்களானால் அந்த புதிய 6 இருக்கை அமைப்பில் நீங்கள் தவறவிட மாட்டீர்கள். இது போதுமான இடத்தை கொடுக்கிறது மேலும் உங்களை வசதியாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருக்கும்.
ஆம் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் சில சிறிய வசதிகள் இன்னும் கிடைக்கவில்லை. அவற்றை வைத்திருப்பது கேபின் அனுபவத்தை மேலும் மேம்படுத்தியிருக்கும். ஆனாலும் நீங்கள் பெரிய சமரசம் செய்து கொள்வது போல் இல்லை. ஓட்டுநர் அனுபவமும் நன்றாக இருக்கிறது. ஆனால் டிரைவிங் ஆர்வலர்களுகள் விரும்பும் காரை விட அதிகமாக உள்ளது.
எனவே மஹிந்திரா XUV700 அதன் கம்பீரமான சாலை தோற்றம் மற்றும் ஸ்டைலான தோற்றத்துடன் இன்னும் வலுவாக உள்ளது; ஒரு விசாலமான மற்றும் வசதிகள் நிறைந்த கேபின், இப்போது இன்னும் பிரீமியமாக மாறியுள்ளது, மிகவும் வசதியான சவாரி தரம் மற்றும் அனைத்து டிரைவிங் நிலைமைகளுக்கும் சக்திவாய்ந்த செயல்திறன் கொண்ட பல இன்ஜின் ஆப்ஷன்கள் என இந்த காரின் பண்புகள் அனைத்தும் ஏற்கனவே இருந்ததை விட சிறந்த ஆல்-ரவுண்டர் ஃபேமிலி எஸ்யூவி -யாக இதை மாற்றுகின்றன.
இறுதியாக எஸ்யூவி -க்கான காத்திருப்பு காலம் இப்போது குறைந்துள்ளது. எனவே நீங்கள் XUV700 காரை வீட்டிற்கு கொண்டு வர நினைத்தால் இப்போது எந்த தயக்கமும் இல்லாமல் அதைச் செய்யலாம்.