Maruti Baleno விமர்சனம்: இது உங்கள் ஒவ்வொரு தேவையையும் பூர்த்தி செய்யுமா?
Published On ஏப்ரல் 09, 2024 By ansh for மாருதி பாலினோ
- 1 View
- Write a comment
இந்த பிரீமியம் ஹேட்ச்பேக் நியாயமான விலையில் உங்களுக்கான அனைத்தையும் வழங்க முயற்சிக்கிறது.
இந்திய கார் தயாரிப்பாளரான மாருதியின் பிரீமியம் ஹேட்ச்பேக்கான மாருதி பலேனோ பிரீமியம் தோற்றம், விசாலமான கேபின் மற்றும் ஜாலியான டிரைவ் அனுபவத்தை வழங்குகிறது. மேலும் இந்த பிரிவில் அதிக விற்பனையாகும் மாடலாக உள்ளது. ஆனால் அது உங்கள் குடும்பத்திற்கு நல்ல தேர்வாக அமையுமா? எதை கொடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் ? இந்த விரிவான ரிவ்யூவில் அதை கண்டுபிடிப்போம்.
ஒரு நேர்த்தியான தோற்றம்
பலேனோ ஒரு நேர்த்தியான வடிவமைப்பு மொழி மற்றும் முன்பக்கத்தில் நடுத்தர அளவிலான கிரில் நெக்ஸாவின் சிக்னேச்சர் ட்ரை-LED DRL -களுடன் கூடிய நேர்த்தியான LED ஹெட்லைட்கள் மற்றும் நேர்த்தியான குரோம் எலமென்ட்கள் ஆகியவை ஹேட்ச்பேக்கிற்கு பிரீமியம் கவர்ச்சியை சேர்க்கின்றன.
பக்கவாட்டில் தோற்றம் மிகவும் சிறப்பானது என்று சொல்ல முடியாது. ஆனால் நான் அதை மோசமானது என்றும் சொல்ல மாட்டேன். பலேனோவின் பின்பக்கம் எளிமையான தோற்றத்தைக் கொண்டுள்ளது. இது தேவையற்ற வெட்டுக்கள் மற்றும் வளைவுகளைக் கொண்டிருக்கவில்லை. இது ஹேட்ச்பேக்கிற்கு மிகவும் நிதானமான தோற்றத்தை அளிக்கிறது. மேலும் 16-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்களால் உள்ளன.
பின்பக்கம் U-வடிவ டெயில் விளக்குகளுடன் கூடிய பிரீமியம் தோற்றத்தை மீண்டும் கொண்டு வருகிறது. அவை முன்புறத்தில் உள்ள அதே ட்ரை-LED எலமென்ட்களை கொண்டுள்ளன. ஹேட்ச்பேக் பின்புற ஸ்பாய்லர் மற்றும் அதிக குரோம் எலமென்ட் அதன் வடிவமைப்பை முழுமையாக்குகிறது.
உங்கள் பொருள்களை வைக்க ஏற்றதாக இருக்குமா ?
318 லிட்டர் பூட் கெபாசிட்டி இருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது. இது பிரிவில் மிகப்பெரியது அல்ல ஆனால் உங்கள் நகரங்களுக்கு இடையேயான பயணத்திற்கு போதுமானது. நீங்கள் பூட்டில் நான்கு பைகளை வைத்திருக்கலாம். பக்கத்தில் ஒரு சிறிய லேப்டாப் பைக்கு இன்னும் இடம் இருக்கும் ஆனால் அதற்கு மேல் எதுவும் இல்லை. மேலும் பலேனோவில் உயரத்தில் பூட் லிப் இருப்பதான் காரணமாக உங்கள் சாமான்களை சேமிப்பதற்கு கொஞ்சம் கூடுதல் முயற்சி தேவைப்படும். குறிப்பாக கனமான பைகளை தூக்கி வைப்பதற்கு.


உங்களிடம் இன்னும் அதிகமான லக்கேஜ்கள் இருந்தால் பின் இருக்கைகளை முழுவதுமாக மடித்தால் கூடுதல் சூட்கேஸ்களை வைக்க அந்த இடத்தைப் பயன்படுத்தலாம்.
உள்ளே பிரீமியமான தோற்றம்
நீங்கள் பலேனோவில் நுழைந்தவுடன் உங்கள் கண்கள் பிளாக் மற்றும் புளூ கேபினை பார்க்கும். இது எக்ஸ்ட்டீரியர் புளூ நிற ஷேடுக்கு பொருந்தும் வகையில் உள்ளது. கேபின் வெளியில் இருந்து பார்க்கும் போதும் பிரீமியம் தோற்றத்தைக் கொண்டுள்ளது. இதை டாஷ்போர்டில் நீங்கள் பார்க்க முடியும். இது பிளாக் மற்றும் புளூ கலர் ஷேடுகளுக்கு இடையில் ஒரு சில்வர் எலமென்ட் உடன் அடுக்கு வடிவமைப்பைப் பெறுகிறது.
கேபினில் பிளாக் மற்றும் சில்வர் பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல் உள்ளது. இது கேபினின் வண்ணங்களுடன் மிகவும் நேர்த்தியாக பொருந்துகிறது.
பலேனோவின் கேபின் தோற்றத்தில் மட்டுமல்ல பிரீமியமான உணர்வையும் தருகின்றது. மாருதி அதை நன்றாகவே செய்துள்ளது. கேபினில் பயன்படுத்தப்பட்டுள்ளபிளாஸ்டிக்குகள் தரமானவை. இது தொடுவதற்கும் நன்றாக இருக்கும். கதவுகள் ஆர்ம்ரெஸ்டில் லெதர் பேடிங்கை பெறுகின்றன. மேலும் ஸ்டியரிங் வீல் மற்றும் சென்டர் கன்சோலில் பயன்படுத்தப்படும் பட்டன்கள் நன்றாக இருக்கின்றன. இது ஒரு விலை உயர்ந்த மார்க்கெட் காரில் அமர்ந்திருக்கும் உணர்வை கொடுக்கிறது.
முன் இருக்கை இடம்
இந்த இருக்கைகள் நல்ல குஷனிங்கை வழங்குகின்றன. மேலும் பலேனோ வழங்கும் இடம் நீங்கள் புகார் செய்யும் அளவுக்கு இருக்காது. நீங்கள் உள்ளே நுழைந்தவுடன் இருக்கைகள் உங்களுக்கு நல்ல அளவிலான ஹெட்ரூம், போதுமான லெக் ரூம் மற்றும் போதுமான கீழ் தொடைக்கான ஆதரவை வழங்குகின்றன. சராசரி அளவுள்ள பெரியவர்களுக்கு இங்கு வசதியாக உட்கார்ந்திருப்பதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.
கேபின் நடைமுறைக்கு ஏற்றதாக உள்ளதா?
ஆம், பலேனோ ஒரு நடைமுறைக்கு ஏற்ற கேபினை கொண்டுள்ளது. நான்கு கதவுகளிலும் 1-லிட்டர் பாட்டில்களுக்கான பாட்டில் ஹோல்டர்கள் கிடைக்கும். சிறிய பொருட்களை வைக்க பக்கங்களிலும் இடம் உள்ளது. சன் வைஸர்களில் சில ஆவணங்கள் அல்லது டோல் ரசீதுகளை வைக்க ஒரு கிளிப் உள்ளது. மேலும் சென்டர் கன்சோலில் முன்பக்க பயணிகளுக்கு கப் ஹோல்டர்கள் கிடைக்கும்.
சென்டர் கன்சோலில் அதிக ஸ்டோரேஜ் உள்ளது. இரண்டு கப் ஹோல்டர்களுக்கு முன்னால் உங்கள் ஃபோன் அல்லது சாவியை வைக்க ஒரு ட்ரேயை பெறுவீர்கள். மேலும் சென்டர் ஆர்ம்ரெஸ்டிலும் போதுமான இடவசதி உள்ளது. டிரைவரின் கதவை நோக்கி ஸ்டீயரிங் அருகில் ஒரு சிறிய டிரேவையும் நீங்கள் பெறுவீர்கள். இது உங்கள் பர்ஸை வைக்க பயன்படுத்தப்படலாம் மற்றும் க்ளோவ் பாக்ஸ் அளவும் போதுமானதாக உள்ளது.
பின் இருக்கையில் இருப்பவர்கள் இருக்கையின் பின் பாக்கெட்டுகளில் ஸ்டோரேஜ் உள்ளது. ஆனால் உங்கள் மொபைலுக்கான பிரத்யேக ஸ்லாட் இல்லை. மேலும் பின்பக்க பயணிகளும் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் கொடுக்கப்படவில்லை. இது ஹேட்ச்பேக்கின் பிரிவு மற்றும் விலையை கருத்தில் கொண்டு பார்த்திருக்கும் போது கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பின்புறம் விசாலமானது
முன்புறத்தை போலவே பின்புறத்திலும் இடம் நன்றாக இருக்கிறது. பின்பக்க பயணிகளுக்கு நல்ல ஹெட்ரூம் லெக்ரூம் மற்றும் முழங்கால் அறை உள்ளது மேலும் முன்பக்கத்தைப் போலவே தொடையின் கீழ் ஆதரவும் போதுமானதாக உள்ளது. இந்த இருக்கைகளின் குஷனிங் முன்புறம் போலவே உள்ளது மேலும் மிகவும் வசதியாக இருக்கும்.
பின் இருக்கைகள் மூன்று சராசரி அளவிலான பெரியவர்களுக்கு போதுமானதாக உள்ளன. மற்றும் அனைத்து பயணிகளுக்கும் சில ஷோல்டர் ரூம் நன்றாகவே உள்ளது. ஆனால் நடுப்பயணிகளுக்கு வெளிப்பக்கமாக இருப்பவர்களுக்கு கிடைக்கும் கம்ஃபோர்ட் கிடைப்பதில்லை. நடு இருக்கை வெளியில் சிறிது துருத்திக் கொண்டு உள்ளதால், பயணிகள் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வேண்டும் இது பலருக்குப் ஒத்துவராது. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது பலேனோ ஒரு வசதியான அனுபவத்தை வழங்குகிறது.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
பலேனோவின் பிரீமியம் உணர்வை தருவது இதிலுள்ள வசதிகளின்தான். ஹேட்ச்பேக் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் கூடிய 9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெறுகிறது. இந்தத் ஸ்கிரீன் ரெஸ்பான்ஸிவ் ஆக உள்ளது. இது பயன்படுத்த எளிதானது மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவை தடையின்றி செயல்படுத்துகின்றது.


பலேனோ ஒரு செமி-டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது இது அனைத்து தகவல்களும் நேர்த்தியாக வழங்கப்படுவதைக் காட்டுகிறது. மேலும் ஒரு ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் நல்ல ஃபங்ஷனுடன் உள்ளது. இவை அனைத்தையும் தவிர இது க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் பின்புற ஏசி வென்ட்களுடன் கிடைக்கிறது.
பாதுகாப்பு விஷயத்தில் கூட பலேனோ நிறைய வசதிகளுடன் வருகின்றது . நீங்கள் 6 ஏர்பேக்குகள், ABS உடன் EBD எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), ஹில் ஹோல்ட் அசிஸ்ட் அனைத்து பயணிகளுக்கும் 3-பாயின்ட் சீட்பெல்ட்கள், ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றைப் பெறுவீர்கள்.
ஆனால் பாதுகாப்பு என்பது வசதிகளைப் பற்றியது அல்ல. பலேனோவின் இந்த பதிப்பு கிராஷ் டெஸ்ட் செய்யப்படவில்லை. இது சுஸூகியின் ஹார்டெக்ட் தளத்தை அடிப்படையாகக் கொண்டது. இது கடந்த காலத்தில் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. எனவே இந்த ஹேட்ச்பேக்கை கிராஷ் டெஸ்ட் செய்யும் போதுதான் பலேனோவின் உண்மையான பாதுகாப்பை கண்டறிய முடியும்.
செயல்திறன்
இப்போது பலேனோவின் அனைத்து விவரங்களையும் அறிந்த பிறகு அதன் செயல்திறனைப் பற்றி பேசலாம். இந்த ஹேட்ச்பேக் மாருதியின் 1.2 லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜினுடன் வருகிறது. இது நன்கு ரீஃபைன்மென்ட் ஆகவும், ரெஸ்பான்ஸிவ் ஆகவும் உள்ளது. கிரீனர் ஃபியூல் மற்றும் சிறந்த மைலேஜை விரும்புவோருக்கு கார் தயாரிப்பாளர் அதே இன்ஜினுடன் கூடிய CNG பவர்டிரெய்னையும் வழங்குகிறது.
பலேனோ ஒரு வேடிக்கையாக ஓட்டக்கூடிய கார் ஆனால் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் உள்ளது. நாங்கள் AMT -யை ஓட்டினோம், அது வேடிக்கையாக இல்லை. பலேனோ -வின் எஞ்சின் நன்கு ரீஃபைன்மென்ட்டானது மற்றும் அதன் பிரிவுக்கு போதுமான அளவு சக்தியை உற்பத்தி செய்கிறது ஆனால் AMT இந்த ஆற்றலை அதன் ரேஞ்சை அனுபவிக்க அனுமதிக்காது.
என்னை தவறாக எண்ண வேண்டாம் உங்கள் தினசரி நகரப் பயணங்களுக்கு இந்த டிரான்ஸ்மிஷன் போதுமானது. ஓவர்டேக்குகளுக்கு அதிக முயற்சி தேவைப்படாது. அது நகரமாக இருந்தாலும் சரி நெடுஞ்சாலையாக இருந்தாலும் சரி நீங்கள் மிக எளிதாக பயணம் செய்யலாம். ஆனால் கியர் ஷிஃப்ட் மெதுவாக உள்ளது. ஒவ்வொரு கியர் ஷிஃப்ட்டிலும் குறிப்பாக முந்திச் செல்லும் போது அல்லது குறைக்கும் போதும் அதை நீங்கள் உணர்வீர்கள். இந்த பிரிவில் ஒரு காரில் AMT இருப்பது அர்த்தமற்றது அதன் போட்டியாளர்கள் DCT கியர்பாக்ஸை மிகவும் மென்மையான ஓட்டுநர் அனுபவத்துடன் வழங்குவதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால் AMT உடன் கன்ட்ரோல் உங்கள் கையில் இருக்க வேண்டுமெனில் அதை மேனுவல் மோடில் வைக்க உங்களுக்கு ஆப்ஷன் உள்ளது.
சவாரி மற்றும் கையாளுதல்
பலேனோவின் சவாரி தரம் மிகவும் மென்மையானது. உடைந்த சாலைகள் பள்ளங்கள் மற்றும் வேகத்தடைகளில் வாகனம் ஓட்டும்போது பலேனோ உங்களுக்கு வசதியாக இருக்கும். அதிக பயணம் இல்லாத சமநிலையான சஸ்பென்ஷன் அமைப்பால் புடைப்புகள் மற்றும் பள்ளங்களில் வாகனம் ஓட்டும்போது கேபின் அதிக அசைவுகளை கொடுப்பதில்லை. மேலும் காரில் பக்கவாட்டு ரோலிங்கும் இல்லை.
பலேனோவின் கையாளுதலும் மென்மையாக உள்ளது. நகரத்தில் வாகனம் ஓட்டும்போது ஹேட்ச்பேக் நிலையாக இருக்கும் நெடுஞ்சாலைக்கும் இதையே கூறலாம். பலேனோவை ஓட்டும் போது நீங்கள் நம்பிக்கையுடன் ஓட்டும் அனுபவத்தைப் பெறுவீர்கள். இது நிச்சயமாக மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
தீர்ப்பு
இப்போது முக்கிய கேள்விக்கு வருகிறேன்: நீங்கள் பலேனோவை வாங்க வேண்டுமா இல்லையா? இந்த விலையில் காரில் உங்களுக்குத் தேவையான அனைத்தையும் பலேனோ வழங்குகிறது. இது உங்களுக்கு நல்ல தோற்றம், நல்ல வசதிகள் மற்றும் பிரீமியம் கேபின் ஆகியவற்றை வழங்குகிறது ஆனால் பாதுகாப்பில் பின்தங்கியுள்ளது.
இருந்தபோதிலும் பலேனோ நகரம் மற்றும் நெடுஞ்சாலை பயணங்களை வசதியுடன் செய்ய உங்களை அனுமதிக்கிறது. மேலும் சக்திவாய்ந்த மற்றும் சுவாரஸ்யமாக ஓட்டும் அனுபவத்தை உங்களுக்கு வழங்குகிறது. எனவே சரியான விலையில் முழுமையான பேக்கேஜை வழங்கும் காரை நீங்கள் தேடுகிறீர்களா ? பலேனோ உங்களுக்கானது.