• English
    • Login / Register

    மெர்சிடீஸ் ஜிஎல் - க்ளாஸ் கார்களுக்கு மாற்றாக புதிய மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் அறிமுகமாக உள்ளது

    konark ஆல் நவ 04, 2015 11:06 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 21 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    டெல்லி: ஜெர்மன் நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் சமீப காலமாக தங்களுடைய கார்களின்   ரேன்ஜில் சில பல மாற்றங்கள் செய்து வருகிறது.  வரும் 2016 ஆம் ஆண்டு புதிய மெர்சிடீஸ் GL கார்கள் தற்போது உள்ள மெர்சிடீஸ் GLS கார்களுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப் பட உள்ளன.  இந்த புதிய காரின் படங்கள் அடங்கிய மெர்சிடீஸ் நிறுவனத்தின் அதிகாரபூர்வ சிற்றேடு ( ப்ரோச்சர்) புதிதாக அறிமுகமாக உள்ள காரின் பெயரை உறுதி செய்துள்ளது. வெளிப்புற வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது மட்டுமின்றி எஞ்சினிலும் மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  முகப்பு விளக்குகள் மற்றும்  டெயில் விளக்குகளும் மிக நேர்த்தியாக மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புற க்ரில் மற்றும்  பம்பர்களும் நல்ல கம்பீரமான தோற்றம் தரும் வகையில் மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ளன.

    இந்த மாற்றங்கள் ML- க்ளாஸ் கார்களை அடிப்படையாக கொண்ட  GLE மாடல் கார்களில் உள்ளது போன்றே  இருக்கின்றன.  இந்த அறிமுகமாக உள்ள புதிய GLS கார்கள் புதிய உட்புற அலங்கரிப்புக்களினால் கூடுதல் ப்ரீமியம் தன்மையை பெறுகிறது.  டேப்லெட் போன்ற ஸ்டைல் கொண்ட கழற்றி மாட்டும் வசதியுடன் கூடிய இன்போடைன்மென்ட் சிஸ்டம் காரின் உட்புற அழகிற்கு  கூடுதல் மெருகு சேர்கிறது.  தற்போதைய GL- கிளாஸ் கார்களில் உள்ளது போன்றே 7 சீட்டர் ( இருக்கை) வசதி  செய்யப்பட்டுள்ளது.  பெயரைப் பொறுத்தவரை வேறு ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படுமா என்பது பற்றி எந்த வித அதிகாரபூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. அப்படியே பெயர் விஷயத்தில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்படுமெனில் அந்த தகவலை இந்த வருட இறுதிக்குள் எதிர்பார்க்கலாம்.

    சர்வதேச சந்தையில் அறிமுகமான பிறகு இந்திய சந்தையிலும் நாம் அப்டேட் செய்யப்பட்ட மாடல்களை  ( மேம்பாடு ) எதிர்பார்க்கலாம்.  ஆரம்பத்தில் இந்த கற்கள் CBU வழியில் ( முழுதும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு ஓட்டுவதற்கு தயார் நிலையில் இறக்குமதி செய்யப்படும் முறை )  இறக்குமதி செய்யப்பட்டு பின் டிமேண்ட் (தேவை) அதிகரிக்கும் போது டீசல் வேரியன்ட்களை மட்டும் இந்தியாவில் பென்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் தெரிகிறது.   

    was this article helpful ?

    Write your கருத்தை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience