• English
  • Login / Register

2016 இனோவா-வின் அதிகாரபூர்வமான முதல் படத்தை டொயோட்டா வெளியிட்டது!

published on நவ 04, 2015 02:03 pm by raunak for டொயோட்டா இனோவா

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த மாதம் 23 ஆம் தேதி இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த இனோவா வெளிவரும் என்று கூறப்படும் நிலையில், ஆட்டோ எக்ஸ்போ 2016-ன் மூலம் இந்தியாவில் அரங்கேற்றம் காணலாம்!

ஜெய்ப்பூர்: அடுத்து வரவுள்ள இரண்டாம் தலைமுறை இனோவாவின் அதிகாரபூர்வமான முதல் படத்தை (டீஸர்) ‘விரைவில் வருகிறது’ என்ற மேற்கொள் உடன் டொயோட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. சமீப காலமாக 2016 இனோவாவின் படங்கள், இந்தோனேஷிய சிற்றேடு முழுமையாக வெளியிட்டது உட்பட பல வழிகளில் கசிந்து வருகிறது. இந்நிலையில், அதிகாரபூர்வமான வெளியீடு குறித்து கூறும் போது, இந்த மாத கடைசியான 23 ஆம் தேதியன்று, இரண்டாம் தலைமுறை இனோவா காரை அறிமுகம் செய்ய உள்ளதாக டொயோட்டா அறிவித்துள்ளது. இந்திய அறிமுகத்தை பொறுத்த வரை, நம் நாட்டில் ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு மேலாக பழக்கப்பட்ட இனோவாவின் இரண்டாம் தலைமுறை வாகனத்தை, அடுத்த ஆண்டையொட்டி அறிமுகம் செய்ய அதிக வாய்ப்புள்ளது. அடுத்தாண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், இதன் அதிகாரபூர்வமான பொது வெளியீடு நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: புதிய டொயோட்டா க்ரூஷர் 200 ரூ.1.29 கோடியில் அறிமுகம்

சமீபகால கசிந்த செய்திகளின் மூலம் தெரியவந்தவை: 2016 இனோவாவை, ஒரு புதிய 2.4-லிட்டர் டீசல் என்ஜின் இயக்க உள்ளது. இந்த மோட்டார், ஒரு 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய தேர்வுகளுடன் இணைந்து செயலாற்றும். இந்த 2393 cc நான்கு சிலிண்டர் என்ஜின் மூலம், இப்பிரிவிலேயே சிறந்த 149 PS @ 3400 rpm மற்றும் 1200-2800 rpm இடைப்பட்ட நிலையில் 343 Nm என்ற உச்ச முடுக்குவிசையை, 5-ஸ்பீடு மேனுவல் உடன் இணைந்து வெளியிடுகிறது. அதே நேரத்தில் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் இணையும் போது 1200-2600 rpm இடைப்பட்ட நிலையில் 360 Nm-யும் அளிக்கிறது.

இந்தோனேஷியாவில் வெளியாகும் வாகனத்தில் 205/65 R16 மற்றும் 215/65 R17 அலாய்களை கொண்ட தேர்வோடு வருகிறது. முன்பே கூறியது போல, என்ஜின் விபரங்களின் வரிசை அமைந்திருக்கும். ஏனெனில் இரண்டாம் தலைமுறை இனோவா மற்றும் பார்ச்யூனர் ஆகியவற்றை, ஒரு புதிய குடும்பத்தை சேர்ந்த டீசல் என்ஜின்கள் இயக்கும் என்று இந்தாண்டின் துவக்கத்தில் டொயோட்டா நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் மற்ற நாடுகளில் வெளியாகும் இனோவாவில் ஒரு புதிய 2.0-லிட்டர் இரட்டை VVT-i பெட்ரோல் என்ஜினையும் கூடுதலாக பெற்றிருக்கும். ஆனால் இந்தியாவில், டீசல் மில்லை மட்டுமே எதிர்பார்க்க முடியும். எனவே 2016 இனோவா-வை குறித்த கூடுதல் விபரங்களுக்கு, தொடர்ந்து இந்த இணையதளத்தை பாருங்கள்.

பரிந்துரைகள்:

was this article helpful ?

Write your Comment on Toyota இனோவா

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • எம்ஜி m9
    எம்ஜி m9
    Rs.70 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா கேர்ஸ் ev
    க்யா கேர்ஸ் ev
    Rs.16 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஏப், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ரெனால்ட் டிரிபர் 2025
    ரெனால்ட் டிரிபர் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜூன, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf9
    vinfast vf9
    Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience