Tata Avinya X EV கான்செப்ட் காரி ன் சில விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன
kartik ஆல் மார்ச் 19, 2025 07:09 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
காப்புரிமைக்கான வடிவமைப்பு படத்தில் காணப்படும் ஸ்டீயரிங் ஆனது ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட மாடலில் காணப்பட்டதை போலவே உள்ளது.
டாடா அவின்யா இவி கான்செப்ட் காரின் ஸ்டீயரிங் வீல் வடிவமைப்பிற்கான வடிவமைப்பு காப்புரிமையின் படம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. இது உற்பத்திக்கு தயாராக உள்ள கார் எப்படி இருக்கும் என்பது பற்றிய யோசனையை நமக்கு வழங்குகிறது. அவின்யா எக்ஸ் 2025 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டது மற்றும் 'அவின்யா' பெயர்ப்பலகையின் கீழ் இடம்பெறும் இரண்டாவது மாடலாகும் (முதலாவது 2022 ஆண்டில் வெளியிடப்பட்டது). வடிவமைப்பில் இருந்து என்ன விஷயங்களை பார்க்க முடிகிறது மற்றும் முன்பு காட்சிப்படுத்தப்பட்ட ஸ்டீயரிங் வீலுடன் இதை ஒப்பிடுவது எப்படி என்பதைப் பற்றி பார்ப்போம்.
என்ன பார்க்க முடிகிறது ?
ஸ்டியரிங் வீல் வடிவமைப்பு ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட மாடலில் உள்ளதை போலவே உள்ளது. மற்ற மாடல்களில் உள்ள டாடா லோகோவிற்கு பதிலாக (சில கார்களில் ஒளிரும்) டூயல்-ஸ்போக் ஸ்டீயரிங் மையத்தில் 'அவின்யா' எழுத்துடன் வருகிறது.
ஸ்டீயரிங் வீலில் ஆடியோ மற்றும் மீடியா கன்ட்ரோல்கள் மற்றும் ADAS விஷயங்களை கன்ட்ரோல் செய்வதற்கான பட்டன்கள் உள்ளன. காப்புரிமை பெற்ற படத்தில் உள்ள ஸ்டீயரிங் வடிவமைப்பு உற்பத்திக்கு தயாராக உள்ள மாடலுக்கு கொண்டு செல்லப்படுமா என்பதை பார்க்க வேண்டும்.
டாடா அவின்யா X ஒரு பார்வை
அவின்யா எக்ஸ் கான்செப்ட் ஒரு மினிமலிஸ்டிக் வெளிப்புறத்துடன் கூடிய கிராஸ்ஓவர் எஸ்யூவி ஆகும். ஆல்-எலக்ட்ரிக் கான்செப்ட்டின் முன்பக்கம் வெர்டிகலான ஹெட்லேம்ப்களுடன் டி-வடிவ LED DRL -களை கொண்டுள்ளது. பக்கவாட்டில் சாய்வான கூரை தெரிகிறது. அவின்யா எக்ஸ் முன்பக்கத்தில் ஃப்ளஷ்-ஃபிட்டட் டோர் ஹேண்டில்களை கொண்டுள்ளது. அதே சமயம் பின்புறத்தில் கதவுகளை இயக்க டச் பேஸ்டு பேனல் உள்ளது.
பின்புறத்தில் 'அவின்யா' மற்றும் 'எக்ஸ்' பேட்ஜிங்குடன் டி-வடிவ எல்இடி டெயில் லைட்கள் உள்ளன.
அவின்யா எக்ஸ் கான்செப்ட்டின் உட்புறம் முழுக்க முழுக்க பெய்ஜ் கலர் தீமில் கொடுக்கப்பட்டுள்ளது. டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் ஆல்-டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளேவுடன், இவி -யில் இருக்கும் மூன்றாவது எல் வடிவ லைட்டிங் எலமென்ட் டேஷ்போர்டில் உள்ளது. அவின்யா எக்ஸ் பெரிய கிளாஸ் ரூஃப் உடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பவர்டிரெய்ன் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. என்றாலும் கூட அவின்யா எக்ஸ் 600 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பல பேட்டரி பேக்குகள் மற்றும் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
அவின்யா எக்ஸ் ஆனது டாடாவின் புதிய தளமான எலக்ட்ரிஃபைடு மாடுலர் ஆர்கிடெக்சரை (இஎம்ஏ) அடிப்படையாகக் கொண்டது. இந்த தளம் இவி கார்களுக்கு மட்டுமேயானது மேலும் இது ஜாகுவார் லேண்ட் ரோவருடன் பகிரப்படும். இது 2025 ஆண்டிலேயே அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அவின்யா பெயர்ப்பலகையின் கீழ் உள்ள மாடல்கள் 2026 ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பார்க்க: MG Comet EV ஆனது MY2025 அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது
எதிர்பார்க்கப்படும் விலை
எம்ஜி செலக்ட் போலவே அவின்யா ஆனது டாடாவின் சொகுசு இவி பிராண்டாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பிராண்டின் கீழ் முதல் மாடல் 2026 ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல் எலக்ட்ரிக் அவின்யா எக்ஸ் விலை ரூ. 40 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.