இந்தியாவில் முதல் முறையாக சாங்யாங் டிவோலி வேவுப் பார்க்கப்பட்டது!
published on டிசம்பர் 30, 2015 11:54 am by raunak
- 17 Views
- 3 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
நம் நாட்டில் ஹூண்டாய் க்ரேடாவின் தலைமையில் அமைந்த கச்சிதமான SUV வரிசையில் அமைந்த வாகனங்களோடு, சாங்யாங் டிவோலி போட்டியிடும்!
புதுடெல்லி:
நம் நாட்டில் கச்சிதமான கிராஸ்ஓவரான டிவோலியை, சாங்யாங் நிறுவனம் சோதனையில் ஈடுபடுத்தி வருகிறது. வரும் 2016 பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள ஆட்டோ எக்ஸ்போவில், அதன் இந்திய அரங்கேற்றம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டின் துவக்கத்தில் ஐரோப்பிய சந்தையில் இந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட்ட போது, பெட்ரோல் மற்றும் டீசல் என்ற இரு தேர்வுகளையும் கொண்டிருந்தது. இந்தியன் ஆட்டோமோட்டிவ் சந்தையின் கச்சிதமான SUV / கிராஸ்ஓவர் பிரிவிற்குள் சமீப காலத்தில் நுழைந்த ஹூண்டாய் க்ரேடா ஒரு வெற்றிப் பாதையில் பயணித்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் அறிமுகமான இந்த கொரியன் SUV, இதுவரை 80,000 முன்பதிவுகளை நெருங்கியுள்ளது. ஒரு க்ரேடாவிற்காக ஏங்கி நிற்கும் வாடிக்கையாளர்களின் மனதை ஈர்க்கும் வகையில், டிவோலியிலும் ஏறக்குறைய அதே அளவிலான பேக்கேஜ் அளிக்கப்படுகிறது.
முதலாவதாக, ஐரோப்பாவில் வெளியிடப்பட்ட டிவோலியில் 1.6-லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களை கொண்டு, க்ரேடாவில் உள்ளவைக்கு நிகராக உள்ளது. 1.6-லிட்டர்- e-XGi160 பெட்ரோல் என்ஜின் மூலம் 6,000 rpm-ல் 128 PS வரையிலான அதிகபட்ச ஆற்றலையும், 4,600 rpm-ல் 160Nm என்ற அதிகபட்ச முடுக்குவிசையையும் அளிக்கிறது. e-XDi160 டீசல் என்ஜின் 3,400-4,000 rpm-ல் 115 PS ஆற்றலையும், 1,500-2,500 rpm-ல் ஒரு கவர்ச்சிகரமான 300 Nm என்ற அதிகபட்ச முடுக்குவிசையையும் அளிக்கிறது. இவ்விரு மோட்டார்களும், தரமான 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்ட நிலையில், ஐசினின் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் தேர்விற்குட்பட்டதாக அளிக்கப்படுகிறது. மஹிந்திரா-சாங்யாங் மூலம் 6-ஸ்பீடு ஆட்டோ உடன் டிவோலி அளிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், க்ரேடாவில் அளிக்கப்படும் 6-ஸ்பீடு ஆட்டோ டீசல் வாங்குவதற்கான அதிகபட்ச காத்திருப்பு காலம் இருப்பதால், புதிதாக நுழையும் டிவோலிக்கு இது ஒரு கூடுதல் அனுகூலமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் 2WD மற்றும் 4WD ஆகிய இரு கட்டமைப்புகளும் அளிக்கப்படுகிறது.
சாங்யாங் டிவோலியின் நீளம் 4,195 mm, ஒட்டுமொத்த அகலம் 1,795 mm மற்றும் உயரம் 1,590 mm என்ற அளவீடுகளை பெற்றுள்ளது. இந்த வாகனத்தில் 2,600 mm அளவில் வீல்பேஸ் காணப்படுகிறது. இந்த புள்ளிவிபரங்களை பார்த்தால், இதன் போட்டியாளர்களான ரெனால்ட் டஸ்டர் மற்றும் ஹூண்டாய் க்ரேடா ஆகியோருடன் ஒப்பிடக்கூடியதாக உள்ளது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful