சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ரோல்ஸ் ராய்ஸ் ரெய்த் மும்மூர்த்திகளில், இறுதி மூர்தியான ‘இன்ஸ்பையர்ட் பை ம்யூசிக்’ அறிமுகப்படுத்தப்பட்டது

nabeel ஆல் ஆகஸ்ட் 11, 2015 12:37 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
22 Views

2013 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்த போது,, ரோல்ஸ் ராய்ஸ் ரெய்த் கார், பிஸ்போக் ஆடியோ அமைப்பை தனிப்பட்ட விருப்ப தெரிவாகவே கொண்டிருந்தது. ஆனால் சமீபத்திய புதுப்பித்தலுடன் வரும் சிறப்பு ரெய்த் கார்கள், 1300W மின் ஆற்றலுடன் 18 வழி தடங்களை கொண்ட பேஸ்போக் ஆடியோ அமைப்பு பொருத்தபட்டு “மிகுந்த தனித்துவமிக்க இசை தளம்” என, இந்நிறுவனம் பெருமையுடன் புகழ் பாடும்படி உள்ளது. திரை உலகில் தவிர்க்க முடியாத கவர்ச்சியை போல கிளர்ச்சியை உண்டு பண்ணும் ரெய்த் ‘இன்ஸ்பையர்ட் பை ஃபிலிம்' கார், அதற்கு பின்பு வந்த நவீன நவநாகரீகத்தால் கவர்ந்து இழுத்த ரெய்த் ‘இன்ஸ்பையர்ட் பை ஃபேஷன்' கார்களைப் போல தற்போது, ரோல்ஸ் ராய்ஸ் இசையால் கவர்ந்து இழுக்கக் கூடிய ரெய்த் ‘இன்ஸ்பையர்ட் பை ம்யூசிக்'கை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் பெயருக்கு ஏற்ப 1300W மின் ஆற்றலும் 18 வழி தட ஒலி அமைப்புடன் இணைந்து இரண்டு அடித்தொனி ஒலி பெருக்கி (பாஸ் ஸ்பீக்கர்கள்), 7 உயர் தொனி ஒலி பெருக்கி (ட்வீட்டர்), 7 மித தொனி (மிட் ரேஞ்ச்) ஒலி பெருக்கி, மற்றும் இரு உற்சாகமளிக்கும் (எக்ஸ்ஸைட்டர்) ஒலி பெருக்கி ஆகிய அனைத்தும் தேர்ந்தெடுக்கும் விருப்ப தெரிவுகளாக, நிலையான எப்போதுமே உள்ள மாடல்களில் கிடைக்கிறது.

இந்த உற்சாகமூட்டும் ஒலி பெருக்கிகள் தலைக்கு மேல் உள்ள காரின் விதான பகுதிகளில் பொருத்தபட்டுள்ளன. இரண்டு வருட முயற்சியின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த இசை அமைப்பு, ரோல்ஸ் ரோய்சில் பயணிப்பவர்களுக்கு, நேரடி இசை அனுபவத்தை கொடுத்து மகிழ்விக்கும், என ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கூறுகிறது. மேலும் இந்த ஆடியோ சாதனத்தின் முகப்பு பெட்டிகளில் நுண்ணிய ஒலி வாங்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் வெளிப்புற சத்தங்களை உள்வாங்கி ஆராய்ந்து, ஒலி அளவை (வால்யூம்) அதற்கு ஏற்ப மாற்றி அமைக்கிறது. இது இசை பிரியர்களுக்கு மிகவும் உற்சாகம் ஊட்டுவதாக உள்ளது.

தோற்றதை பார்க்கும் போது, ரோல்ஸ் ராய்ஸ் ரெய்த் கார் உட்புறமும், வெளிப்புறமும் அழுத்தமான தாமிர கலர் கொண்டு வசீகரபடுத்தபட்டுள்ளது. மேலும் புதிய வகை அழகிய தோல் வேலைபாடுகள் கதவின் மேலும், மிதியடிலும் ஆடம்பரமாக வேயப்பட்டு மேலும் வசீகரிக்கின்றன. பிஸ்போக் ஆடியோ என்ற பெயர் பொறிக்கபட்ட ஒலி பெருக்கி வலைமூடியும் (கிரில்) மிதமான தாமிர கலரில், பொருத்தமாக மிளிர்கிறது. இது தவிர, 624 bhb தடை குதிரை திறனை தரவல்ல அதே 6.6 லிட்டர் V 12 இஞ்ஜின் 8 வேக பல்லிணைப்பு பெட்டியுடன் (கியர் பாக்ஸ்) இக்கார் இயங்க சக்தி அளிக்கிறது.

ரோல்ஸ் ராய்ஸ் ரெய்த் ‘இன்ஸ்பையர்ட் பை ம்யூசிக்‘ ரக கார் இந்தியாவில் குறைந்த விலையாக ரூபாய் 6.5 கோடி அளவில் கிடைக்கும் என எதிர் பார்க்கபடுகிறது. மேலே குறிப்பிட்ட மூன்று வகை கார்களில், முதலாவதாக ரெய்த் ‘இன்ஸ்பையர்ட் பை ஃபிலிம் ரக கார் 2015 ஏப்ரல் முதல் தேதியில் நடந்த 2015 நியூயார்க் ஆட்டோ ஷோவில் அறிமுகபடுத்தப்பட்டது. BFI (பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்), நேஷனல் ஆர்சிவ் அமைப்பின் அனுமதியுடன், ரோல்ஸ் ராய்ஸ் ரெய்த் அறிமுகமான திரைபடத்தின் – ‘அண்டு த உட் ஸ்டுட் ஸ்டீல்' பட விழாவாக இந்த காரின் அறிமுகம் நடைபெற்றது.

இதனை தொடரிந்து ரெய்த் ‘இன்ஸ்பையர்ட் பை ஃபேஷன்' கடந்த 2015 மே மாதம் வெளியிடப்பட்டது. இந்த வகையில், வெளிப்புறத்தில் இரண்டு விதமான வண்ண திட்டத்தை அறிமுகப்படுத்தி மேலும் அழகும் கவர்ச்சியும் அதிகப்படுத்தப்பட்டு மெருகேற்றப்பட்டது. இரண்டு வகை வண்ணங்களில், ஆண்டலூசியன் வெள்ளை மற்றும் ஆர்க்டிக் வெள்ளை; மல்லிகை மற்றும் மகேல்லோ சிகப்பு அல்லது டைலர்ட் பர்பிள் ஆகிய வண்ண தெரிவுகளில் வருகிறது. மேலும், ரோல்ஸ் ராய்ஸ் ரெய்த்தின் தனித்துவமான சின்னமான தோள்பட்டைகளில், கைகளால் ஆனா வேலைப்பாட்டுடன், வடிக்கையாளர்களின் விருப்ப தேர்வு நிறத்தில் அழுத்தமான கோடுகளைக் கொண்டு மனதை அள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரெய்த் ‘இன்ஸ்பையர்ட் பை ம்யூசிக்' காரின் திரைக் காட்சி தொகுப்பு:

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.46.89 - 48.69 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.10 - 19.52 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.17.49 - 22.24 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.92.90 - 97.90 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை