சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2016 ஆண்டிற்கான ஃபோர்ட் முஸ்டங்க் GT350, GT350R மாடல்களின் விலைவிவரம் வெளியிடபட்டது

published on ஆகஸ்ட் 13, 2015 10:34 am by manish for போர்டு மாஸ்டங் 2016-2020

2016 ஆம் ஆண்டில் ஃபோர்ட் முஸ்டங்க் வடிவமைப்பு முடிந்து சந்தைக்கு வருகிறது. அது போல, இதன் அதிகாரபூர்வ விலையையும் தயாரிப்பாளர்கள் முடிவு செய்து வெளியிட்டுள்ளனர். ஃபோர்ட் GT350 மாடல் $ 49995 – இல் இருந்தும், பந்தைய தடத்தில் ஓடக்கூடிய GT350R, $ 63495 - இல் இருந்தும் ஆரம்பமாகிறது. GT 350 தொழில்நுட்ப தொகுப்பு, பந்தய தடம் சார்ந்த தொகுப்பு என இரு மாறுபட்ட தெரிவுகளை வழங்குகிறது. $ 7500 மதிப்பு கொண்ட தொழில் நுட்ப தொகுப்பில் Sync 3, ஊர்தியக (கராஜ்) கதவு திறப்பான், 4 திசையிலும் திருப்பவல்ல தலைதாங்கி (ஹெட் ரெஸ்ட்), வெப்பநிலை கட்டுபாட்டு வசதி (கிளைமேட் கண்ட்ரோல்), ஏழு ஒலி பெருக்கி கொண்ட ஆடியோ சாதனத்துடன் இணைந்த செயற்கைகோள் வானொலி, மேக்னேரெய்டு, கனரக முன்புற அதிர்வு தாங்கி (ஹெவி டியூட்டி ஃப்ரண்ட் ஸ்பிரிங்ஸ்), ஃபோர்டின் ஒருங்கிணைந்த கட்டுபாட்டு ஓட்டுனர் உபகரணம், திருப்பு சமிங்கையுடன் கூடிய கண்ணாடி, இரு-இட தானியங்கி சீதோஷ்ண கட்டுப்பாட்டு சாதனம் ஆகிய அனைத்தும் அடங்கும். அடுத்ததாக உள்ள பந்தைய தடம் சார்ந்த கார் தொகுப்பில் மேக்னேரெய்டு, கனரக முன்புற அதிர்வு தாங்கி, ஒருங்கிணைந்த கட்டுபாட்டு ஓட்டுனர் உபகரணம், ஒரு பின்புற கதவு கைபிடி (டெக்லிட் ஸ்பாய்லர்), இயந்திர எண்ணெய் குளிரூட்டி, முட்டு தாங்கி சட்டம் (ஸ்டூர்ட்-டவர் பிரேஸ்) ஆகிய அனைத்தும் அடங்கும்.

ஃபோர்ட் GT350 காரை மூன்று வித மஞ்சள் கலரில் பெறுவதற்கு, கூடுதலாக $ 495 விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் மற்ற வண்ணங்களான சிவப்பு, மிதமான மற்றும் அழுத்தமான சாம்பல் நிறம், கருப்பு, ஆரஞ்சு ஆகியவற்றிற்கு எந்த வித விலை மாறுதலும் இல்லை. விருப்ப தெரிவுகளான கருப்பு வண்ண மேற்கூரைக்கு $ 695ம், பந்தைய சின்னமான பட்டை வடிவத்திற்கு $ 475 ம் விலை நிர்ணயம் செய்துள்ளது. பந்தைய சின்னமான பட்டை வடிவத்தை வெள்ளை, கருப்பு (விளிம்புகளில் வெள்ளை) நீலம் (விளிம்புகளில் கருப்பு) இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

R ரக கார்களில் வரம்புகளுக்கு உட்பட்ட அம்ஸங்களே உள்ளன. நிலையான R மாடல் கார்கள், எப்போதும் உள்ள GT 350 ரகங்களில் இருந்து விலகி அழகான பட்டைகளைக் கொண்டவைகளாக இருக்கின்றன. எனவே, $ 3,000 மதிப்புள்ள மின்னணு தொகுப்பில் (எலெக்ட்ரானிக் பேக்கேஜ்) வாடிக்கையாளர்கள் ஒரு சில சொகுசு அம்சங்களை பெறுவர், முறையே ஒரு கேப்பொலி அமைப்பு (ஆடியோ சிஸ்டம்), சிங்க் 3, இரு இடங்களில் உள்ள தட்பவெட்ப கட்டுபாட்டு அமைப்பு (டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல்), பயண வழிகாட்டும் சாதனம் (நேவிகேஷன்), பின்புறம் பார்க்க உதவும் நிழல்படகருவி (ரியர் வியூ காமிரா), திருப்பு சமிங்கையுடன் கூடிய கண்ணாடி (டர்ன் சிக்னல் மிரர்), துணை அளவைகள் (ஆக்சிலரி காஜஸ்), பயணம் எளிதாக இருக்க உதவும் உபகரணங்கள் (டயர் ஓட்டையை அடைக்கும் டயர் சீலண்ட், காற்று நிரப்பும் இன்ஃப்ளாட்டோர்), கீழே விரிக்கும் பாய்கள் (ஃபுளோர் மேட்), மற்றும் பூட் கதவை திறக்கும் கருவியும், இவற்றில் அடங்கும்.

ஆரஞ்சு காலரைத் தவிர்த்து, GT 350 R ரக கார்கள் GT 350 கார்களின் உள்ள வண்ணங்களிலேயே வருகின்றன. டிரிபிள் மஞ்சள் வண்ண கார்கள் மட்டும் சற்றே அதிக விலை உடையதாக உள்ளன. பந்தய சின்னமான பட்டை வடிவங்களை பெற்றிருந்தால், $475 என்ற விலையில் வருகிறது. மேலும், இவை வெள்ளை, கருப்பு அல்லது நீலத்திலும், ஓரங்களில் சிகப்பு வண்ணங்களிலும் வருகின்றன. இவற்றில் மிகவும் அதிகமான விலையில் வரும் GT 350 R ரக கார், டிரிபிள் மஞ்சள் வண்ணத்தில் கருப்பு நிற கூரை, தொழில்நுட்ப அம்ஸங்கள், மற்றும் பந்தய கார்களைப் போல பட்டைகளுடன் வருகிறது. இதன் விலை $66,860 ஆகும். மேலே உள்ள அனைத்து விவரங்களும், விநியோகிஸ்தார்களின் நிர்ணயத்தை தவிர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது.

m
வெளியிட்டவர்

manish

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது போர்டு மாஸ்டங் 2016-2020

Read Full News

trendingகூபே சார்ஸ்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை