பியூஜியோட், டாடா மோட்டார்ஸுடன் இணைந்து, இந்தியாவில் நுழைய முனைப்புடன் செயல்படுகிறது
published on அக்டோபர் 06, 2015 03:00 pm by sumit
- 23 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபிரெஞ்சு வாகன குழுமமான PSA பியூஜியோட் சிற்றொய்ன் நிறுவனம், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நுழைய முனைந்து, தோல்வி அடைந்தது. இப்போது மீண்டும், இந்தியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தியாளருடன் இணைந்து நம் நாட்டு வாகன சந்தையில் நுழைய முனைப்புடன் திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு பிரபலமான ஆங்கில செய்தித்தாளில் வந்த அறிவிப்பின் படி, இந்த ஃபிரெஞ்சு நிறுவனத்தின் நிதி நிலை தற்போது சற்று செழுமையாக இருப்பதால், (ஃபிரெஞ்சு – சீனர்கள் நிதி உதவி திட்டத்திற்கு பின்), டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறது, என்று தெரிகிறது. இந்த பேச்சு வார்த்தையில், இரு நிறுவனங்களுக்கு இடையே நடக்கவிருக்கும் சாத்தியமான கூட்டு வணிகத்தின் மூலம், வாகன உற்பத்தி, விநியோகம் மற்றும் தொழில்நுட்ப பகிர்வு ஆகிய முக்கிய சங்கதிகளைப் பற்றி பேரப் பேச்சு நடந்து கொண்டிருக்கின்றது.
PSA பியூஜியோட் சிற்றொய்ன் நிறுவனத்தில் உள்ள மேலதிகாரிகள், இந்திய வாகன சந்தையின் முக்கியத்துவத்தை ஐயமின்றி உணர்வதால், டாடா மோட்டார்ஸ் -உடன் தங்களது பேச்சு வார்த்தையை தீவிரமாக மேற்கொள்கின்றனர். PSA கார் தயாரிப்பாளர்கள், தங்களது நிறுவனத்திற்குள் ஒரு பிரத்தியேகமான வணிக பிரிவை, இந்திய-பசிபிக் செயல்பாடுகள் என்ற பெயரில், உருவாக்கி உள்ளனர். மேலும், இந்தியாவில் மீண்டும் நுழைவதற்கான தற்காலிக கால வரிசைகளை (டைம் லைன்) தயாரித்துக் கொண்டிருக்கின்றனர்.
PSA நிறுவனத்தின் இந்திய பசிபிக் ஆபரேஷன் தலைவரான இமானுவேல் டிலே, தற்போது டாடா மோட்டார்ஸுடனான பேச்சு வார்த்தைக்குத் தலைமை வகிக்கிறார். 2007 –ஆம் ஆண்டு ஃபியட் நிறுவனத்துடன் டாடா நிறுவனம் செய்துகொண்ட ஒப்பந்தம் போல, ஒரு புதிய பிரதான ஒப்பந்தத்தை இமானுவேல் டிலேவிடம் இருந்து எதிர்பார்க்கின்றனர். இதில் முக்கியமான செய்தி என்னவென்றால், டாடா நிறுவனத்திற்குரிய, மிகவும் அரிதாக பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் சனந்த் உற்பத்தி ஆலையை PSA பியூஜியோட் சிற்றொய்ன் நிறுவனம் உபயோகப்படுத்தும் என்று தெரிகிறது. இத்தகைய கூட்டு முயற்சியின் மூலம் நடக்கவுள்ள இஞ்ஜின் மற்றும் தொழில்நுட்ப ரீதியான பகிர்வு காரணமாக, இந்த ஃபிரெஞ்சு கார் தயாரிப்பாளர், 208 சிறிய ரக ஹாட்ச் பாக்; 308 செடான் வகை மற்றும் 2008 க்ராஸ் ஓவர் போன்ற கார் ரகங்களை அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா மோட்டார்ஸின் வசதிகளை, ஒரு வெளிநாட்டு நிறுவனமான PSA பியூஜியோட் சிற்றொய்ன் நிறுவனம் பயன்படுத்துவதால், அது மிக பெரிய மூலதனத்தை சேமித்துக் கொள்ள முடியும். மேலும், டாடா நிறுவனமும் அதன் சனந்த் ஆலையை முழுமையாக பயன்படுத்த முடியவில்லை. இதன் முடிவாக, இந்த ஒப்பந்தம் பரஸ்பர வெற்றியை இந்த இரு நிறுவனங்களுக்கும் பெற்றுத்தரும் என்று தெரிகிறது.
0 out of 0 found this helpful