மெர்சிடிஸ்-பென்ஸ் GLE கூபே: ஜனவரி 12 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது
மெர்சிடீஸ் ஜிஎல்இ 2015-2020 க்காக டிசம்பர் 28, 2015 06:17 pm அன்று manish ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதுடெல்லி:
2015 ஆம் ஆண்டு இந்தியாவில் 15 அறிமுகங்களை வெற்றிகரமாக நடத்தி, முதலீடு செய்யப்பட்ட பிறகும், இந்தியாவிற்கான மெர்சிடிஸின் தயாரிப்பின் வரிசை இன்னும் முழுமை அடையவில்லை. இந்தியாவிற்கான இந்த ஜெர்மன் நாட்டு வாகன தயாரிப்பாளரின் கார்களுக்கான குடும்பத்தில் GLE கூபே என்ற மற்றொரு தயாரிப்பை விரைவில் இணைக்க மெர்சிடிஸ்-பென்ஸ் திட்டமிட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டின் விற்பனையில் நிகழ்த்திய சாதனையை குறித்து இந்த கார் தயாரிப்பாளர் விரைவில் அறிவித்து, அதன் SUV கூபேயை 2016 ஜனவரி 12 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளார். ML-கிளாஸை, GLE எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, BMW X6 SUV கூபேயை எதிர்த்து போட்டியிட வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்நிறுவனத்தின் டஸ்கலூசா தொழிற்சாலையில் இருந்து இந்த கார் CBU முறையில் இறக்குமதி செய்யப்பட உள்ளது.
இந்த SUV கூபேயில் ஒரு 3.0-லிட்டர் பை-டர்போ V6 பெட்ரோல் மோட்டாரை கொண்டு ஆற்றலை பெறுவதோடு, AMG விஞ்ஞானிகள் மூலம் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆற்றலகத்தின் மூலம் 362 PS ஆற்றலையும் 520Nm அதிகபட்ச முடுக்குவிசையையும் பெறலாம். BMW X6 அளிக்கும் 630Nm முடுக்குவிசையுடன் ஒப்பிடும் போது, மெர்சிடிஸின் அடுத்துவரும் இந்த தயாரிப்பு, காற்றில் பறக்கும் தூசி போல அமையலாம் என்றே தோன்றுகிறது. எனவே மீதமுள்ள 49PS ஆற்றலும், பற்றாக்குறையான முடுக்குவிசையும், அதன் ட்ரை-ஸ்டார் பிராண்டின் மூலம் ஈடுசெய்யப்படலாம் என்று தெரிகிறது.
இந்த என்ஜினுடன் ஒரு 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு, ஒரு ஆல்-வீல் டிரைவ் தன்மையை கொண்டு, மெர்சிடிஸின் 4மேட்டிக் சிஸ்டத்திற்கு ஒப்பாக அமையும்.