• English
  • Login / Register

மெர்ஸிடிஸ் பென்ஸின் எஸ் 500 க்யுபே, எஸ் 63 ஏஎம்ஜி க்யுபே மற்றும் ஜி 63 ஏஎம்ஜி கிரேஸி கலர் எடிசன் அறிமுகம்

மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி க்காக ஜூலை 31, 2015 07:25 pm அன்று manish ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

ஆடம்பர கார்களின் மறுஉருவமாக உள்ள மெர்ஸிடிஸ் பென்ஸ், தற்போது ஆடம்பரமான ஸ்போர்ட்ஸ் கார் பிரிவின் மீதும் ஆதிக்கம் செலுத்த முயன்று வருகிறது. இந்நிறுவனம் எஸ் 500 க்யுபே, எஸ் 63 ஏஎம்ஜி மற்றும் ஜி63 ஏஎம்ஜி ஆகியவற்றை நம் நாட்டில் இன்று அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இந்திய சந்தையில் எஸ்-கிளாஸ் கவுப் மாடல்கள் வரிசையில் இவை தடம் பதித்துள்ளன. இந்நிறுவனத்தின் மூலம் எஸ்-கிளாஸ் கவுப் – ரூ.2.0 கோடியும், மெர்ஸிடிஸ் ஏஎம்ஜி ஜி63 கிரேஸி கலர் எடிசன் – ரூ.2.17 கோடியும், எஸ்63 ஏஎம்ஜி கவுப் – ரூ.2.60 கோடியும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு 15 மாடல்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற மெர்ஸிடிஸ் நிறுவனத்தின் கணக்கில், இந்த புதிய மாடல்களும் சேர்ந்துள்ளன. மெர்ஸிடிஸ் ஜி63 ஏஎம்ஜியை மேலும் ஒரு புதிய கலர் திட்டத்தின் கீழ், அதாவது “கிரேஸி கலர்” என்ற புனைப்பெயருடன் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது இந்த எஸ்யூவி, கீழே காட்டியுள்ளது போல நியான் கிரீன் போன்ற ‘பளீச்’ கலர்களில் கிடைக்கும் என்பதே இதன் பொருளாகும். ஆனால் இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இருக்காது. எஸ்63 ஏஎம்ஜி கவுப் மற்றும் எஸ்500 கவுப் ஆகியவற்றில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டும் பிளன்ட் மல்டி-ஸ்போக் அலாய் சக்கரங்களை கொண்டுள்ளன.

எஸ் 500 க்யுபே

எஸ் 500 க்யுபே என்பது, எஸ் 500 நான்கு-கதவு குடும்ப கார்களின், இரண்டு கதவுகள் கொண்ட பதிப்பாகும். இந்த கார் 4.7 லிட்டர் வி8 ட்வின்-டர்போ என்ஜினை கொண்டு 453பிஹெச்பி மற்றும் 700 என்எம் டார்க் அளிக்கிறது. சக்தி அளிக்கும் தன்மையில் நான்கு-கதவு பதிப்பை போன்றே உள்ளது. எஸ் 500-ன் பின்புறம் அதிக சாய்வான தன்மையை கொண்டு, உள்ளமைக்கப்பட்ட காற்றை வெளியேற்றும் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த மடிப்புகள் மூலம் வி8ல் உள்ளது போல ஒரு தனித்துவமான ஒரு ஒலியை வெளியேற்றுகிறது. என்ஜின் வேகத்தை பொறுத்து இந்த ஒலி கட்டுப்படுத்தப்படுகிறது. எஸ்500 கவுப், ரெட் பிரேக் காலிபர்கள் உடன் கிடைக்கிறது. மேலும் கார்பன் பைபர் பயன்பாடு மற்றும் செதுக்கப்பட்டது போன்ற வெளிபுற டிசைன் ஆகியவை இந்த காரின் அம்சங்கள் ஆகும்.

எஸ்63 ஏஎம்ஜி

எஸ்63யை பொறுத்த வரை, ஸ்டைலில் எஸ்500யை போன்றே உள்ளது. அதனோடு சில கவரும் உடல் பாகங்களும், ஒரு தடித்த போனட் மற்றும் உட்புற கட்டமைப்பில் கார்பன்-பைபர் டிரிம்கள் ஆகிய அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளது. எஸ்63 ஏஎம்ஜி, க்வாட்-எக்ஸ்ஹஸ்ட் யூனிட்டை பெற்று, பெரிய ஏஎம்ஜி தரத்துடன் இணைந்துள்ளது. பரந்த ஸ்குவாட் ஸ்டென்ஸ் மற்றும் தடித்த சக்கர வளைவுகள் ஆகியவற்றை கொண்டு, ஒரு தடகள தோற்றத்தை இந்த காரில் அதிகமாகவே காண முடிகிறது. எஸ்63 ஏஎம்ஜி சக்கர அடிமட்டம் 2945 மிமீ, நீளம் 5027 மிமீ, அகலம் 1899 மிமீ மற்றும் உயரம் 1411 மிமீ கொண்டுள்ளது. இந்த காரில் 5.5 லிட்டர் வி8 பை-டர்போ என்ஜினை கொண்டு, 7-ஸ்பீடு ஏஎம்ஜி ஸ்பீடுஷிப்ட் டிரான்ஸ்மிஷன் மூலம், 4.2 நொடிகளில் மணிக்கு 0-100 கி.மீட்டரை சென்றடைய வேக முடுக்கம் அளிக்கிறது. இந்த நேரத்தை எஸ்63 ஏஎம்ஜி அடைய பின்சக்கர ஓட்டும் கட்டமைப்பு உதவுகிறது. இந்த காரில் இதே வேக முடுக்கத்தை 3.9 நொடிகளில் பெற 4மேட்டிக் ஆல்-வீல் ட்ரைவ் கட்டமைப்பு தேவைப்படுகிறது. எஸ்63 ஏஎம்ஜி-யில் ஸ்டீல்-அலுமினியம் ஹைபிரிடு உடல் கூடு கொண்டிருப்பதால், எஸ்63 சிடனை விட 90 கிலோ எடை குறைவாக காணப்படுகிறது. இதன்மூலம் வரையறுக்கப்பட்ட எலக்ட்ரானிக் உயர் வேகமான, மணிக்கு 250 கி.மீட்டர்களை அடைய முடிகிறது.

குறிப்புகள்

எஸ் 500 க்யுபே:

  • என்ஜின்: 4,663சிசி வி8, பை-டர்போ
  • குதிரை சக்தி: 455 ஹெச்பி
  • டார்க்: 700 என்எம்
  • கியர் பாக்ஸ்: 7ஜி-ட்ரோனிக் பிளஸ் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
  • விலை: ரூ.2.0 கோடி (எக்ஸ்-ஷோரூம் புதுடில்லி)

எஸ் 63 ஏஎம்ஜி :

  • என்ஜின்: 5,461 சிசி வி8, பை-டர்போ
  • குதிரை சக்தி: 585 ஹெச்பி
  • டார்க்: 900 என்எம்
  • கியர் பாக்ஸ்: ஏஎம்ஜி ஸ்பீடுஷிப்ட் எம்சிடி 7-ஸ்பீடு ஸ்போர்ட்ஸ் டிரான்ஸ்மிஷன்
  • விலை: ரூ.2.60 கோடி (எக்ஸ்-ஷோரூம் புதுடில்லி)

ஜி63 ஏஎம்ஜி:

  • என்ஜின்: 603 ஹெச்பி வி8, ட்வின்-டர்போ சார்ஜ்டு மற்றும் இன்டர்கூல்டு எஸ்ஒஹெச்சி 36-வால்வு வி-12
  • குதிரை சக்தி: 603 ஹெச்பி
  • டார்க்: 1000 என்எம்
  • கியர் பாக்ஸ்: மெனுவல் ஷிப்ட்டிங் மோடு உடன் கூடிய 7-ஸ்பீடு ஆட்டோமெட்டிக்
  • விலை: ரூ.2.17 கோடி (எக்ஸ்-ஷோரூம் புதுடில்லி)
was this article helpful ?

Write your Comment on Mercedes-Benz AMG ஜிடி

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் கான்வெர்டிப்ளே சார்ஸ்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience