• English
  • Login / Register

இந்தியாவில் Mercedes Benz EQG காருக்கான முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது!

published on ஜூலை 09, 2024 06:58 pm by samarth for மெர்சிடீஸ் eqg

  • 39 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஆல்-எலக்ட்ரிக் ஜி-வேகன் 4 எலக்ட்ரிக் மோட்டார்கள் (ஒவ்வொரு வீலுக்கும் ஒன்று) கொண்ட ஆல்-வீல் டிரைவ் (AWD) செட்டப்பை கொண்டுள்ளது.

Mercedes Benz EQG Bookings Open

  • மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் G-கிளாஸ் எஸ்யூவி -யின் எலக்ட்ரிக் பதிப்பிற்கான முன்பதிவை தொடங்கியுள்ளது.

  • இது இந்த ஆண்டு மெர்சிடிஸ் EQG என்ற பெயரில் அறிமுகமானது. பின்னர் EQ தொழில்நுட்பத்துடன் G 580 என பெயர் மாற்றப்பட்டது. 

  • G-Wagon இன் எலக்ட்ரிக் பதிப்பானது ICE பதிப்பைப் போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளது. சில EV-க்கென செய்யப்பட்ட சில மாற்றங்களில் குளோஸ்டு கிரில் மற்றும் புதிய வடிவிலான பம்பர்கள் ஆகியவை இருக்கும். 

  • பாதுகாப்புக்காக மல்டி ஏர்பேக்ஸ், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.

  • 116 kWh பேட்டரி பேக் இந்த காரில் உள்ளது. 4 மோட்டார்கள் 587 PS அவுட்புட்டை கொடுக்கிறன. மற்றும் 473 கிமீ (WLTP) வரை கிளைம்டு வரம்பை வழங்குகிறது.

  • விலை ரூ. 3 கோடி (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் மெர்சிடிஸ் EQG காரை நாளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இது விற்பனைக்கு வரும் அதற்கு முன்னதாக இப்போது அதற்கான முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. EQG என்பது G-கிளாஸ் எஸ்யூவி -யின் ஆல்-எலக்ட்ரிக் பதிப்பாகும். இது 2024 ஏப்ரலில் உலகளவில் வெளியிடப்பட்டது. வரவிருக்கும் எலக்ட்ரிக் எஸ்யூவியை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.

வெளிப்புறம்

எலக்ட்ரிக் ஜி-வேகன் கான்செப்ட் பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் அறிமுகமானபோது அதற்கு ஆரம்பத்தில் EQG என்று பெயரிடப்பட்டது. இருப்பினும் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் பின்னர் அதை G 580 என EQG தொழில்நுட்பத்துடன் காரின் பெயரை மாற்றியமைத்தது. அது அதன் உலகளாவிய சந்தைக்கு தயாராக இருந்தது. 

Mercedes-Benz EQG (G 580)
Mercedes-Benz EQG (G 580) 20-inch black alloy wheels

எலெக்ட்ரிக் ஜி-வேகன் வழக்கமான மாடலில் காணப்படுவது போன்ற பிரபலமான பாக்ஸி வடிவம், வட்ட வடிவ LED DRL -கள் மற்றும் LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள் ஆகியவற்றைத் அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதே சமயம் இது ஒரு சில EV-குறிப்பிட்ட மாற்றங்களைப் பெறுகிறது, அதைச் சுற்றி இல்லுமினேஷன் உடன் கூடிய மூடிய குளோஸ்டு முன் கிரில் மற்றும் பம்பர் வடிவமைப்பு மாற்றம் செய்யபட்டுள்ளது. இது 20-இன்ச் அலாய் வீல்கள் ( AMG விவரக்குறிப்பில்) மற்றும் சார்ஜரை சேமிப்பதற்கான டெயில்கேட்டில் பொருத்தப்பட்ட புதிய பெட்டியையும் பெறுகிறது. ஸ்டாண்டர்டான ஜி-வேகனில் உள்ள ஸ்பேர் சக்கரம் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

உட்புறம் மற்றும் வசதிகள்

Mercedes-Benz EQG (G 580) cabin

உள்ளே EV பதிப்பு நவீன மற்றும் வழக்கமான விஷயங்களின் கலவையாக உள்ளது. இது டச் ஹாப்டிக் கன்ட்ரோல்களுடன் கூடிய மல்டி-ஃபங்க்ஷன் ஸ்டீயரிங் வீலுடன் பிளாக் தீம் கொண்ட கேபின் மற்றும் ஏசி வென்ட்களுக்கான ஸ்போர்ட்ஸ் ஸ்கொயர்-ஆஃப் ஹவுசிங்ஸ் ஆகியவற்றைப் கொண்டுள்ளது. இது டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (டச் ஸ்கிரீன்களின் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷன்), வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் ஆக்மென்டட் ரியாலிட்டி அடிப்படையிலான ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD) ஆகியவற்றைப் பெறுகிறது. 

பாதுகாப்புக்காக இது மல்டி ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ட்ராஃபிக் சைன் அசிஸ்ட் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) லேன்-கீப் அசிஸ்ட், அட்டானமஸ்-எமர்ஜென்ஸி பிரேக்கிங் (AEB) மற்றும் டிரைவர் அட்டென்டிவ்னெஸ் வார்னிங் உள்ளிட்ட வசதிகளை பெறுகிறது. 

பவர்டிரெய்ன் மற்றும் சார்ஜிங்

Mercedes-Benz EQG (G 580) rear

அனைத்து-எலக்ட்ரிக் ஜி-வேகனின் பவர்டிரெய்ன் விவரங்கள் இங்கே:

விவரங்கள்

மெர்சிடிஸ்-பென்ஸ் G 580

பேட்டரி பேக்

116 kWh (பயன்படுத்தக்கூடியது)

WLTP கிளைம்டு ரேஞ்ச்

473 கி.மீ வரை

எலக்ட்ரிக் மோட்டார்கள்

4 (ஒரு சக்கரத்திற்கு ஒன்று)

சக்தி (ஒருங்கிணைந்த நிலையில்)

587 PS

டார்க் (ஒருங்கிணைந்த நிலையில்)

1164 Nm

டிரைவ்டிரெய்ன்

4WD

மேலும் படிக்க: மெர்சிடிஸ்-பென்ஸ் EQA ரூ 66 லட்சத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது

இது பல டிரைவ் முறைகளையும் பெறுகிறது: கம்ஃபோர்ட், ஸ்போர்ட் மற்றும் இன்டிவிஜுவல் மற்றும் டிரெயில் மற்றும் ராக் என இரண்டு ஆஃப்-ரோடு மோட்கள் இதில் உள்ளன. இது 200 கிலோவாட் வரை ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்கிறது. இதன் மூலமாக சுமார் 32 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். இதன் பெரிய பேட்டரியை 11 கிலோவாட் ஏசி சார்ஜர் மூலமாகவும், வீட்டில் இருக்கும் போது ​ஒரே இரவிலும் ரீசார்ஜ் செய்ய முடியும்.

விலை மற்றும் போட்டியாளர்கள்

மெர்சிடிஸ்-பென்ஸ் காரின் விலை 3 கோடி ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சிடிஸ்-பென்ஸ் G-கிளாஸ் மற்றும் லேண்ட் ரோவர் டிஃபென்டர் போன்றவற்றுக்கு எலக்ட்ரிக் மாற்றாக இது இருக்கும்.

லேட்டஸ்ட் ஆட்டோமோட்டிவ் அப்டேட்டுகளுக்கு கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Mercedes-Benz eqg

Read Full News

explore மேலும் on மெர்சிடீஸ் eqg

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • ஸ்கோடா enyaq iv
    ஸ்கோடா enyaq iv
    Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • வோல்க்ஸ்வேகன் id.4
    வோல்க்ஸ்வேகன் id.4
    Rs.65 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • வோல்வோ ex90
    வோல்வோ ex90
    Rs.1.50 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • மஹிந்திரா எக்ஸ்யூவி இ8
    மஹிந்திரா எக்ஸ்யூவி இ8
    Rs.35 - 40 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • மஹிந்திரா பிஇ 09
    மஹிந்திரா பிஇ 09
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
×
We need your சிட்டி to customize your experience