மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா AMG GT S கார்கள் ரூ. 2.4 கோடிக்கு இன்று அறிமுகப்படுதப்பட்டது
மெர்சிடீஸ் ஏஎம்ஜி ஜிடி க்காக நவ 24, 2015 01:52 pm அன்று konark ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
டெல்லி : மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் தனது பிரபலமான மாடலான AMG GT S கார்களை இந்தியாவில் இன்று ரூ. 2.4 கோடிக்கு அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே இந்த வருடத்தில் 4 AMG வரிசை கார்கள் இந்தியாவில் அறிமுகபடுத்தப்பட்டுள்ளன. SLS AMG கார்களுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்படும் இந்த சூப்பர் கார், 650 NM டார்கையும் , அசாத்தியமான 510 PS சக்தியையும் வெளியிடவில்ல முற்றிலும் புதிய 4.0 லிட்டர், இரட்டை டர்போ V8 என்ஜின் மூலம் சக்தியூட்டப்பட உள்ளது. இந்த கார்கள் முழுவதுமாக மெர்சிடீஸ் நிறுவனத்தின் AMG பிரிவில் உருவாக்கப்பட்டுள்ளது.
இரட்டை க்ளட்ச் யூனிட் உடன் கூடிய AMG ட்யூன் செய்த ஏழு - வேக கியர் மாற்று அமைப்பு என்ஜின் உற்பத்தி செய்யும் அசாத்திய சக்தியை பின் சக்கரங்களுக்கு கடத்துகிறது. SLS மாடலில் உள்ளது போன்ற கல் - விங் கதவுகள் இந்த AMG GT S கார்களில் இல்லை என்பதும் எமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு என்ஜின் அளவும் சற்று குறைக்கப்பட்டிருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த நெருப்பை உண்ணும் வீரன் இரட்டை - விஷ்போன் சஸ்பென்ஷன் அமைப்பு முழுதும் கொடுக்கப்பட்டு முற்றிலும் புதிய அலுமினியம் கொண்டு தயாரிக்கப்பட்ட ப்ரேம்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டேம்பிங் வசதியும் அனைத்து வெர்ஷன்களிலும் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது. நீளமான மூக்கு பகுதியும் , குறுகலான அமரும் காக்பிட் பகுதியும் இந்த கார்களுக்கு வித்தியாசமான அழகை தருகிறது. உட்புறத்தில் இந்த AMG GT S கார்கள் ஒரு ஜெட் போர் விமானத்தைப் போன்று ஏராளமான தொழில்நுட்ப பொத்தான்களையும் , நிறைய அலுமினிய ட்ரிம்களையும் கொண்டுள்ளது.
இவை தவிர , இந்த காரை அதிக திறத்துடன் சட்டென நிறுத்தும் பொருட்டு செராமிக் ப்ரேக் அமைப்பு, போர்ஜ்ட் சக்கரங்கள் , ட்ரை சம்ப லுப்ரிகேஷன் , மற்றும் எளிதாக கையாள்வதற்கு ஏற்ற வகையில் அட்ஜஸ்ட் செய்துகொள்ள கூடிய என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு போன்ற சிறப்பம்சங்களையும் இந்த புதிய AMG GT S கார்களில் காண முடிகிறது.
இந்த கார் அதிகபட்சமாக மணிக்கு 310 கி.மீ வேகத்தில் சீறி பாயும் திறன் பெற்றது. மேலும் இந்த கார் 0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 3.7 நொடிகளில் தொட்டு விடுகிறது என்பது இங்கே கவனிக்கத்தக்கதாகும். அசாத்தியமான வேகத்திறன் மட்டுமல்ல, பார்வைக்கும் மிக அழகான தோற்றத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த சூப்பர் கார்.
ஜெர்மன் கார் தயாரிப்பாளர்களான மெர்சிடீஸ் நிறுவனம் இந்த 2015 ஆம் வருடத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ள 14 ஆவது கார் இந்த AMG GT S கார்களாகும்.இந்த கார்கள் போர்ஷ் 911 டர்போ S, ஆடி R8 V10 மற்றும் ஜேகுவார் F - டைப் R கூபே கார்களுடன் நமது இந்திய சந்தையில் போட்டியிடும்.
இதையும் படியுங்கள்