மெர்சிடிஸ் நிறுவனம் GLC உற்பத்தியை சீனாவில் தொடங்கியது

மெர்சிடீஸ் ஜிஎல்-கிளாஸ் க்கு modified on nov 02, 2015 02:53 pm by raunak

  • 6 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

உலகளவில், GLK மாடலுக்கு மாற்றாக புதிய GLC ரக SUV –யை பற்றிய அறிவிப்பை கடந்த ஜூன் மாதத்தில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த ஜெர்மன் கார் உற்பத்தியாளர், தனது புதிய SUV –இன் தயாரிப்பை சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் ஆரம்பித்துள்ளது. சீனாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த புதிய ஆலை, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சொந்த நாடான ஜெர்மனியில் உள்ள பிரமாண்டமான பிரேமேன் தயாரிப்பு ஆலைக்குப் பின் ஆரம்பிக்கப்பட்டுள்ள, இந்நிறுவனத்தின் இரண்டாவது ஆலையாகும். இந்தியாவில் இந்த கார் அறிமுகப்படுத்தப்படுமா என்ற கேள்வி நமக்கு எழுவது இயற்கையே. மெர்சிடிஸ் பென்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், இந்த மாடல் அடுத்த வருடத்தில் இந்தியாவில் வெளிவரும் என்று தெரிகிறது. இந்த தாமதத்திற்கு காரணம், மாற்றியமைக்கப்பட உள்ள GLK மாடல் லெஃப்ட் ஹேண்ட் ட்ரைவ் அமைப்பில் வந்தது. ஆனால், GLC வகையில் ரைட் ஹேண்ட் ட்ரைவ் வசதியும் இணைக்கப்பட்டுவிடும். இது நிச்சயம் திகட்டாத மகிழ்ச்சி தரும் செய்தி.

சிபாரிசு செய்யப்படுகிறது: மெர்சிடிஸ் பென்ஸ் GLE SUV ரூ. 58.9 லட்சம் என்ற விலையில் அறிமுகம்

GLC –யின் உற்பத்தி மெர்சிடிஸ் பென்ஸ்ஸின் முன்னணி ஆலையான பிரேமென்னில் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, பெய்ஜிங்கில் உள்ள இரண்டாவது தயாரிப்பு ஆலையிலும் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. “எங்களது இளக்கமான உற்பத்தி முறை மற்றும் திறமையான தயாரிப்பு நெட்வொர்க்கின் மிக உயர்ந்த தரத்தையும் நவீன உற்பத்தி தரத்தையும், எந்த விதத்திலும் தியாகம் செய்யாமல், இந்த புதிய ஆலையில் உள்ள அசெம்ப்ளி வசதிகள் நிறைவு செய்யும். உலகம் முழுவதிலும் வரும் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் அனைத்தும், எங்கள் நிறுவனத்தின் வழக்கமான உயர்ந்த தரத்துடன் வரும் என்று உறுதி கூறுகிறோம், “ என்று மெர்சிடிஸ் பென்ஸ் கார் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் சப்ளை சைன் மானேஜ்மென்ட்டின் டிவிஷனல் போர்டு மெம்பரான திரு. மார்க்கஸ் சாஃபர் கூறினார்.

மெக்கானிக்கள் சிறப்பம்ஸங்களைப் பார்த்தால், இந்த காரில் வழக்கமான மெர்சிடிஸ் பென்ஸ்ஸின் நிரந்தரமான 4MATIC ஆல்-வீல் ட்ரைவ் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இஞ்ஜின் ஆப்ஷன்ஸ் பற்றி பேசும்போது, இரண்டு விதமான டீசல் இஞ்ஜின்கள், ஒரு பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் ஒரு ஹைபிரிட் மாடலும் இந்த காரில் வருகிறது. வாடிக்கையாளர்கள் தங்களின் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். இந்தியாவில் அறிமுகப்படுத்தும் போது, இங்கே உள்ள ஆடி Q5, BMW X3 மற்றும் வோல்வோ XC 60 போன்ற கார்களுடன் போட்டி களத்தில் இறங்கிவிடும்.

மேலும் வாசிக்க:

மேலும் வாசித்து தெரிந்து கொள்ள: மெர்சிடிஸ் பென்ஸ் GL கிளாஸ்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மெர்சிடீஸ் ஜிஎல்-கிளாஸ்

Read Full News

trendingஇவிடே எஸ்யூவி

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பாப்புலர்
×
We need your சிட்டி to customize your experience