மஹிந்திரா XUV 500 ஆட்டோமேடிக் ரூ. 15. 36 லட்சங்களுக்கு அறிமுகம்

published on நவ 25, 2015 02:40 pm by cardekho for மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர் :

க்ரேடா டீசல் ஆட்டோமேடிக் வேரியன்ட்களுக்கு கிடைத்துள்ள வெற்றியை பார்த்து மஹிந்திரா நிறுவனம் தனது XUV வாகனத்தின் ஆட்டோமேடிக் வேரியன்ட் ஒன்றை இன்று அறிமுகம் செய்துள்ளது. ஸ்கார்பியோ கார்களில் இந்த வருட துவக்கத்தில் பொருத்தப்பட்ட அதே 6 - வேக ஆட்டோமேடிக் யூநிட் இந்த XUV 500 வாகனங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் வசதி W8, W10  மற்றும் W10 AWD வேரியன்ட்களில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஆடோமேடிக் மாடலின் விலை 15.36 லட்சங்கள் ( எக்ஸ் - ஷோரூம் , நாவி மும்பை ) ஆகும்.

இன்ஜினைப் பொறுத்தவரை 140 bhp  சக்தி  மற்றும் அதிகபட்சமாக  330 Nm  அளவு  டார்கையும் உற்பத்தி செய்யும் அதே  2.2 -லிட்டர் டீசல் மோட்டார் தான் இந்த புதிய  XUV மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது . நாம் மேலே  சொன்னது போல், ஆட்டோமேடிக் ட்ரேன்ஸ்மிஷன் அமைப்பானது , ஸ்கார்பியோவில் பயன்படுத்தப்பட்டு வரும் அதே 6- வேக யூனிட் தான் இந்த XUV 500 வாகனங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. இதைத் தவிர 6 - வேக மேனுவல் ( கைகளால் மாற்றக் கூடிய ) அமைப்பும் எல்லா மாடல்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மேம்படுத்தப்பட்ட இந்த XUV 500 வெர்ஷன் ஒன்றை இந்த இந்த வருட துவக்கத்தில் மஹிந்திரா அறிமுகம் செய்தது. அந்த மேம்படுத்தப்பட்ட வெர்ஷனில் உட்புற மற்றும் வெளிப்புற மாற்றங்கள் செய்யப்பட்டிருந்த போதும் என்ஜின் சம்மந்தமான மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை. புஷ் பட்டன் ஸ்டார்ட் , மின்சாரத்தில் இயங்கும் சன் ரூப், 7 - அங்குல தொடுதிரை இந்போடைன்மென்ட் அமைப்பு , 6 – வே பவர் ஓட்டுனர் இருக்கை, லோகோ படுள் விளக்குகள் , பார்க் அசிஸ்ட் உடன் கூடிய ரிவர்ஸ் கேமரா போன்ற அம்சங்கள் இந்த வருட துவக்கத்தில் வெளியான மேம்படுத்தப்பட்ட XUV 500 வாகனங்களில் இருந்தது.

பரிந்துரைக்கப்படுகிறது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience